பக்கங்கள்

திங்கள், 7 மார்ச், 2011

அன்பே!


என் வீட்டில் இறால் திருடி
இங்கு வந்து செரிக்க வைக்க
குந்தியிருக்கும் காகம் மறைத்து
கும்பிட்டு நிமிர்ந்து பார்த்தேன்
புத்தன் சிலையோ புன்னகைக்க
போதனையோ என்ன விலை ?

நான் இறந்து போய்விட்டால்
நாதியற்று புதைக்காவிட்டால்
காகம்தானே கடித்து உண்டு
கடமையினால் சடங்கை முடிக்க
கடவுளாக காகம் பார்த்தேன்
கால மதத்தினில் என்னுடல்
மாமிசம் மட்டுமே யோசித்தேன்!
மாமிசம் மட்டுமே யோசித்தேன்!

சனி, 5 மார்ச், 2011

சுஜிதாவிற்கு வாழ்த்துக்கள் !


இருகண்கள் கனவு காண
இருள் எழுதிய இயற்கை தேர்வில்
பத்து விரலோ படிப்பை பார்க்க
பகுத்தறிவில் வெற்றியை உணர்ந்து
திறமையோ தீயை பிடிக்க
தீட்டினால் விலகிய இருளில்
மை மட்டும் மனதினால் எடுத்து
மாற்றத்தை சாதனையில் துவைத்து
இந்திய ஆட்சி பணித்துறையில்
இமாயலய பெருமையாய் உயர்கிறாய் !
உலகத்தை நீ பார்க்க வேண்டாம் ?
உன்னைத்தான் உலகம் பார்க்க வேண்டும் !
தன் தாய் கூறிய சொற்கள்,
தவறாமல் நிகழ்த்திய அருமையாய் !
கல்விக்கும் கண்தானம் படைத்தாய் !
காணட்டும் வரலாறு இது போல்