பக்கங்கள்

திங்கள், 7 மார்ச், 2011

அன்பே!


என் வீட்டில் இறால் திருடி
இங்கு வந்து செரிக்க வைக்க
குந்தியிருக்கும் காகம் மறைத்து
கும்பிட்டு நிமிர்ந்து பார்த்தேன்
புத்தன் சிலையோ புன்னகைக்க
போதனையோ என்ன விலை ?

நான் இறந்து போய்விட்டால்
நாதியற்று புதைக்காவிட்டால்
காகம்தானே கடித்து உண்டு
கடமையினால் சடங்கை முடிக்க
கடவுளாக காகம் பார்த்தேன்
கால மதத்தினில் என்னுடல்
மாமிசம் மட்டுமே யோசித்தேன்!
மாமிசம் மட்டுமே யோசித்தேன்!

சனி, 5 மார்ச், 2011

சுஜிதாவிற்கு வாழ்த்துக்கள் !


இருகண்கள் கனவு காண
இருள் எழுதிய இயற்கை தேர்வில்
பத்து விரலோ படிப்பை பார்க்க
பகுத்தறிவில் வெற்றியை உணர்ந்து
திறமையோ தீயை பிடிக்க
தீட்டினால் விலகிய இருளில்
மை மட்டும் மனதினால் எடுத்து
மாற்றத்தை சாதனையில் துவைத்து
இந்திய ஆட்சி பணித்துறையில்
இமாயலய பெருமையாய் உயர்கிறாய் !
உலகத்தை நீ பார்க்க வேண்டாம் ?
உன்னைத்தான் உலகம் பார்க்க வேண்டும் !
தன் தாய் கூறிய சொற்கள்,
தவறாமல் நிகழ்த்திய அருமையாய் !
கல்விக்கும் கண்தானம் படைத்தாய் !
காணட்டும் வரலாறு இது போல்

சனி, 5 பிப்ரவரி, 2011

தணியாத தாகம்


மனிதரின் கண்களில் ஊ(ற்)றி போனதால்
மாற்றத்தை ஆட்டுக்கு யார் புரிய வைப்பார் 

வெள்ளி, 28 ஜனவரி, 2011

இருகண்ணிலும் இரவின் விழிகள் அழி


மண்ணிற்கு கண்கள் வைப்போம்
மரணத்தில் கொண்டு வைப்போம் முடிந்தால்
மனிதர்க்கு மிச்சம் வைப்போம்
மாற்றம் இன்று கண்டுவைப்போம்

கண்தானம் செய்யலாமா ?


கனவிற்கு கண்கள் தேவையில்லை
கனலுக்கும் கண்கள் தேவையில்லை 

மணலெடுத்து முகம் கழுவினேன் மாற்றத்தில் காதல்


ஆற்றின் கரைகளில் யார் நான்தானடி
அடங்கா நீர் பெருக்காய் அலைவது இதுதானடி

காற்றின் தனிமையடி காதலும் தென்றலும்
காதோரம் பேசுவது ஞாபகத்தின் இனிமையடி

கொக்குவொன்று குறிபார்க்கும் குளமாக மனமாக
சிக்குவேன்று சிக்கிக்கொள்ளும் சாக துடிக்கும் மீனாக

நாரையும் சூரியனும் நாட்களுக்கு உயருதடி
நரையும் நானும் காதலுக்கு குறைச்சலாடி

தாவணியில்லாமல் தள்ளாடும் உன் கைதடியில்
ஆரணி வெள்ளமாய் அடங்கிப்போன மணலடியில்

சேரடியில்லாமல் பித்தவெடி உன் காலடியில்
சேர்ந்து கிடந்தது எனக்கு மாறித்தான் போகுமா

அப்போது காதலிலே ஆசைகளும் பலவுண்டு
ஆறுக்கு நீருண்டு அதைப்போல நீயுண்டு

கரைகளும் இரண்டுண்டு நம் கல்யாணம் போல் சேர்ந்ததுண்டு
கறையில்லா உள்ளம் வெல்லம் கற்கண்டில் தோற்பதுண்டு

நீயெனக்கு குழந்தையடி நினைவிருக்கா நாம் குழந்தையடி
நிச்சயம் நமக்கு புரியும்படி நீ பெற்றெடுத்தாய் நம்
குழந்தையடி

நீருக்குள்ளே மீன்குஞ்சும் நீ பெற்றெடுத்த நம் பிஞ்சும்
ஊற்றுகுள்ளே ஓயாது போலே  பாசத்தால் ஓடி நீயுதடி

பாரெல்லாம் கேட்குது கேள்வி பாடடி நம் பதிலை
நீரெல்லாம் மீன் குஞ்சு நீத்த நிறையத்தான் கற்றுகொடுக்க

அம்மா மீனும் அப்பா மீனும் ஆலோசனை கேட்டது நம்மை
சும்மாயில்லை சுவர்க்கம் வரை நீந்தி சொல்லிதந்தோம்  பாசத்தில் நீதி

தூண்டினில் சிக்கியது வயது தொலைத்து எத்துனை இன்பம்
தூளியில் தவிக்குது பழசு துணிச்சலாய் இருக்க நாம் பெரிசு

வலைகளில் வீசும் வாழ்க்கை வாரித்தான் போகுது நிலையை
அலைகளில் பேசும் கரையும் ஆழத்தில் மௌனத்தில் உறைய

கண்களும் கரையாய் மாறும் கண்ணீரும் ஆறாய் ஓடும்
காலம் மட்டும் மணலாய் மாற கைகளும் காதலை ஏந்தும்

முகம் கழுவ முதுமையும் தாங்கும் மூச்சுக்கு புதுமைதான் ஏங்கும்

நீ மட்டும் புதுமைதான் என்றும் நில்லாமல் நீயெனக்கு தொடர்பிறவி
தீமூட்டும் மணற்கொள்ளை கூட்டம் திருந்தாமல் பிரிக்குது நாணல் நம்மை


வியாழன், 27 ஜனவரி, 2011

புயாவின்* பிரிவு


கண்விழிக்காமல் தூக்கிவந்து
கதகதப்பாய் கோணியிட்டு
பசும்பாலை வயிறு முட்ட
பருக வைத்தேன் நீ வளர

கண்விழித்தால் முதல் தாயாய்
கண்டு வைத்தாய் என்னை மட்டும்
காலோடு தோள் ஏறி ஏணியாய்
காதோடு சேட்டை செய்தாய்

நாற்பது நாளில் விளையாடினாய்
நாங்கள் மறைந்தால் குரைத்து அழுதாய்
வெளிபட்டால் விரட்டி வந்தாய்
வீட்டு காவலில் மிரட்டி வைத்தாய்

எலி வலைகள் மோப்பமிட்டாய்
எதிரி தலைகள் விழ  குழி பறித்தாய்
மணி கட்டியே மாட்டை முடிக்கினாய்
மாமிசம் என்றே எத்தனை அடக்கினாய்

முள்ளு வேலியாய் காத்திருந்தாய்
எள்ளு சங்காயம் பொறுக்கிவந்தாய்
வேலை அத்தனைக்கும் போட்டி போட்டாய்
வினோத பாசத்தில் வெற்றி பெற்றாய்

பாம்பு ஒன்றை பார்த்துவிட்டாய்
பதறி பதறி ஊரை கூட்டினாய்
கம்பு கொண்டு அதை அடித்த ஊரார்கள்
கைதட்டினர் உன் கருணை கண்களுக்கு

சந்தைக்கு செல்ல ஊருக்கு போனேன்
சந்தடியில்லாமல் பின் தொடர்ந்தாய்
தெரு நாயெல்லாம் உன்னை விரட்டியே
தேட வைத்தன தன் உயிரையே

அத்துணை முறையும் வென்றுவிட்டாய்
அடங்கா பசிக்கு நான் தோற்று விட்டேன்
வாயும் நுரையுமாய் வழியில் நின்றாய்
வழி தவறி நானோ எங்கோ சென்றேன்

*புயா( பிறமொழிச்சொல் ): முதலை,
இங்கு செல்ல நாய் குட்டி  பெயரில்

புகை பிடித்தலும் கொள்ளியும்


தாய்க்கு தலைபிள்ளை
தகப்பனுக்கு கடைபிள்ளை
இளைஞன் எனக்கு வாய்பிள்ளை 

செவ்வாய், 25 ஜனவரி, 2011

பொங்கல் செலவுகள் புதுபடங்கள் !


ஆடுகளம் பார்க்கலாம்
ஆர்வமாய் புறப்பட்டேன்

சிறுத்தை கடியில்
சிரிக்கும் கூட்டம்

பார்த்திருக்கும் காவலனும்
பாதுகாப்பாய்  அழுதுவைக்க

இளைஞன் நானோ
மூட்டைபூச்சி கடியில்

இறக்கவில்லை
இலவச பொங்கல் பையால்

மரண வாழ்த்துக்கள் !


தமிழனாய் வாழ்வதை விட
தற்கொலையில் சாகலாம்
சிங்களவனாய் மாற முடியும்
செத்து போக  காரணம்


மறுபிறவி இலங்கையிலும்
மகிந்தாவின் காலடியிலும்
வளர்வது இந்திய உதவியில்
வாழ்த்துவார்கள் தமிழக  தலைவர்கள்

சனி, 22 ஜனவரி, 2011

காவலனுக்கு டிக்கட் (அனுமதி சீட்டு) கிடைக்கவில்லை


காவலனுக்கு காதல்
கற்பு நெறி தமிழச்சிக்கு
கண் கொடுத்ததால்
இலங்கையில்

காசோடு அசினும் பலரும்
கவலையோடு நான் 

ஆறு மாதத்திலிருந்தே ஆங்கிலம் கற்கலாம்


மம்மி* என்று கத்தவில்லையாம்
மனக்குமுறளில் தமிழ்த்தாய்

* பிறமொழிச்சொல்

வியாழன், 13 ஜனவரி, 2011

நாலு நாளும் பொங்கல் நன்மை என்றும் தங்க சீரும் சிறப்பாய் வாழ்த்தி சேர்வோம் சேர்வோம் வாருங்கள் !

பழையது குப்பைகள்
பனியையும் விரட்டியே
குளிரையும் நெருப்போடு
கொளுத்தி நாம் போட்டுதான்

சாமியென  சாணி கொண்டு
சடங்கென அருகம் புல் செருகி
அதிகாலை சூரியன் வந்து
அன்புடனே காய வைக்கும்

எறும்புக்கும் கோலமிட்டு
இப்பூமிக்கு பூவைத்து
கரும்புக்கு வெட்டி வைத்து
கனிகளையும் கொட்டி வைப்போம்

புத்தரிசி புதுப்பானை
பொங்கிவரும் புது பாலும்
இட்டுவைத்து ஏலமென
எட்டுத்திக்கும் மணக்க வைப்போம்

ஆவாரம் பூபறித்து
அழகான மாலை கட்டி
கழுத்திலிடும் காளைக்கும்
கனிவுமிக்க பசுக்களுக்கும்

குதித்து வரும் கன்றுக்கும்
கும்பிடுவோம் பொங்கலிட்டு
மதித்திடுவோம் மண்ணில் உள்ள
மற்ற உயிர்களையும் வழிபடுவோம்

பூதைத்து சடையெல்லாம்
புன்னகைத்த முகத்தெல்லாம்
வாழ்க்கைக்காக சாதித்ததை
வட்டமாக கும்மியடித்து

உரியடிக்கும் சிறுவர் கூட்டம்
ஓடிபிடிக்கும் வெற்றி கூட்டம்
மாடு பிடிக்கும் வீரர் கூட்டம்
மணமுடிக்கும் பெண்கள் கூட்டம்

நான்குநாளும் களித்திடவே
நான் காணும் பொங்கலிலே
இனிப்போடு என்றென்றும்
இன்பமோடு வாழட்டும்

தமிழர்களின் பொங்கல் வாழ்த்துக்கள்!

மண்ணெடுத்து பானை செய்து 
மறக்காமல் தட்டி பாருங்கள் 
மாவீரன் இரத்தமெல்லாம் 
மறக்காமல் சிவந்ததனால் 

ஊறிய மண் என்பதால் 
உரமாய் தரமாய் சத்தமாய் 
சொல்லிய சொல்லில் ஈழமாய் 
சுதந்திர பொங்கலில் வீரமாய் 

பொங்குவோம் பொங்குவோம் 
புது பொங்கலில், இந்த பொங்கலில் 

கரும்புடன் வாழையாய் கலந்து நாம் 
கதிருடன் விளைச்சலாய் முதிர்ந்து நாம் 
மஞ்சளிலும் இஞ்சியிலும் மறைந்து நாம் 
மா பசு காளையிலும் சேர்ந்து நாம் 

பொறுத்தது பூமியில் எதற்கென 
புரியுமே காலத்தில் நடக்குமென 
கும்மிகள் கொட்டித்தான் பாட்டிசைத்து 
கொண்டாடுங்கள் என்றுமே மகிழ்கின்றோம் 


செவ்வாய், 11 ஜனவரி, 2011

தை பிறக்கும் சேதி பிறக்குமா ?

உசுமானிய மாணவர்களை பார்த்ததனால்
உள்ளுக்குள் உரைத்ததை சொல்லுகின்றேன்
ஒற்றுமையை சீர்குலைக்க எண்ணமில்லை

தமிழுக்கு யார் என்ன செய்தார் அதனால்
தவிப்பாய் கேட்கிறேன் மன்னியுங்கள்


கிறித்துவுக்கு பின் கி.பி
கிழைமைக்கு பின் மாதம்
பழமைகெல்லாம் சித்திரை
பைத்தியம் கொண்டதாம் தையாய்

தை பிறந்தால் வழி பிறக்கும்
தமிழ் மாதம் பிறந்தால்
தனி நாட்காட்டி கிழிக்கும்

அரசாங்க ஆணையில்லை
ஆணவத்தின் தலைவனென
ஈனத்தின் வரலாறுயென

மானமின்றி செத்தாலும்
மறக்க கூடாது தன்பெயரை
இரகசியத்தின் இராட்சசன்
இரட்சித்தார் தமிழுக்கு

காசுக்கு ஓட்டு வாங்கி
கவிதைக்கு நாட்டை வாங்கி
பஞ்சங்கத்தின் இராகுகாலம்
பாடாய் படுத்துகின்றதே

எமகண்டம் எனக்கிருக்கு
இக்கவிதை எழுதியதால்
எழவுக்கு வருவோர்கள்
என்னத்தான் சொல்வார்களோ ?

பட்டுகோட்டை செத்துவிட்டான்
பாரதியும் செத்துவிட்டான்
பைத்தியம் என்னை கொன்றுவிட்டு
பழிதிடுங்கள் தமிழ் மொழியை !

பஞ்சாங்கத்தில் பார்த்திடுங்கள்
பழந்தமிழின் நட்சத்திரமென்ன ?

தையின் பிறப்பில்தான்
தமிழ் மாதம் பிறந்து விட்டால்
நாட்காட்டியும் நட்சத்திரமும்
நன்றாக வளரவில்லையே ?

நானாக உளறவில்லை
நன்றாக எண்ணி பாருங்கள்
சத்தம் போட்டு சொல்லாதீர்
சரித்திரத்தின் சரித்திரத்தை
சாவின் என் தரித்திரத்தை

ஆங்கிலத்தின் நாட்காட்டி
அன்றன்றாய் பழிக்கும்போது
தமிழ் தன் தாளில்தான் (பாதம் )
தவறாமல் கிழிக்கட்டும் தேதியாய்

இதுவே என் செய்தியாய்
இதுவே என் செய்தியாய் 

திங்கள், 10 ஜனவரி, 2011

பொங்கலோ பொங்கல் வாழ்த்துக்கள் !

கட்டெறும்பு ஒற்றுமையாய்
கரும்பினை கடித்திருக்க
காயும் சூரியன் கடவுளென
கைகூப்பி தொழுதிருக்க

கிழங்கு வந்து கிழக்கெனவும்
கிள்ளி வைத்த பூ வெனவும்
பூச்சி தின்னும் கோலமெனவும்
போட்டு வைக்கும் பண்பாடாய்

மஞ்சள் கொத்தும் இஞ்சி கொத்தும்
மங்கலமாய் கட்டி வைச்சு
புது பானை சுட்டு வைச்சு
புங்கன் இலை படலை விட்டு

காற்று வந்து கைதொழ
கச்சிதமாய் பாதை வைச்சு
வெல்லமதை விட்டு வைச்சு
வேகவைக்க பூசை வைச்சு

ஏலம் மணக்கும் எண்ணம் வைப்போம்
எட்டு திக்கும் சொல்லி வைப்போம்
பொங்குகின்ற பால் பார்த்து
புது துணியின் நூல் பார்த்து

நெய்தல் நிலமும் குறுஞ்சி நிலமும்
நீண்டு படரும் முல்லை நிலமும்
மருதம் நிலத்தில் மணம் பார்க்க
மணல் எடுக்குமாம் பாலை நிலத்தில்

ஆதி முதலாம் தமிழகத்தில் இப்போது
ஆற்றில் கிடக்கும் இப் பாலை நிலமும்
குறுஞ்சி என்பது பனிரெண்டு மணியாய்
குறுகி கொண்டாலும் மறக்க வில்லை

மருதம் என்பது மாறா உழைப்பு
மனதில் இருக்கு நெய்தல் தீரா நெருப்பு
முல்லை மட்டும் முழமாய் வாங்கி
மூட்டி வைப்போம் பொங்கலுக்கும்

நாளும் இரண்டும் சொல்லாய்
நல்ல நாளுக்கு தாவணி சட்டை
கட்டிய அத்தை பெண்ணோ
கான குயிலாய் பொங்கலோ பொங்கல்

ஆவாரம் பூவினை பறித்து கொண்டு
ஆட்டை வயிற்றுக்கு நிரம்ப மேய்த்து
தாத்தா வந்தால் தடியூன்றி இடித்து
தாம்பூலம் கொடுப்பாள் பாட்டியும்


வாண்டுகள் சக்கை கோபுரம்
வாயால் கட்டுவார் கரும்பினில்
வாழை பழத்திற்கு கொட்டையும்
வைத்திருந்தால் தப்பி பிழைத்திருக்கும்

சீரக சம்பா பொங்கலை
செரித்து போகவே உண்டுதான்
களைப்பில் கும்மிகள் கொட்டியதால்
காளைக்கு சீவுவார் கொம்பினை

மஞ்சு விரட்டினால் மணம் உண்டு
மாடு முட்டினால் மரணம் உண்டு
அஞ்சி நிற்பது எத்தனை பேர்
ஆவலில் ஏமாறும் எமதர்மன்

கணிபொறி விளையாட்டில் மென்பொருளாய்
கண்விழித்து இதை உருவாக்க
திட்டம் போட்டனர் தேர்ந்த முதலாளி
திட்டியே செய்கிறேன் வேலை என் வேலையை

பொங்கலோ பொங்கல் சொல்லியே
புறப்பட்டேன் வேலை அது வேண்டாமே
புரிந்து கொண்டால் உங்கள் வீட்டுக்கும்
பொங்கல் சாப்பிட வரிசையுடன் வருவேன்

பொங்கல் வாழ்த்தையும் சொல்லிடுவேன் !
பொங்கல் வாழ்த்தையும் சொல்லிடுவேன் !


வெள்ளி, 7 ஜனவரி, 2011

அம்மா அல்ல புள்ள !

"அம்மா" "அம்மாவென்று"
அத்துணை முறை கத்தினேன்
திருவிழாவில் தொலைந்ததால்
தைரியமில்லாமல் ஒலிபெருக்கியில்
யாரோ யாரையோ அழைப்பதாக நினைதாயாம்
எங்கே இருக்க "புள்ள"
இறுதியாய் கத்தும்போதுதானே
என்னையே உனக்கு அடையாளம் தெரிந்து
கட்டி கொண்டாய் அல்லவா ?
பட்டிணத்தில் படித்த அம்மா கவிதையை
உனக்காக "புள்ள" வென்று புரியும்படி
சீக்கிரம் அனுப்பிவைக்கிறேன்

நிலவும் சூரியனும் நேர்கோட்டில்

விழுந்து எழுந்தேன்
வெற்றியுமில்லை தோல்வியுமில்லை
வாழ்க்கை 

நிலவும் சூரியனும் நேர்கோட்டில்

விழுந்து எழுந்தேன்
வெற்றியுமில்லை தோல்வியுமில்லை
வாழ்க்கை 

நிலவும் சூரியனும் நேர்கோட்டில்

விழுந்து எழுந்தேன்
வெற்றியுமில்லை தோல்வியுமில்லை
வாழ்க்கை 

நிலவும் சூரியனும் நேர்கோட்டில்

விழுந்து எழுந்தேன்
வெற்றியுமில்லை தோல்வியுமில்லை
வாழ்க்கை 

நிலவும் சூரியனும் நேர்கோட்டில்

விழுந்து எழுந்தேன்
வெற்றியுமில்லை தோல்வியுமில்லை
வாழ்க்கை 

எனது உயில்

இறந்த இந்த நாளை பார்க்காதீர் !
நான் பிறந்த அந்த நாளை பாருங்கள் !
எதையும் சாதிக்க வில்லையென்றாலும்
எதையாவது சாதிப்பேன் என்று வளர்ந்துவிடுவேன் ! 

எனது உயில்

இறந்த இந்த நாளை பார்க்காதீர் !
நான் பிறந்த அந்த நாளை பாருங்கள் !
எதையும் சாதிக்க வில்லையென்றாலும்
எதையாவது சாதிப்பேன் என்று வளர்ந்துவிடுவேன் ! 

எனது உயில்

இறந்த இந்த நாளை பார்க்காதீர் !
நான் பிறந்த அந்த நாளை பாருங்கள் !
எதையும் சாதிக்க வில்லையென்றாலும்
எதையாவது சாதிப்பேன் என்று வளர்ந்துவிடுவேன் ! 

ம் ம் மழலைக்கு தெரிந்தது !

என் பையன் ,
இலங்கையை எழுத்து விளையாட்டில்
கலைத்து போட்டான்,
ஆச்சர்யம் !
ஈழமாய் கலையாமல் கிடந்தது !
என்னை வந்து அடித்து விளையாடுவதால் ! 

ம் ம் மழலைக்கு தெரிந்தது !

என் பையன் ,
இலங்கையை எழுத்து விளையாட்டில்
கலைத்து போட்டான்,
ஆச்சர்யம் !
ஈழமாய் கலையாமல் கிடந்தது !
என்னை வந்து அடித்து விளையாடுவதால் ! 

ம் ம் மழலைக்கு தெரிந்தது !

என் பையன் ,
இலங்கையை எழுத்து விளையாட்டில்
கலைத்து போட்டான்,
ஆச்சர்யம் !
ஈழமாய் கலையாமல் கிடந்தது !
என்னை வந்து அடித்து விளையாடுவதால் ! 

அவள்

வாடையிலும் வருவது தென்றல்
தென்றலிலும் தெரிவது காதல்
காதலில் தெரிவது காதலி
காதலி தெரிவது ................?
கவிதையை கிழிச்சு போடு 

அவள்

வாடையிலும் வருவது தென்றல்
தென்றலிலும் தெரிவது காதல்
காதலில் தெரிவது காதலி
காதலி தெரிவது ................?
கவிதையை கிழிச்சு போடு 

காற்றே எச்சரிக்கை ?

எந்த புயலிலும் என் மூச்சோடு சங்கமம்

நெருப்பும் நானும் ஒன்றுதான்

வாழ்ந்து திரிகிறேன்
மறைந்து எரிகிறாய்
எரிந்து போகிறேன்
என்னோடு சாம்பலாகிறாய் 

வியாழன், 6 ஜனவரி, 2011

காவலுக்குதானுங்கோ

வெங்காயத்திற்காக வெட்டி கொலை
விபரம் அறியும்போது தங்கமும்
தஞ்சம் அடைந்து கிடக்கிறது
தற்காப்பிற்காக அடகு கடையில் 

எப்பதான் நாம பிழைத்து கொள்வது

இன்று முதல் இங்கு 
வெங்காயமும் 
அடகு பிடிக்க படும் 
அரசியல் கடைக்கு 
ஆதாயமும் கொடுக்கப்படும் 


காதலி சாப்பிடும் போதும் உன் நினைவு

தினை நான்
தேன் நீ 

என் காதலியே

இதயத்திலும் இரண்டு சத்தம் 
"லப்" "டப்" 
நானும் நீயும் 


நாம்

நானும் நீயும் லப் டப் என்றால்
நம் காதல் இதயம் தானே 

அம்மாவும் அன்பும்

அம்மாவும் அன்பும்
இரண்டு சொல்லா
இருக்காது
தாய்
தமிழுக்காய் விட்ட
இன்னொரு சொல்
அன்பு 

நட்பு வளர

மரம் நடுவோம்
நட்பு வளர
கனி கொடுப்போம்
நண்பன் உண்ண 

காலமா, நானா வெற்றியாளன் ?

இரண்டு நிமிடத்தின் முயற்சியில்
நூறு அடிகள் ஓடிவிட்டேன்
நூற்றி இருபது நொடிகளை கடந்து
கால தாமதமாய் இருந்து கொள்கிறது
இருண்ட நேரம் 

வேகமும் விவேகமும்

எரிபொருள் ஏற்றி கொண்டு 
மிதி வண்டி போகிறது மெல்ல 



குறிப்பு : சென் தத்துவத்தை மைய படுத்திய கவிதை

தம்பி

என்னை விட உயர வளர்ந்தாலும் 
எனக்கு தம்பி 
அவனை விட குள்ளமாய் இருந்தாலும் 
அவனுக்கு நான் அண்ணன் 
எல்லாவிதத்திலும் 
அன்பு, செல்வம், பாசம்................................ 
எங்கள் 
இருவருக்கும் எதுவும் குறைச்சலில்லை 

உங்கள் கவனத்திற்கு

அன்றே எழுதினாலும் பத்து
அன்றை பார்த்து எழுத வேண்டும்
பதினொன்று
அடிக்காதீர்
என்னையும்
எழுதிய பின்னரும்
பழைய வருடமும் புது வருடமும் 

அம்மா நீ !

கடவுள் இல்லையென்று
காலில் விழுந்தான் நாத்திகன்
அம்மாவின் காலில்

அவனுக்கு தெரியுமா
அம்மா கடவுள் இல்லையென்று

அவன் தாயுக்கு தானே
ஆசீர்வதிக்க தெரியும்
பேயையும் பிள்ளையாக 

பள்ளிகூட நண்பன்

பல் விழுந்தாலும் சிரிக்க தோன்றுகிறது
பாசத்தினால் நம் நட்பை பார்த்து 

எறும்பும் யானையும் கவிதை எழுதினால் எப்படி இருக்கும் ?

உன்னை நான் கடிக்க முடியும் 
உன்னால் என்னை அடிக்க முடியுமா ? 
என்னால் எத்துனை கரும்பையும் கடிக்க முடியும் 
ஒரு கரும்பாலாவது என்னை 
உன்னால் தூக்கி அடிக்க முடியுமா ? 

மனிதனை போல கற்பனை வேண்டாம் 
மன்னித்து கொள்ளுவோம் 
மறந்தும் கவிதையெல்லாம் கிறுக்க வேண்டாம் 
மண்ணில் புதைத்து கொள்ளுவோம் 
கால் தடத்தை கண்டு திருந்தட்டும் 

இரண்டும் எழுதிய 
இறுதி சுவட்டின் கவிதையிது

புதன், 5 ஜனவரி, 2011

மை

கட்டை விரல் வேண்டாம்
கைபேசியை சூப்பி கொள்கிறேன்
எங்கள் வீட்டு வாண்டு
இப்படியாக அடம் பிடிக்கும்போது
என் கட்டைவிரலின் ரேகை
கண்ணீரை மையாக வைத்து
காலத்தால் எழுத்தில்  பதித்து கொள்கிறது

திங்கள், 3 ஜனவரி, 2011

வருடம் பிறக்கும்போது !

பத்துபதினைந்து நிமிடங்கள் முன்னர்
பச்சிளம் குழந்தையோடு நான்

அழுது கொண்டிருக்கும் அதற்கு
ஆண்டின் பிறப்பை பொம்மையாய்

வித்தியாச வெடிகளில் காட்டி
வீதியின் கோயில் சத்தம் கூட்டி

இனிப்பை உதட்டிலும் வைத்து
ஏராள வித்தைகள் செய்தாலும்

நெஞ்சினில் எட்டி உதைத்து
நிறுத்தாத எச்சில் ஒழுகளோடு

அடம்பிடித்த அதன் கன்னத்தில்
ஆசை முத்தம் கொடுத்தேன்

பொக்கை வாயை திறந்து அழகாய்
பூ போன்ற கையினால் அசைத்து

வரவேற்கும் விதமாக வருடத்தை
வாயால் மழலையில் குளறி

புன்னைகை பூத்தது புத்தாண்டாய், அது
அழும்போது தடுமாறி போனாலும்

அடுத்த நிமிடத்தின் மாற்றத்தை
குழந்தையின் குட்டி குறும்போடு

கொண்டாடுகின்றேன் இதுவரையில்