பக்கங்கள்

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

என் காதலி பாரதி

பாரதி பெண்ணாக வர வேண்டும் - அவள்
பாதுகையாக நான் மாறவேண்டும்
கலைகளின் கல்தடமாய் வழி படைக்கவேண்டும் - அவள்
கற்பென்ற கவிகளால் செழிக்கவேண்டும்
இருள் இடித்து திலகமென வைக்கவேண்டும் - அவள்
எடுத்துக்கொண்ட சேயெனதான்  தமிழும் வேண்டும்
சேலை என்று பசுமைகளாய் மாறவேண்டும் - அவளின்
செங்கதிரின் ஞாயிரென்று  நெற்றி வேண்டும்
வியர்வை சொட்டும் உழைபென்றே  ஊக்கம் வேண்டும்  - அவள்
வெள்ளை மனம் படிந்து நான் நடக்க வேண்டும்
கொள்ளை கொள்ளும் நிலவினையே கொண்டை பூவாய் - அவளுக்கு
கொண்டு சென்று தலையில் நான் சூட்ட வேண்டும்
மலர் சிந்தும் தேனையெல்லாம்  மொண்டுகொண்டு - அவளின்
மரகத முகம் துடைக்க நான் செல்லவேண்டும்
ஞானசொல்லில் நகைகளையே பொருத்தி பொருத்தி - அவள்
நன்றாக மொழி சொல்லும் திறம் கேட்டு
பணிபோடும் திரைகலையே தாண்டி நானும் - அவளை
பாங்காக கரம்பிடித்து செல்லவேண்டும்
புரளும் கூந்தல் நறுமணமாய் சந்தனத்தை - அவளுக்கு
பொன்னி நீர் குழைத்து பூசவேண்டும்
வாலிப காதல் கொண்டு வயப்பட்டேன் - அவள்
வருவளோ புதுமை பெண்ணாய் பாரதி மீண்டும்

கருத்துகள் இல்லை: