பக்கங்கள்

வியாழன், 30 டிசம்பர், 2010

பெருமிதாம்தான் கைபேசி

மூன்றாம் தலைமுறை(3G) கைபேசி உன்னால்
முகத்தை பார்த்தே பேசி கொண்டிருந்தாள்
இரவு இனிதாய் முடிந்து போனாதால்
எனது கனவுகள் வருந்தியது பாவம்

புத்தாண்டு வரவேற்று வாழ்த்தலாம் நண்பர்களே

சித்திரை சேர்த்து இரு
சிறப்பு புத்தாண்டே வந்திடுக
சீரும் செல்வம் உண்மையெல்லாம்
சீக்கிரமாய் கொண்டு வருக
நோய் நொடிகள் பஞ்சமெல்லாம்
நுழைய வைப்பாய் மரணத்திலே
ஆய கலைகள் அத்துணையும்
அறிய வைப்பாய் எல்லோருக்கும்
அணுகுண்டுகள் ஆயுதங்கள்
அழிய வைப்பாய் அமைதியிலே
வெகுண்டு எழும் தீவிரவாதம்
வேரறுக்க வந்திடுவாய்

எழுத்தில் பல கவிதைகளை
இயற்ற  வைப்பாய்  புது கவிஞர்களாய்
அனுபவ கவிகள் அதிகமாய்
ஆற்ற வைப்பாய் தமிழ் பெருமைகளை
காதலுக்கு சாக வரமாய்
களைய வைப்பாய் சாதிமதம்
கல்லறை மட்டும் கடைசி காட்சியாய்
கையை காட்டட்டும் ஊழலுக்கும்

ஒற்றுமை தமிழனாய் உலகிற்கே
ஓங்கி உழைத்திடவே பல துறைகளிலும்
விஞ்ஞானம் என்பது விவசாயமாய்
விளையட்டும் கட்டிட தலைகளிலே
அஞ்சறை பெட்டியில் தங்கத்தை வைத்து
அடுப்பின் நெருப்பாய் உயர வேண்டாம்
மஞ்சளை போலவே முகத்தில் பூசி
மகிழ்ச்சியாய் சிரிக்கணும் வந்திடுவாயே
எல்லை புறத்தில் புறாக்கள் கூட்டில்
என்றும் பறக்கணும் அமைதி குஞ்சு

சந்திர சேற்றில் நடவு நடுவதற்கு
சந்திரயானில் என் பாட்டி பறக்கவே
ஆழிபேரலை வருமுன் காக்க, ஆன்மா
ஆழமாய் செல்லட்டும் நீர்மூழ்கியாக
சட்டம் என்பது சகலருக்கும் பொது
சமத்துவமாய் மாறட்டும் அதி விரைவாக
சேமிப்பு என்பது எங்களுக்கெல்லாம் உன்
 செல்லும் நாளின் அனுபவமாக

புத்தன் சொல்லோ உண்மையென்றால்
புலரவேண்டும் ஈழ விடுதலையென்று
பொறுமை காத்த இதயமெல்லாம்
பொழுது போக்கணும் புது கண்டுபிடிப்பில்
நண்பன் உறவு உலகமெல்லாம்
நான் விரும்பிய வண்ணம் வந்திடவே
அதற்கு வாழ்த்துகின்றேன் அதற்கு வாழ்த்துகின்றேன்
வருக வருக நீ வந்திடுவாயே

என்னவள்

அமாவாசையில்  பௌர்ணமி தேடி
அலைந்தபோது நான், நிலவு
பூத்து கிடந்தது தாமரையாய்
பூத்த தாமரையில் தேனெடுக்க
போய்கொண்டிருந்தது மிதந்து கொண்டு
தேனோ இதழில் தீண்டாமலே
திருமணத்தின் பிறகுதான் அந்த உரிமை
தெரிந்து கொண்டேன் அவள் யாரவள் ?

சின்ன பிள்ளைகள் கெடலாமா?

கஜூரஹோ* சிலைகளெல்லாம் போர்த்திகொள்ளும்
காலம் கெட்டுவிட்ட தமிழ் படத்தில் என்று சொல்லி
பிறந்த  குழந்தைக்கு கூட உடைகளை போட்டு
பிறகென்ன அம்மணமாய் ஆடுது திரை உலகு
*பிறமொழிச்சொல் 

என் கல்லறை கைகாட்டியில்

காதலித்து பைத்தியமா
கவலை படாதீர்  நண்பர்களே
மருத்துவம் உண்டு வாருங்கள்
மரணம் கொண்ட என் கல்லறையில்
"கல்யாணத்திற்காக காதலிக்காதே "
"காதலுக்காக கல்யாணம் செய் "
என் கல்லறை தொட்டு கலங்கி பார்
கசப்பாய் இருக்கும் காதலித்து பார்
இனிப்பாய் இருக்கும் இனிமேல்

புதன், 29 டிசம்பர், 2010

மத்திய பிரதேச* என் காதலி

போபால் போல கசியுமா
பூம்புனல் போலே புசியுமா
உன் பார்வை

*பிறமொழிச்சொல்

கன்னடத்து* என் காதலியே

குடிக்கும் நீரில் மறிக்குமா
குடகு போல குளிருமா
உன் பார்வை

*பிறமொழிச்சொல்

காஷ்மீர்* என் காதலியே

காத்திருக்கும் எல்லையா
கருணை மிக்க தொல்லையா
உன் பார்வை

* பிறமொழிச்சொல்

அருணாச்சல பிரதேச * என் காதலியே

அத்துமீறலின் ஆர்வமா
அடைய வைக்கும் இமயமா
உன் பார்வை

*பிறமொழிச்சொல்

அஸ்ஸாம்* என் காதலியே

ஆங்கிலோ பர்மா யுத்தமா
அருந்தும்  தேயிலை சத்தமா
உன் பார்வை

*பிறமொழிச்சொல்

தமிழ் நாட்டு என் காதலியே

தாமரை பூத்த தாவணியா
தமிழால் காய்த்த பௌர்ணமியா
உன் பார்வை

டெல்லி* என் காதலியே

பாலம் உடைந்த மானமா
பனியால் முடைந்த கானமா
உன் பார்வை

*பிறமொழிச்சொல்

குஜராத்* என் காதலியே

நானோ* காரின்*  ஓட்டமா
மானோ மயங்கும் வாட்டமா
உன் பார்வை

*பிறமொழிச்சொல்

பீகார் என் காதலியே

நச்சல்களின் காட்டமா
நறுந்தேனின் கூட்டமா
உன் பார்வை

மகராஷ்டிர* என் காதலியே

சிவசேனை சீண்டலா
சிக்க வைக்கும் தூண்டிலா
உன் பார்வை

* பிறமொழிச்சொல்

என் இராஜஸ்தான்* காதலியே

குஜ்ஜாரின்* விருப்பமா
கொளுத்தும் பாலையா
உன் பார்வை

* பிறமொழிச்சொல்

என் ஆந்திர காதலியே

தெலுங்கானா தவிப்பா
தெரியாத கவர்ச்சி ஈர்ப்பா
உன் பார்வை

மலையாள என் காதலி

வர்ம அடியா
வசிய பிடியா
வலிக்கவுமில்லை
சலிக்கவுமில்லை
உன் கண்ணாலேயே

செவ்வாய், 28 டிசம்பர், 2010

இன்றைய தேதியில்

விக்ருதி வருடம் விளக்கம் சொல்ல
விரைந்து வருகிறதாம் புது வருடம்
மார்கழி பதிமூன்று மறந்து விட்டு
மகிழ்ச்சி  என்பதை எதிர் நோக்கி
காத்திருக்கும் மூன்று நாளுக்காய்
கவலை படுதாம் தமிழ் மூன்று

தலை குனிந்து இதைபார் தமிழா ?

மார்கழி கோலத்தில்
ஹேப்பி நியூ இயர்*

* பிறமொழிச்சொல்

திங்கள், 27 டிசம்பர், 2010

கைபேசியே உன்னுடைய தயவால்

என்னவள் இதயத்தில் இருந்தாலும்
உன்னுடைய தயவால்தான்
உதட்டோரம் முத்தமிட்டு கொள்கிறேன்
உன் முகப்பின் இரு முகத்திலும்

தமிழே!

மூன்றெழுத்து உன்னை முயற்சி செய்து
அழைக்கின்றாராம் ஆங்கிலத்தில்
அப்புறமென்ன தமிலென்று
ஆதியந்தம் இங்கிருந்து ?

கடவுள் தேடுவதை நிறுத்திக்கொண்டேன்

பரம் பொருள் பரம் பொருள் என்று
பசி எடுக்கும் வரை கேவி கொண்டிருந்தேன்

பரிந்து கொடு பொருள் பரிந்து கொடு பொருள் என்று
பணியில் இருந்து கொண்டு கேட்கின்றேன்

கர்மயோகத்தின் கடவுள் கருணை காட்டுகின்றார்
கடைசி தேதிக்கு பின் முதல் தேதியில் சம்பளத்தோடு
வணங்கிய  என் கை அப்போதே வயிற்றை தடவி வாழ்கையின் அர்த்தத்தை தெரிந்து கொண்டபோது

என்னுடைய கடவுள் எல்லோருக்கும் காட்சியளிப்பார்
இப்போதே கைகூப்புங்கள் கர்மத்தில்
என்று மட்டும் என்னால் கூற முடியும்

இதுதான் கடவுளின் உண்மை !

கடவுளின் கடைசி படைப்பு நான் தான்
ஒவ்வொருவரும்

இப்படிக்கு தொலை தொடர்பு

கைபேசியே, கணிபொறியுடன்
கள்ள காதாலாய்   செய்கிறாய்
மின்னஞ்சலை இடை மறித்து
மெலிதாய் அழுதுகொள்கிறது

மார்கழி கோலம்

எறும்புகெல்லாம் இனிப்பு
என்னுடையவளின்
கல் மா கோலம்

குறிப்பு : இது இருபொருள் பட புனைய பட்டது

அ)கல் மா கோலம்  - பெரிய  கோலம் கற்று
ஆ)கல் மா கோலம் - கல்லினுடைய மாவு கோலம்

சனி, 25 டிசம்பர், 2010

தாய்மை

மணிபுறா சூறை புதரில் கூடுகட்ட

மறைந்திருந்து இருமுட்டை கண்டுவிட்டு

தினம் சென்று பனை மரத்தில் கல்லெறிந்து

திடுகிட்ட புறா பறக்க முட்டை பார்த்து

இருபது நாளுக்கு மேலாய் இதை தொடர்ந்து

இன்னுமா குஞ்சு பொரிக்க வில்லை ஐயம் வர

ஓடிச்சென்று அம்மாவிடம் இதைகேட்க

ஒன்றுமறியா பிள்ளையெனக்கு என்ன சொல்வாள்

யோசித்தால் கூழைமுட்டை ஆகியிருக்கும்

உணரனுமாம் முட்டை தாய் சூட்டை தொடர்ந்து

ஆறிப்போன சூட்டால் முட்டை ஐயோ பாவம்

ஆறறிவு குழந்தை எனக்கு புரியவில்லை

அடுத்தமுறை சூறை புதருக்கு செல்லவேண்டாம்

அங்குதான் கண்கொத்தி பாம்பிருக்கு

மிரட்டி வைத்த பயத்தால் நான் செல்ல வில்லை

மீண்டும் புறா சவுக்கு கன்னில் முட்டையிட

தூரத்தில் பார்க்கும்போது தூங்கி கொண்ட

துறுதுறுத்த என்கண்ணில் புறா கனவு வர

அம்மாவிடம் சொல்லலாமா மனசு அலை பாய

அறுவடையில் இருந்த அவள் அருகில் செல்ல

கதிரறுத்த மெனைகளில்தான் காடை முட்டை கண்டு

கண்ணீரும் கம்பலையுமாய் நின்றிருந்தாள்

கவிதை எழுத தெரியாத அப்போது?

புழுதி பொட்டலில் புது ஏரிக்கரையில்

அம்மாவிடம் கோபித்து அரவணைத்து கிடந்தேன்

தண்ணீர் அலைகள் தத்துவங்கள் பேசியிருக்கும்

நட்சத்திரம் முகம் பார்க்க நாங்கள் உயர்ந்தொமென்று

மலைபாம்பு சரசரத்து மனக்காம்பில் ஏறிக்கொள்ள என்

கோபமெல்லாம் குலை குலைத்து குறைக்கா நாயாய் கடித்துகொள்ள

இருந்தாலும் இறந்திடலாம் எனக்கங்கு இருட்டில்தான்

குளிர்வந்து கட்டிக்கொள்ள என் கூட்டிபிடிக்கும் முட்டியென்று

தவளைகள் இறக்கும்போது அதன் கர்ப்ப முட்டையும் கத்திகொள்ள

மீன் பிய்த்த ஒரு காலில் மெல்ல கவிச்சை அடித்து கொள்ள  

எரி நட்சத்திரம் கீழ்விழ என் எச்சிலை துப்புவதற்கு

வறண்ட தொண்டை வயிற்று நெருப்பில் கனைத்துகொள்ள

பனிரெண்டு மணி பார்க்க கைகடிகாரத்தில்

சலங்கை கட்டி பேய் வரும் காத்திருந்தேன்

சற்று தொலைவுக்கு வீரனார் விரட்டியிருப்பார் நினைத்துகொண்டேன்

மோகினியோ பாலகன் என்னை தவிர்த்திருக்கும்

முற்றும் துறந்த முனிவனாய் பயத்தின் தவத்தில்

கூட்ட நரிகள் சலசலத்து ஊளையிட

என் அன்னை விளக்குமாற்றால் எனை அடிக்க

காலையிலே கண்விழித்து எழுந்துவிட்டேன்

காலம் தான் மாறி போனாலும் , கரைந்து விட்ட

கரையினிலே தனித்து இருக்கேன்

கவிதையென இப்போதுதான்  கிறுக்கி இருக்கேன்

அக்கவிதை விரைவினிலே வெளியிடுவேன்

தியானத்தில் தொலைந்து போவோம்

தியானம் செய்வதற்கு மனம்  திரிந்து பறக்குதடி

தேடி தேடி கடைசியாய் தெரிந்து கொள்ளுதடி

அந்தி அங்கு அமர ஆழ்ந்து கொள்ளுதடி

அதுவரையின் கதிரவனை சூழ்ந்து  கொள்ளுதடி

தாமரை பூவோ மலர்ந்து கொள்ளுதடி

தன்னிலை மறந்து ஆசனம் கொள்ளுமடி

தண்டின் வளர்ச்சியிலே தலைதான் உயருதடி

தவழும் தென்றலங்கே பிரணயாமம் கற்றதடி

தேனீ மனம் சுற்றி சுற்றி திறந்து கொள்ளுதடி

தீண்டும் கிளைகளோ முத்திரை கொள்ளுதடி

உள்வெளியில் உச்சிநீரில் உண்மை தெளியுமடி

உயிர் வளியில் மூச்சின் முடிவின் அச்சம் குறையுமடி

எந்த பொருளும் பரம் பொருளாய் மகரந்தம் விரியுமடி

இருக்கும் தாமரை அத்தனைக்கும் சேர்க்கை நடக்குமடி

காலை பொட்டில் காட்சி பட்டு தெரிக்குமடி

காணும் ஆன்ம குயிலோ பாட்டும் படிக்குமடி

ஆனந்தம் ஆனந்தம் என்று ஆசை மலருதடி

ஆறறிவு எழுத்தாய் என் கவிதை நிறையுமடி

திங்கள், 20 டிசம்பர், 2010

வெள்ளைக்காரன் அம்மாவென்று !

கல்லறை கடைசியாய் மூடிக்கொள்ள
கலங்குது கண்களில் கண்ணீர் மெல்ல
அழுததின் அர்த்தங்கள் அவிழும்போழுது
அலாஸ்காவே* அலறுது அழிவில் கொள்ள
"இயாக்கின்"* மொழி இன்று இறுதி கூட
இறக்கும்போது மேரி ஸ்மித் ஜோன்ஸோடு*
அன்றுவரை இருந்துவந்த  அம்மொழியோ
அய்யய்யோ அய்யய்யோ  முடிந்து போனதே !

"கரைம்"* மொழி கலந்து விட்ட உயிர் மூச்சில்
காயத்தால் இதயம் மெல்ல இழந்து கொண்டு
ஆறு பேர் பேசிக்கொள்ளும் அவலத்தை
ஐந்தறிவு விலங்கு கூட புரிந்து கொண்டு
மனிதனால் இழந்து கொள்ளும் மொழியைபோல
மாற்றங்கள் வந்திடுமோ நம் மொழியில்
பேசியது பேர் ஆசையல்ல  அசையில்தான்
பிறகென்ன நமக்கெல்லாம் அசிங்கம்தான்

பத்து பேர் பிரிந்திருந்தும் பார்த்துகொண்டார்
பழம் மொழியாம் "விசிடா"* வின் விபரீதத்தை
அமெரிக்கா செவ்வாயிலே குடியேறி
அங்குள்ள மொழியெல்லாம் கற்று கொள்ள
நாசாவிலே* ஆராய்ச்சியை நடத்திவந்தாலும்
நன்றாயில்லை ஒக்லஹாமா* மாகணத்தில்
ஏனிந்த அவலமெல்லாம் விக்கிலீக்கில் *
இல்லாததையா சொல்லிவிட்டேன் மன்னியுங்கள்

கோவையிலே செம்மொழியோ குலாவியிருக்க  
கூட்டமெல்லாம் பந்திக்கென முந்தியிருக்க
செம்மொழியை சிண்டு பிடிக்க சிலர்மட்டும்
சீரழியும் திரைவரியில் தள்ளுபடியாய்
ஊழல் நிதியில் பொன்னாடை போர்த்துகின்றார்
உயர் மொழியாம் தமிழ் மொழியை வாழ்த்துகின்றோம்
இந்தியாவில் பேசப்படும்  196 மொழிகள்
இருக்கின்றதாம் அழிவினில் ஐ.நா இதைச்சொல்ல

பொறுக்கவில்லை என் மனம்தான் புயலாய் மெல்ல
புரட்டி போட்டு உயிரைத்தான் உலுக்கி கொள்ள
வழியில்லையே இலங்கையிலே அழிந்துபோன
வாழ்க்கையில்லையே தமிழுக்கென தெரிந்துகொண்டேன்
இதைபோன்றே எம்மொழியோ அழிந்துபோகும்
என் செய்வேன் என் செய்வேன் வழியென்னவோ?
உயிரைவிட்ட தமிழுக்காய் வீரமாமுனி போன்றே
ஒரு வெள்ளைக்காரன் உயிருடன் இருந்தால் எம் மொழி காப்பான்

 * பிறமொழிச் சொல்
குறிப்பு  : தினமலர் பொது அறிவை மையமாக வைத்து புனையப்பட்டது

வெள்ளி, 17 டிசம்பர், 2010

துரத்தி வருகுது கண்ணாமூச்சி இன்றும் தோழி !

சனி கிழமை தனித்திருந்தேன்
சாகசம் செய்வதற்கு துடித்திருந்தேன்
செங்கல்லை தேய்த்து மெழுகி
செல்லும் சாலையில் சாம்பலை தூவி
சக்கரமில்ல போக்குவரத்தை
சற்றும் நிறுத்தாமல் நடத்திவந்தேன்
தேங்காய் நாரை பிரித்து புனைந்து
தேடிவரும் குருவிக்கூடாய்
பாடி வரும் புது கனவுகள் அதில்
பறந்து போகாமல்  முட்டையிடும்
மண் சோறை சூடாய் ஆக்கி
மனதின் வாயினால் மென்று தின்று
தண்ணீரின் மண்ணை நிறைய
தலை கீழாய்  கவிழ்த்து கழுவி
சின்ன பாத்திகள் கீறி வைத்து
சிறிய புற்களை பிடுங்கி நட்டு
விவசாய வேலையும் சோம்பலில்லாமல்
விற்பனை மண் குவிய கடையிலும் தூக்கமில்லாமல்
கொட்டாவி விடும் குட்டி வயதில்
குலுங்கி வந்தாய் தனிமையை விரட்ட
பக்கத்து வீட்டு மகாராணியாய்
பகட்டே இல்லாத என்னுடைய தோழியாய்
வந்தவுடனே வாயடைத்து நின்றாய் என்
வல்லைமை திறமையை போற்றி நின்றாய்
மண் சாலையில் ஒரு குச்சியை புதைத்து
மறைத்து வைத்து விளையாட சொன்னாய்
எடுக்க முடியாமல் இருந்து விட்டால்
என் கண்ணை கட்டி விளையாட சொன்னாய்
கண்ணா மூச்சி விளையாட்டை நாமும்
கண்டு பிடித்தவனை காணமல் தேடி
அன்று முழுவதும் விளையாடி விட்டு
அழுக்கான சட்டையுடன் வீட்டிற்கு சென்று
அடிதடிகள் கொஞ்சம் வாங்கி
அழுது கொண்டு தூங்கியும் போனோம்
மறுநாள் விளையாட்டை தொடர
மண் மாளிகை கட்டிவைத்து
உன்னிடம் காட்ட ஓடோடி வந்தால்
ஓலை புது வீட்டில் உட்கார வைத்து
உனக்காக சடங்குகள் செய்தார்
ஒளிந்திருந்து பார்த்த என்னை
உன்னுடைய கண்கள் விரட்டி பிடிக்க
வெட்கப்பட்டு ஓடோடி மறைந்தேன் இன்றும்
விரட்டி வருகிறது பழம் நினைவுகள்

வியாழன், 16 டிசம்பர், 2010

ஏ நட்பின் துரோகியே ?

வாடா பூ நட்பென்றாலும்
வஞ்சிக்காதே அது தப்பு ?
வாடா போடா இதுதான்
என்றும் நட்பின் காப்பு !

என் காதலுக்கும் கண்ணில்லை !

கன்னங்கரிய நிறம்

காவியான பற்கள்

பரட்டையான தலை

படிப்பறிவில்லா தகுதி

உழைப்புத்தான் உடை

உடுத்திகொல்வதிலும் கடை

ஆனாலும் காதலியே

அவனைத்தான் காதலித்தாய்

அத்தனையும் துறக்க தயார்

அவனை பார்க்கும் முன்

அதை சொல்லியிருந்தால்

இப்போ இதை துறந்துவிட்டேன்

இன்னொருத்தி என்னை காதலிப்பாள்

அதுவும் இப்போ நடக்கவில்லை

அதற்கு பெயர்தான் காதல் தோல்வியோ !

அவசர பட்டு இறந்த என் காதலியே ?

அவசர பட்டு இறந்து விட்டாயே
ஆருயிர் என் காதலியே
கல்லறையிலாவது நம் காதல்
கவலையில்லாமல் சேர்ந்திருக்க
கண் காணாத தேசத்தில் நாம்
கண் மூடி இறந்திருக்கலாம்
உள்ளூரில் நீ இறந்ததால்
உன் நினைவால் நான் இறந்தாலும்
நம் கல்லறை கூட சாதி சண்டையில்
நடுங்கி  காதலில் இன்னும் பிரிந்திருகிறதே

செவ்வாய், 14 டிசம்பர், 2010

எனக்கொரு சந்தேகம் காதலி !

கனவிலும் இரவிலும் நான் இருப்பதால்
மலர்கள் மலர்வதை கவனிக்க முடியவில்லை
கவலை பட்டு கொண்டேன்

மௌனத்திலும் காதலிலும் நீ இருப்பதால்
இதழ்கள் மலர்வதை காண முடியவில்லையடி
கவலை பட்டு கொண்டேன்

இரண்டுமே மலரும்போது இதழ்கள்
இருக்கிறேனா தெரியவில்லை காதலி
முத்தமா முக்தியா தெரியவில்லை

திங்கள், 13 டிசம்பர், 2010

செய்னா நேவால் !

பாரதிக்கு புதுமை பெண்ணாய்
பரிசளித்தாய் நான்கு பட்டம்
பாட் மிட்டன்* பேசி மகிழ
பருவ குயிலாய் நீ படித்தாய்
இருபத்தி எட்டு ஆண்டு முடிய
இலக்கினை வீழ்த்தி விட்டாய்
முதலிடம் பெறுவதற்கு
முயற்சியும் தோற்றுவித்தாய்
முதல் சுற்றில் தோற்று போயும்
முந்தி கொண்டாய் இரண்டாம் சுற்றில்
மூன்றாம் சுற்றில் பதிலடியாய்
முன்பு தோற்று இருந்த ஆகஸ்டில் *
ஷிஜியன் வாங்கை தான்
சிதறடித்தாய் ஹாங்காங் தொடரில்
ஆனாலும் அம்மணியே
ஹைதரபாத் பெண்மணி போல்
என் கவிதை பொய்யாக்கி
இருக்க மாட்டாய் நம்புகின்றேன்
காலம் முழுக்க இரசிகனாய்
கவிதையில் வாழ்த்துவேன் புரிந்து கொள் !

* பிற மொழிச்சொல்

வருத்தமில்லை புரிந்து கொள் !

கெஞ்சுவது எமக்கில்லை
அஞ்சுவது தற்காப்பில்
மிஞ்சுவது பயத்தினால்
வஞ்சித்தது கீதத்தை

அரசியலின் தலைகளெல்லாம்
ஆடுது தஞ்சை பொம்மையாய்
புரியவில்லை காற்றின் திசையோ
பூக்குமே தமிழ் கீதமாய்

அகண்டவன் கண்ணிற்கு
இருண்டதெல்லாம் பெரும் பேயாய்
பிரிட்டனிலே பயந்ததெல்லாம்
பிடித்து விட்ட இலங்கை இரண்டு

அறிந்து  நீ தைரியமாய் இதை
அடங்கி சொன்னாய் சிங்களத்தில்
ஆணையில்லை எமக்கு தெரியும்
அறிவிலிகள் தெரிந்து கொள்ளும்

காற்று கூட உன்னை மிரட்டி
கடும் மூச்சில் எச்சரித்து நாம்
விடும் கீதம் தெளியவைத்து
விடுதலையை உரைத்திருக்கும்

நெடுநாளின் வேதனைகள்
நெல்லுகிரைத்த புல் நீராய்
ஊறி போன எம் இரத்தம்
உண்மை உதிர்த்தது பெருமையே

எத்துனை உயிர்கள் பலியிட்டோம்
ஈழ கடவுளுக்கு எங்கள் மனிதத்தை
அத்துணை வேண்டுதலும் பொய்யில்லை
ஆழ நடுகல்லின் அருந்தவத்தில்

யாழ் நூலகத்தின் ஒரு பக்கம்
எரியும் போது சொல்லி வைத்த
ஊழ்  உனக்கு புரியவில்லை
உருத்தி வந்தது கண்ணகியாய்

கீதம் எமக்கு இயற்ற தெரியும்
கீழ் வழிகள் எமக்கு வேண்டா
வாதம் உன்னுடன் எமக்கில்லை
வாழ்க்கை சிறக்கும் ஈழத்திலே

சிங்கள கீதமல்ல இது ஈழ தமிழ் தேசிய கீதம் !

முற்றும் சூழ் அலைகடல்
முடிவடையா பெரும் ஓசை
குறைவில்லா தமிழ் எனவே
கொடி நிமிர்த்தும் பரிதிக்கும்
காடு திறந்து வளி மிதந்து
காத்து நிற்கும் உயிர் மூச்சில்
ஓங்கி நிற்கும் வெயிலுக்கும்
உரத்து சொல்லும் மழைக்கும் எம்
பொன்னுடல் வியர்வை பூத்து
போற்றி நிற்போம் ஈழ பூமி


எதிரிக்கும் தர்ம வழியில்
ஈழத்தில் அமர வைத்து
போதிக்கும் பொற்காலம் கல்வி
புதுமை நூல்கள் செய்வித்து
எம் பூமி சட்டங்கள் என்றும்
இந்த உலகத்திற்கே வழிகாட்டும்
போர் வெறியில் பூவைத்து நாம்
பொறுமையிலே அணு உலகை
அறிவியலின் அழிவினைக்கு
ஆற்றலில் மாற்றி வைப்போம்


பொருளாதார பெரும் வேகம்
புரிந்து செல்லும் இலக்கிலே
பசி கொடுமை ஏழ்மையெல்லாம்
பகுத்தறிவின் தாழ்மையெல்லாம்
இல்லாதொழிக்கும் ஈழத்தாயே நீ
என்றும் வாழ வாழ்த்துகின்றோம் !
ஈழ தாயே வாழ்கவே! வாழ்கவே !
எம் தமிழ் தாயே வாழ்கவே ! வாழ்கவே !

சனி, 11 டிசம்பர், 2010

பாரதிக்கு பிறந்த நாள் வாழ்த்து !

ஒன்று இரண்டு மூன்று என்று (123  -வது)
உன் பெயரை பாரதி என்று
நாட்களுக்கு நாலு என்று
நறும் தமிழுக்கு நீயென்று
பதினொன்று இன்று மட்டும்
பனிரெண்டோடு சேர்ந்து கொண்டு
என் கவியை பாடும் போது
எனக்கும் மட்டும் பெருமை இல்லை
இரண்டாயிரத்து பத்துக்கும் சேர்த்துதான்
எங்கள் தமிழினமே வாழ்த்துகின்ற போது
இவ்வுலகமெல்லாம் உன்னை வணங்கி நிற்குதே

என்னுடைய பாரதிக்கு 123- வது பிறந்தநாள் !

பதினொன் கீழ்கணக்கு எங்கள்
பாரதியை பார்த்தது
பண்டைத்தமிழ் புகழையெல்லாம்
பரிசளிக்க சேர்ந்தது
பன்னிரண்டு திங்கள் எல்லாம் இந்நாளுக்கு
பார்த்து பார்த்து ஏங்கியது
ஆயிரத்தி எண்ணூற்றி எண்பத்திரண்டு
அவனிக்கே பூத்தது
அன்று முதல் சங்கம் கூட ஆதி
அலை கடலில் எழுந்தது
பரங்கியனை பார்த்த மீசை கூறாய்
பாட்டில்தான் கிழித்தது
பாரதப்போர் பெருங்காவியம் அவனால்
பாஞ்சாலியாய் சபதம் ஏற்றது
விடுதலைக்கோர் வேங்கையென வேட்டை
விடிவதற்க்காய் பாய்ந்தது
வெள்ளையனை ஓடிப்போ வெற்றி கவி
விரட்டி விரட்டி அடித்தது
கவிதை எழுதி காசு பேயை அன்று
கடுமையாக அழித்தது
காசுகூட கவிதை எழுத இன்று
கண்டபடி காமத்தில் குளித்தது
எத்தனை குயில்கள் உன்பாட்டை இன்றும்
இளங்காலையிலே படிக்குது
இப்போது கூட புதுகவிதை உன்னால்
ஏராளமாய் வடிக்குது
பசி கொடுமை பொறுக்காமல் பாரதி  நீ
பார் முழுதும்  அழிக்க சொன்னாய்
பரிதவிக்கும் தமிழனுக்கும் பிறர்க்கும் நீ
பாதையை  காட்டி சென்றாய்
பங்காளி முறைகளையும் பார்த்து நீ
பாசமாக நடக்க சொன்னாய்
புது ஆத்தி சூடி புனைந்து நீ
புகழ் பண்பை காட்டினாய்
பாப்பா பாட்டில் நான் கூட பழக  நீ
பக்குவ விளையாட்டை சொன்னாய்
இருபத்தியோராம் நூற்றாண்டு உன்னை எமக்கு
இவ்வாறு புகழ்ந்திருக்க
இருபதாம் நூற்றாண்டு என்றும் எமக்கு
பாவமாய் இருந்திடுமே
முண்டாசு கவிஞன் நீ முத்தமிழின் விளக்கு நீ
முடிவில்லை உனக்குத்தான்
மூர்த்தி கவிஞனாய் மீண்டும் வா

கருப்பு நண்பா உன்னை பழித்தால் !

இரவை ஒருநாள் ஓவியம் வரைய சொன்னேன்
இருட்டாய் அமாவசையென வரைந்து வைத்தது
கருமை கண்டுநான் கை கொட்டி சிரித்தேன்
கர்வ பட்ட என்னையே இரவு வெகுவாய்  கண்டித்து
ஓவியம் வரைந்து வண்ணம் உலர போட்டேன்
உற்று நீ கவனி பௌர்ணமியில் அது தெரியும்
குற்றம் உணர்ந்தேன் குறையும் கலைந்தேன்
இரவின் கனவிலே என்னை கூட மறந்தேன்

வெள்ளி, 10 டிசம்பர், 2010

மகனை உயிருடன் புதைத்த தாய்?

என்னை விதைத்த தாய்க்கு
எப்படி புரிந்ததோ தாய்மை
என்னை புதைத்த மண்ணே
இந்த சேயை வளர்த்து விடு
இனி பிறக்கும் குழந்தையெல்லாம்
என் போன்று ஊனமில்லாமல்
என் தாயை போன்று ஈனமில்லாமல்
தமிழ் மண்ணாவது என்னை திணித்து
தன் தவறை திருத்தட்டும்

கேரளமே உனக்கு மட்டுமா குறுந்தகடு விடத்தெரியும் ?

குறும் தகடு வெளியிட்டு
குளறுபடிகள் செய்வித்து
அணை நீங்கள் உடைத்திடலாம்
ஆவேசமாய் பேசிடலாம்
எதிர் கட்சியும் ஆளும் கட்சியும்
இணைந்து நீங்கள் நடித்திடலாம்
தமிழ் திரைப்பட வரலாறில்
தங்க கிழமை முதன் முதலாய்
வெளிவரும் இப்படத்தில்
விழிகளையே நாம் வைத்து
நடிகையெல்லாம் நீரில் மூழ்கி
நனையும்  ஆடை நீச்சல் அடிக்க
தெரிவதெல்லாம் வெட்கம் இல்லை
தெம்பாய் இருக்கும் காமத்திற்கு
முதல்வன் வரை மூழ்கி கிடந்தது
முதல் தேசிய விருதை வழங்கிடலாம்
கண்ணீர் கணை நாம் தொடுத்து
காக்கும் அணைக்கு போர் புரிந்து
ஒற்றுமையின் வெற்றியினால்
உருவாக்குவோம் நீதி மட்டும்
சதி கூட நீயானாய் தமிழா
நீதியாக நிலை மாறும்
எழுத்து பிழையில்லை என் கவிதை
எழுந்தவா 'நீ' 'ச' தியில் எழுதிடலாம்
சட்டத்திற்கு "ச" மட்டும்
சட்டென்று  நீதியுடன்  தீயினை சேர்த்திடலாம்

வியாழன், 9 டிசம்பர், 2010

சாமி கிடா ?

அம்மா என்னை ஆடு மேய்க்க
அனுப்பிவைத்தால் இன்றுமட்டும்
சொந்தம் ஒன்று செத்திருக்க
சோகம் என்று அவள் போயிருக்க
ஊரைவிட்டு நெடுந்தொலைவில்
உயரமான சவுக்கு தோப்பில்
தன்னந்தனியாய் தவித்தேன் ஆடுபோல்
தத்தளிக்கும் ஆட்டு குட்டி போல்

வெட்ட வெளியில் கட்டாந்தரையில்
விண் மட்டும் மானம் காக்க
வெள்ளாடு கால் நீட்டி விழுந்திருந்தது
வெடிக்கும் , இடிக்கும் தன் குரலோடு
வேதனை சொல்லி வைக்க
பனி குடமும் பல சொட்டு இரத்தமுமாய்
பரவசமாய் பெற்றது குட்டிகள்

தொப்புள் கோடி வெளியில் வர
தொடர முடியா மூச்சினாலே
பனிக்குடத்தில் செத்திடாமல்
பாலுக்கும் மூச்சுக்கும் சத்திடாமல்
ஆட்டுக்குட்டி துடிதுடிக்க
ஐந்தறிவு எனக்கு ஆறறிவாய் மாற
ஆசையோடு பனிக்குடத்தில் கைவைத்தேன்

பிசுபிசுவென கொழகொழத்து
மொசுமொசுவென முடி வளர்த்து
மூடிவைத்த உயிர் யுடலை
முழுவதுமாய் வெளிக்கொணர
கைவைத்து அகற்றி விட்டேன்
கர்ப்பபையின்  அமிர்தத்தை
கர்வம் எனக்கு வந்திட்டது

கால்களை நேர் நீட்டி
கால் குளம்பை நகத்தால் வெட்டி
முகம் முழுவதும் வழித்துவிட்டு
மூச்சு விட நான் வழி செய்து
நிற்க வைத்து பால் கொடுக்க
நினைத்த நானோ யோசித்தேன்
கொட்டாவி விடும்வரையில் தாய் குட்டியை ஈனுமே

பனி குடத்தை தின்றுதான்
பசிபோக்கும் தாய்மையை
பூனை போன்று குட்டி போட்டு
பொறுக்கா பசிக்கு தின்னாமலே
இன்னொரு குட்டியை அது ஈன
இந்த குட்டியை பரிசோதித்தேன்
ஆண் குட்டி தலை குட்டி

கொஞ்சம் நேரம் பொறுத்திருந்து
குட்டியை முன்போல் அறிந்திருந்து
தலை குட்டியை தூக்கிவைத்து
தாயுடனே சீம்பால் ஊட்டவைத்து
தொண்டை இரண்டுக்கும் காய்ந்திடாமல்
தொடர்ந்து இரண்டுக்கும் ஊட்டவைத்தேன்
நான் தன்னந்தனியாய் பனிரெண்டு வயதில்

இரண்டாம் நாள் என்னிடம்
இரண்டு குட்டியும் துள்ளியது
துக்க நாளை படைத்து விட்டு
துரிதமாக வந்த என் தாயோ
எந்தன் சமர்த்தை பார்த்துவிட்டு
என் ஆட்டிலே பால் கறந்து
காந்தி பாலாம் காய்ச்சி தந்தாள்

கடுமையாக முறைத்து பார்த்தேன்
கடைசி முறையென எச்சரித்தேன்
உறுப்புகொடி போட்டமுதல்
உணவருந்தா ஆட்டை பார்த்து
பெருமருந்து கொடியினை
பிடுங்கி வந்து நான் போட்டு
என் தாயும் ஆட்டு தாயே ...

குட்டி போல்தான் நான் கூட
கோபம் கொண்டதும் நியாயமோ
மூன்றாம் நாளோ மேட்டு மீதும்
முட்ட வந்தது என்னிடமும்
சில நேரம் என் விரலை
சீம்பால் என சூப்பியது
பல்லிலா அதன் வாய்க்கு
பரம சுகமாய் தித்திததாம்

எந்த நாளும் அது குளிக்க வில்லை
இருந்தாலும் அதன் உடல் நாறவில்லை
மனிதன் போல் அது உழைக்கவில்லை
மறந்தும் உழைப்பை அது பழிக்கவில்லை
புல் பூண்டை தின்று வைத்து
பொறுமையாக அசைபோட்டு
தன்னுடலை பெருக்க வைத்தது

தடவி முட்டி தூக்கி வைத்து
தழுவும் பொன்னுடலை பரிசித்து
எத்துனை முத்தம் கொடுத்திருப்பேன்
என்னுடைய இரண்டு ஆட்டு குட்டிக்கும்
முப்பது நாளில் கயிறு கட்டி
முட்டி போட்டு மேய வைத்து
காயை கூட அடித்து வைத்தார்
காலம் விரைந்து ஓடியது


கார்த்திகை மாதத்தில் காய்ச்சலோடு
கடுமையாய் வந்தது மஞ்சள் காமாலை
சித்த மருத்துவம் செய்து பார்த்தும்
சிறிதும் குறையவில்லை நோயின் தாக்கம்
அலோபதி வைத்தியத்தில் அதிகம் செலவழித்து
அப்பாவின் கடன் போல் நோயும் வளர்ந்தது
அம்மா மட்டுமே குல தெய்வத்திற்கு
ஆட்டு கிடா  பலி கொடுக்க வேண்டிக்கொண்டாள்
மஞ்சள் காமாலை எனக்கு குறைந்திட்டதாம்

சித்திரை மாதம் வந்தவுடன் சேதி
சித்திக்கும் சொந்ததிற்க்கும் சொல்லியனுப்பி
பூசாரி கிழவனுக்கு பாக்கு வைத்து
புது வேட்டி சட்டையும் எடுத்து வைத்து
மல்லிபூ மாலையில் அலங்கரித்து
மறு கையில் அரிவாளை ஆதரித்து
ஆட்டு கிடா அதை ஓட்டிவந்தார்

அவசரத்தில் அதை பலியிட்டார்
அறுசுவையென படைத்தும் விட்டார்
பாட்டில்கள் எடுத்து வந்தால் பாவம் வரும்
பதுக்கி வைத்திருந்தார் நாட்டு சாராயம்
போதை ஏற்றி சொந்தம் போயும் விட்டார்
புரியா நானும் கிடா கறி உண்டேன்
முடிந்து விட்டதாம் சாமியின் நேர்த்தி

மறுநாள் முழுதும் வயிற்று போக்கு
மரணம் ஆகிவிட்டார் ஒரு சொந்தம்
காரணம் ஆனது சாமி குத்தம்
காயை அடித்த கிடாவை வெட்டியதால்
எனக்கும் ஒன்றும் ஆகவில்லை
இன்னும் பலருக்கும் இப்படியே
ஆனாலும் சொந்தம் இதை நம்பவில்லை

என் ஆத்தா சாமியை நிந்தித்தால்
இனி ஆயுளுக்கும் கிடாவை வெட்ட மாட்டேன்
தப்பை திருத்தித்தான் தண்டிக்கவில்லை
தவிக்க வைத்ததாம் சாமி குத்தமாம்
மருத்துவ கல்வியை நான் படிக்கையில்
மறந்து போன இந்த பழம் நினைவு
எட்டி பார்க்குது சாராய குத்தமென்று
இருந்தாலும் சாமியை  நம்பனுமோ தெரியலையே ?

திங்கள், 6 டிசம்பர், 2010

அவினாசி ஆரியமே ..............

அன்றொரு நாள் அவினாசியில் நான்
அலைகின்ற பொது எதிரில் வந்தாய்
கருணாம்பிகை கோவிலுக்கு செல்ல
கடைசியில் மனது தியானத்தில் நுழைந்தது

சிலம்பம் தன்னில் என் விரல்கள் சுற்ற
சிவந்த இரத்தம் கையில் ஒழுக நானோ
சோமனூரில் குருவின் அடியில் அப்போது
சொல்லாத வலியை மறந்து விட்டேன்

செவ்வாய் இன்று காத்திருந்து
செல்லும் கராத்தே பொறுத்திருந்து
தொடைகள் மீது இடிகள்  வாங்கி இன்று
தொடர்ந்த அடிகள் தெக்கலூரில் இனிக்கும்

கணிபொறி வகுப்பிற்கு செல்வதற்கு
கருமத்தம் பட்டியை தேர்வு செய்து
அவினாசி என்னை அழைக்கும்போது
அப்படிதானே இன்று வந்தேன்

முதல் நாள் வகுப்பில் மாணவனானேன்
மறு நாள் வகுப்பில் ஆசிரியனானேன்
கணணி அனுபவத்தில் காலம் என்னை மாற்றி
காசுக்காக கடமை என்னை சுற்றியது

முந்தி கொண்ட மாணவி நீயாய்
மூச்சு நிற்கும் ஆரியத்தின் சேயாய்
தாவணி தவிர்த்த நவீன அலங்காரத்தில்
தங்க தேராய் என் முன்னால் வந்தாய்

தியானம் பழகு தினமும் இறைவன் ஒழுகு
மயானம் செல்லும்வரை மாற்றாதே பண்பு
விவேகானந்தனும் ஓஷோவும் விளக்கிய வழியில்
விட்டா நகர்வேன் உன்னை உதறி ......

கருணாம்பிகை கோயிலுக்கு சென்றேன்
கண் மூடி தியானத்தில் நுழைந்தேன்
வரும் போது உருத்திராட்சை வாங்கி
வலது கையிலும் கட்டி கொண்டேன்

அடுத்த நாள் வகுப்பிற்கு வந்தாய்
அடிப்படை கணினியின் ஆசிரியன் நானோ
அழகே உன்னை மனதினால் தவிர்த்து
இகழா கண்ணினால் என் வகுப்பை தொடர்ந்தேன்

வளையல் ஓசை உனது தாளம் தட்ட
அலையும் காகிதம் குறிப்பேடு அடிகள் எடுக்க
கொலுசு சத்தம் குலுங்கி சிரிக்க
குறும்பாய் நீயோ என் பெயரை பழித்தாய்

காதல் வந்து இதய கதவை தட்ட
கனவு வந்து உயிர் பூட்டை யுடைக்க
இருண்ட வாழ்க்கை திரண்டு ஒழிக்க
என்னை ஏனடி எரிக்க வந்தாய்

பார்த்தவுடனே பளீரென சொன்னாய்
பள்ளி பெண்ணானாலும் தைரியமாய் கொன்னாய்
ஆசிரியன் முறையால் நான் அறம் பிறழாமல்
ஆரிய பெண்ணை உன்னை மறுத்தேனே

மறுநாள் நானோ மனதினால் செத்து
மாற்றலாகி நான் ஓடி வந்து விட்டேன் என்
தடம் பார்த்து நீ வந்தால் புரியும்  நான்
தவிர்த்தது உன்னை மறந்து எதனால் தெரியும்
தலைமை நீதி மன்றத்தின் நீதியும் அறியும்  .

மல்டிமீடியா* காதலியே

போட்டோஷாப்பில்*  செதுக்கி வைத்த
பொன்னான முகத்தழகி
கோரல் டிராவில்* கிறுக்கி வைத்த
கொடியிடை இடுப்பழகி
பெஜிமேக்கரில்* நிரப்பிவைத்த
பேசுகின்ற சொல்லழகி
அடோப் ப்ரிமியர்* ஆட்டிவைக்கும்
அருமையான பட்டழகி
பிளாஷ் அனிமேஷன்* துள்ளவைத்த
பெருமைமிகு நடையழகி
இல்லுஸ்ரேட்டர்* வரைந்து வைத்த
இணையான புருவழகி
வைரஸ்* மட்டும் என் இதயமென
வருந்த வைக்கும் காதலியே
காஸ்பர்ஸ்கையாய்* வந்திடடி உனக்காக
காத்திருப்பேன் காலம் முழுதும்            

*பிற மொழி சொல்    

வெள்ளி, 3 டிசம்பர், 2010

நட்பு தப்பு

உதிரம் பூ என்றேன் நான்
உதிரும் பூ என்றான் அவன்
நாங்கள் கூறிய பூ நட்பு !
நீங்கள் கேட்கலாம்
இது தப்பு ?
நினைத்து பாருங்கள்
தமிழனுக்கும் சிங்களவனுக்கும்
நடப்பில் உள்ள பூ
உதிரும் பூவா உதிர பூவா ?

வியாழன், 2 டிசம்பர், 2010

அதிகாலை சூரியன் என் கவிதை திருடினால் ?

பௌர்ணமி  நீ .............
அமாவாசை நிலவுக்கு
அதி காலை சூரியன்
எழுதிய கவிதையை
நான் திருடி விட்டேனாம்!

அழுது கொண்டிருந்தது
என்னிடம் அது இரவில்

நான் அதை சமாதானம் செய்தேன்
நாளைக்கு நீ கவிதை எழுது
நான் கவிதை எழுதாமல்
என் காதலியை உன் கவிதை
பார்க்க சொல்கிறேன் என்றேன்

பிறை நிலவு சிவந்து கொள்கிறதாம்
பெண்ணொருத்தி நாணம் போல
சூரியன் எழுதிய கவிதையை
இன்று நான் சொல்லிகொண்டேன்
நான் எழுதிய கவிதை எது

காதலி கனவை விட நீ பொய்யடி

இரட்டை  செம்பருத்தி ,பெண்ணே!
எனக்கும் உனக்குமாக பூக்கிறது .

இரவின் நட்சத்திரம், பெண்ணே!
எனக்கும் உனக்குமாக பிறக்கிறது.

நேற்றுதான் அமாவசை என்றாலும் நிலவு
நிகழ்த்தி விடுகிறது பௌர்ணமியை இன்று .

நடுக்கடல் அலையாய் பெண்ணே அது
நமக்காக கரைகளில் மோதாமல் இருக்கிறது.

குளிர் கூட தென்றலுடன் கோபித்து
கோடையின் நெருப்போடு குலாவி கொண்டிருகிறது
!
இப்படிதான் இன்றைய நாளில்
எனக்கும் உனக்கும் திருமணம் நடைபெறுகிறது!


நம் காதல் உன்னால் தோற்று போனால் கூட
என் கனவில் இதோடு எத்தனையோ முறையாய் ?

ஆனால்
உன்னை விட என் கனவு உண்மையடி

நாம் பிரிந்தாலும் நம் காதலை அது பிரிக்கவில்லையடி

நான் எனக்காக கல்லறை கட்டும்போது கூட
என் கனவை நினைத்து
உனக்காக திருமண மண்டபம் கட்டி கொள்கிறேன்

அங்குதான் உனக்கும் எனக்கும் திருமணம் நடக்குமென்று

இந்த கவிதை பத்திரிக்கை கிடைக்கும்போது
கவனமாக கனவின் விலாசம் தேடி வந்து விடு

பாசி படித்துறை நண்பனே

விரால் பிடிக்க தூண்டில் போட்டோம்
விடிவதற்குள் சென்று பார்த்தோம்
தூண்டில் அங்கு காணவில்லை
தொலைவில் எங்கும் அது தெரியவில்லை

நண்பா நமக்கு தோல்வியாச்சு
நம்ப தூண்டில் மாயமாச்சு
இன்னொரு மீன் பிடிப்பதற்கு
எனக்கும் உனக்கும் ஆசையாச்சு

மீன் பிடித்தால் தரித்திரம் என்று
மீசை சித்தப்பா நமை  அடித்த போது - நாம்
வெட்டிய குழிநீரில் விட்டு விளையாடுவதற்கு
விராலின் மீதுதான் ஆசையாச்சு

வீட்டுக்கு சென்று சாப்பிட்டு விட்டு
வேறொரு தூண்டிலோடு வருகிறேன்
கால்கள் உனக்கு பேருந்தாய் மாற
கைகள் உனது ஓட்டி சென்றது

அங்கு மட்டும் நான் தனியாக அமர்ந்து
 அழுது கொண்டே ஆழ குளத்தினை பார்த்தேன்
நண்பா நம்  தூண்டில் இழுத்து கொண்டு
நடு ஆழத்துக்கு விரால்  மீன் செல்வதை கண்டேன்

கால் சட்டை கழட்டி கல் ஒன்று வைத்தேன்
கரணம் அடித்து தண்ணீரில் குதித்தேன்
தூண்டிலின் தக்கையை துழாவி பிடித்து
துறு துறு வென இழுத்துவந்தேன்

பாய்ந்து படியேறி பார்க்கின்ற போது
பாம்பு ஒன்று பெரிதாக மாட்டிகொண்டிருந்தது
பச்சை காட்டாமணகால் அடித்து கொன்றேன்
பாம்பு விழுங்கிய முள்ளை எடுக்க நினைத்தேன்

சாலையின் ஓரமாக படுக்கவைத்து
சற்று நெளிவது போன்றே செடியில்
தலையை மறைத்து வைத்தேன் ஊர் எல்லையில்
தண்ணீர் பாம்பு என்று தெரியாதிருக்க

பேருந்து சென்றால் நசுக்கி விடும்
பிறகு நாம்தான் முள் எடுக்கலாம்
கணக்கு ஒன்று கண்டு வைத்தேன்
காட்சி வேறாய் மாறி போனது

ஊருக்கு புதுசாய் வந்தவன் ஒருவன்
ஓட்டிவந்தான் இருமாட்டை கையோடு
தண்ணீர் பாம்பை கண்ட மாடுகள்
தலை தெரிக்கவே மிரண்டுதான் போயின

ஓட்டம் பிடித்தன ஊரைவிட்டு ஓடின
ஓட்டிவந்தவன் கீழ்விழுந்து எழுந்தான்
உற்று பார்த்தான் செத்த பாம்பைதான்
ஒருவழியாக தன்னை தேற்றினான்

போட்டு வைத்தவனை 'பொறம்போக்கு' ஏசினான்
போடா நீதான் மனதிற்குள் ஏசினேன்
மாட்டை பிடிபதற்க்கு மான் வேகம் ஓடினான்
மறைந்திருந்த நானோ வீரனாக வந்திட்டேன்

மாட்டை பிடித்துதான் அவன் பெயர்
மகராசன் மீண்டும் வந்திட்டான்
மறைந்து கொள்வதற்காய் மறுபடியும் ஓடினேன் 
மரத்தின் பின் நின்று மனகிளர்ச்சி கொண்டிட்டேன் 

இரண்டு மாட்டையும் சேர்த்து பிணைத்திட்டான் 
எதிரில் இருக்கும் வேரடியில் இழுத்து கட்டினான் 
நாற்றமடிக்கும் வயிற்றை பிடுங்கும் நடந்து செல்வோருக்கு 
நல்லது செய்வேன் என்று பாம்பை அவன் தூக்கிட்டான் 

செட்டிகுட்டையின் சூரை முள் புதரில் 
சென்று அவன் வீசிட்டான் பாழடைந்த கிணற்றில் 
பதறி நான் போனேன் பதுக்கி இருந்தே 
பயித்தியம் பிடிக்குமென வேறோர் வழியில் சென்றேன் 

இடையில் இருந்த பனைமரத்தை பார்த்திட்டேன் 
எனது தலையினில் மெல்ல நான் கை வைத்தேன் 
வலிக்கும் பஞ்சை நான் வருடியும் பார்த்தேன் 
வடிந்த இரத்தத்தை கொஞ்சம் நான் யோசித்தேன் 

பனைங்கொட்டை பொறுக்கி பந்தை நாம் அடித்தோம் 
பார்த்த மட்டைபந்தில் சச்சினாய் நடித்தோம் நீ 
அடித்த பந்து ஆறுக்கு பறக்காமல் நேற்று 
ஆவேசமாக என் மண்டையை பிளந்தது 

ஆவென்று அலறி துடித்தேன், ஆருயுர் நண்பனே 
ஆபத்தை உணர்ந்திட்டாய், ஆடை அவிழும் கையென  விரைந்தாய்
கோரை பிடுங்கி நீ கொட்டும் என் இரத்தத்தில் நான் 
கோபப்படுவேன் என்று நீ அழுது அதன் சாற்றை ஊற்றினாய் 


வேறு வழியில்லாமல் வீட்டிற்கு சென்றேன்
விளக்கமாக அம்மாவிடம் சொன்னேன்
திருட்டு மாங்காய் அடிக்க வந்தவன்
தெரியாமல்தானே என் மண்டையை உடைத்தான்

தப்பு செய்தது நாங்கள்தான் என்றாலும்
தகப்பனிடம் சீக்கிரம் வரச்சொல்லி அனுப்பினால்
எங்கப்பன் என் விளக்கத்தை நம்ப மறுத்தாலும்
என்னை அழைத்து மருத்துவனிடம் சென்றார்

அன்று மாலை நீதான் வந்தாய்
அழுது அழுது உன் கண்கள் வீங்கியே
உன்னுடைய கைகளில் உரிக்காத ஆரஞ்சு
உரிக்க கொடுக்க வாய்த்த தப்பிலாத நட்பு பிஞ்சு

அன்று இரவே மீன் பிடிக்க நினைத்தோம்
அடுத்த நாள் விடுமுறைக்கு நான் விளையாடலாம்
அழைத்தாய்
ஆயிரம் குஞ்சுக்குமேல் ஆணும் பெண்ணுமாய்
அடர்த்தியான தாமரையில் உலங்கு வானூர்தியாய்

ஏரியில் இருந்த விராலை பிடித்து வந்து
எங்கள் தங்க சுரங்க கேணியில் வளர்க்கலாம் என்று
தெற்குதெரு மின் விளக்கில் தெரிந்து கொண்டு
தெரியாமல் போட்டு வைத்தோம் தூண்டில் ஒன்று
...............            .......................           ........................
சூறை முள் புதரில் தேடிபார்த்தேன்
சுத்தமாய் அங்கு பாம்புமில்லை
அடி ஆழத்திற்கு அது சென்றிருக்கும்
ஆற்றாமையினால் வருந்துகின்றேன்

நண்பா நீயோ உன் அம்மாவிடம்
நான்தான் மண்டையை உடைத்தேனென
ஐம்பது பைசா காசு வாங்கி அருமை நண்பன் எனக்கு
அதற்கான மருந்தென தூண்டில் வாங்கி ..........


பாம்பு கிடந்த சாலையில் பார்த்தேன்
பாதி மண்ணில் ஐம்பது காசு கிடந்தது
அவன் விழுந்து எழும்போது அந்த காசு
அவன் அறியாமல் விழுந்திருக்கும்

கீழே கிடந்த ஐம்பது காசுக்கு
கெண்டைமீனின் தூண்டில் வாங்கி
படித்துறையில் நான் போடும்போது
பதுங்கி வந்து என்னை மிரள வைத்தாய்

என் கையில் ஐம்பது பைசாவை கொடுத்து
இன்னொரு தூண்டில் வாங்கி வரச்சொன்னாய்
நான் கையில் வைத்திருந்த தூண்டிலை வாங்கி
நடு தண்ணீரில் போட நீ முயற்சி செய்கையில்

பாசி உன்னை வழுக்கியது
படித்துறை உன்னை தள்ளியது
மூங்கில் ஊறவைத்த கட்டைக்கு
மூழ்கி விழுந்துவிட்டாய் என் செய்வேன்

பத்து  வினாடிகள் சென்றிருக்கும்
பருத்த விரால் மீன்  நீ விழுந்த இடத்தில்
பக்கத்தில் வந்து சென்றதே
தண்ணீர் எல்லாம் சிவப்பாய் மாறி

தத்தளிக்கும் உன்னிடம் சூழ்ந்து கொள்ள
தண்ணீரில் நீயும் மூழ்கி போனாய்
தாவி  நான் தொண்டை  கிழிய கத்தினேன்
தாமதம் இல்லாமல் வந்து சேர்ந்தனர் கூட்டம்

உன்னை அவர்கள் தூக்கும் போது
உதிரம் ஒழுக கரையில் போட்டார்
உயிர் நிலையில் மூங்கில் குத்தியதால்
உயிரைவிட்டு என்னை விட்டு இறந்து போனாய்


இறந்த பிரிவு ஆறுவதற்குள்ளே
இடியாய் என் மேல் பழியும் வந்தது
மண்டையை நீ என்னை உடைத்து விட்டதால்
மனதில் வெறி கொண்டு தள்ளி விட்டேனாம்

இறக்க வைத்ததும் என்னுடன் கொண்ட நட்பால்
என்னருமை நண்பனே எழுந்து வந்து சொல்லேன்
உன்னால் எப்படி உண்மையை சொல்ல முடியும்
உறுத்தி இருக்கலாம் உன்தாயின் புலம்பல்

தூளி கட்டியே தூக்கி போனார்
தொங்கும் சோகத்தை ஆட்டி நீ போனாய்
உன்னை புதையலாய் புதைத்து விட்டார்
ஓடி வந்து விட்டேன் அலிபாபா போலே

என்னை இழுத்து என் தாய் சென்றாள்
என்னிடம் சொன்னால் நீ பிடித்து கொள்வாய்
ஆனாலும் நண்பனே அன்று முதல்
அவதி பட்டேனே நீ பிடிக்க வில்லையே

சுடுகாடு வந்து செல்லும் தென்றலும் சுட்டது
சோகத்தோடு வந்து செல்லும் என்னிடம் கேட்டது
சுத்த நட்பு எப்படித்தான் செத்து போனது தெரியல
சொர்க்கம் செல்லும் நரகத்திலே சுவடும் யாருக்கும் புரியல .........................