பக்கங்கள்

திங்கள், 29 நவம்பர், 2010

காதலி தெரியுமா உனக்கு ?

நீ நடந்து போகும் காலடி வழியே ,
நான் கடந்து போகும் போதுதான்
உன்  காலடி இனிப்பில் உணவருந்தும் எறும்பு
உரக்க உயிர் விடும் போது சொன்னது
என் காலடி பட்டு நசுங்கி
இன்று நான் நாளை நீ !


அப்போது தெரியவில்லை அதன் மொழி
இப்போது புரிந்து போகிறது
கல்லறை தனிமையில் கைநீட்டி என்னிடம் அந்த
 எறும்பு சொல்வதால்
இனிக்க வாய்த்த உன் காலடியும்
என் இதயம் துடிக்க வாய்த்த இறுதிஉன்  சொல்லடியும்
இரு உயிர்களை பறித்து விட்டதடி

சனி, 27 நவம்பர், 2010

பிளாட்டின பதக்கங்கள் பேசியது ஆசிய கபடியில் அந்த அலை வீசியது !

நாங்கள் வெல்வதற்காக ,
நீங்கள் தோற்கவில்லை !
நீங்கள் விளையாடுவதற்காக,
நாங்கள் வெற்றி பெற்றோம் !

ஈரானோடு மோதியதால் நாங்கள்
தங்கம் பெறவில்லை ,
வைர மண்ணில் கபடி தினமும்
ஊறியதலேயே நாங்கள் தங்கம் வென்றோம் !

ஆறு முறை ஆசிய விளையாட்டிலும்
தொடர்ந்த தங்கம் இது  இல்லை  பல
நூறு யுகம் பேசிய மற விளையாட்டின்
சொச்சம் தான் இது

நண்பா ! உன் அங்கம் தொட்டு ,
இந்த தங்கம் வென்றாலும் நம்மை
பங்க படுத்தும் தேச பிரிவுக்கும்
கபடி மூச்சிலும் ,கடைசி வீச்சிலும்
காப்போம் சகோதரத்துவம் !

இந்தா எங்கள் ஆறு தங்க பதக்கமும் ,
அதோடு மகளிர் பதக்கமும் ஏழும் வைத்துகொள் !
மற விளையாட்டு மட்டும் இருந்தால் போதும்
எங்கள் மண்ணையும் பொன்னாக்கி
மாட்டிகட்டுவோம் உங்கள் கழுத்தில் பதக்கமாக!

"நீ" "தீ"யும் நீதியும்

"நீ"    "தீ" ஆனதாலே
நீதி கூட தலை வணங்கி 
நிற்கிறதே நின் சிலைக்கு 
" முத்துக்குமார் "

தீதகற்ற தீ குளித்தால் முத்துக்குமார் நீ ஈகை இயற்ற உடல் அவிழ்த்தால் ?

முத்துக்குமார்
உன் பெயரை சுமந்தால் கூட
அவமானம் என்று நினைத்த
நாளிதழ், வாரஇதழ், மாத இதழ்
என் கவிதை எரிவதை பார்த்து
கைகொட்டி சிரித்து கொள்கின்றன
அவைகளுக்கு தெரியுமா உன்னை
போலவே என் கவிதையும்
தீகுளிக்கிறதே தமிழனின்
அவமானத்தால் என்று

உடல் ஈகை வள்ளல்

பல்லவன் சிலை கண்கள் கூட  உன்னை
பார்க்க துடிக்குதடா !
நல்லவன் சிலை உன்னை காண அது 
நடந்து வந்ததடா !
சாக்கடை தலைவன் அரசியல் சிலைக்கு உன்னை 
சகிக்க முடியலைடா!
காகம் தலையில் கழிந்தால் கூட அதற்கு 
கண்ணை மூட தெரியலைடா!
இமய மலையும் பாறை பெயர்த்து உன்னை 
ஏற்றி சிலையில் வைக்குமாடா !
எட்டப்பன் சிலைகள் இருந்தா உனக்கு 
ஏளனம் செய்யுமாடா !
காவல் சிலைகள் கையை மூடி நிர்வாண 
குற்றம் மறைகும்டா !
சட்ட சிலைகள் கையை கொடுத்து உன் 
சாவின் நீதி அழிக்குமடா !
முத்துக்குமார் சிலைகள் என்றால் தமிழ் சங்கம் 
முழங்கி எட்டு திக்கும் ஒலிக்குமடா !
சிங்களங்கள் சிலையாய் மாறி சித்தம் கலங்குதடா உன் 
சிறப்பை நொந்து தீயை மூட்டி அது ,
சீக்கிரம் செத்து அழியுமடா !
ஈழம் சீக்கிரம் எழுமடா, உடல் ஈகை வள்ளலடா உன் 
சிலை போரை முடிக்குமடா !





வியாழன், 25 நவம்பர், 2010

பள்ளித்தோழி

எச்சில் பண்ணி நீ கொடுத்த
இனிப்பு இன்னும் தித்திக்குதடி
எங்கிருந்தாலும் நீதான் நினைப்பாய்
எத்தனை காலமும் அது கரையாதுடி

குரங்கு மூஞ்சை அழகாய் காட்டி நீ
கோலம் போட்டாயடி முகத்தில்,
எந்தன் முகமோ உந்தன் கண்ணின்
கண்ணாடியில் இப்படியா மாறுமடி

பாவாடை சட்டை போட்டு வந்த நீ
பறிக்கா முல்லையடி நான்
பழிச்சா போதும் என்னை சுற்றும்
கொடி பாம்பின் தொல்லையடி நீ

ஆணும் பெண்ணும் பேதமில்லா நித்தம்
அன்பில் மிதந்தோம்மடி ஆற்று நீரில்
நீந்தி நாமும் சின்ன மீன் பிடித்தோமடி
செத்த மீனை பாடை கட்டி எரிச்சு வைசோம்மடி

சிலந்தி வலையில் சிக்கிகொண்ட உன்
காலுக்கு செய்து போட்டேனடி
சின்ன சின்ன பூக்கள் கோர்த்த
சிறப்பு கொலுசு அது தானடி

நாயுருவி வித்தை காட்டி யுத்தம்
செய்தால் இரத்தம் கொட்டுமடி
என் நெற்றியில் வைக்கும் வீர பொட்டாய்
உன் விரலோ சுட்டுமடி  என்னை

என்  மனைவிக்கும்  உனக்கும்
பிறந்த குழந்தைகள் இப்போ
கணினியில் ஆடுதடி அதில்
கணினி வென்றால் என்
கன்னத்தில் அது கை வைத்து
கலங்கி போகுதடி

நம் நட்பு தோற்றகதையை
சொல்லி இப்படி சிரிக்க வைசேன்டி
இந்த காலம் தோற்று
நம் குழந்தையோடு நம்மை
மீண்டும் விளையாட வைக்குமாடி

வளமான வாழ்வுக்கு

தாலிக்கு இரண்டும்,
மூன்று முடிச்சு போடுவதெல்லாம்
முடிந்து கொள்ளட்டும்
ஒரு குழந்தையோடு


குறிப்பு :(இரண்டும் :ஆணும், பெண்ணும் )

உன் காதல் தேர்வில் ?

கரும் பூக்கள் காட்டி வா உன்னை
காதலிக்கிறேன்  என்றாய்
உன் இரு பூக்களை காட்டி கண்ணே
உன்னுள் ஒட்டி கொண்டேனடி
என்னை இதயமாய் இரசித்தாயடி

காதலுக்கு கண்ணில்லை


கரும் பூக்கள் கொண்டு வா
காதலிக்கிறேன் என்றாய்
இரு பூக்கள் என்றே உனக்கு
என் கண்ணை எடுத்து விட்டேன்டி
நான் உன் மேல் கொண்ட காதலால்

காதலி என் இதயம் எடுத்து உன் கணவனுக்கு வை நம் காதல் தோற்காது !

இறக்கும் முன்னே எழுதி வைத்தேன்
இன்னொரு உயில் கவிதை என்
இதயம் எடுத்து உன்னுடையவனுக்கு
பொருத்திவிடு  எனக்கு அதுபோதும்
உனக்கு கூட காதல் பழியில் உயிரும் நோகதடி
உன் கணவன் கூட நம் காதலில் உச்சி குளிர்வான்டி

காதலி போதை ஏற ஏற நான் போட்டு உடைப்பேன்டி

போதை ஏற ஏற நான்
போட்டு உடைப்பேன்டி
நான் போகாத கல்லறைக்கு
உன் இதய கல்ல சுட்டு வைப்பேன்டி

அரைச்ச சந்தனம் நெற்றியில் பூசி நீ
அழகை கூட்டி வைச்சவடி அப்போ
ஆண்கள் எல்லாம் பயித்தியம் என்று
இப்போ பேசி சிரிச்சவடி

கைபேசியில் தவறிய அழைப்பை
தினமும் தந்து தவிக்க வைச்சவடி
இப்போ புறம் பேசி விட்ட காதலுக்கு
என் தலைஎழுத்த கிறுக்கி வைச்சவடி

நான் சேர்த்த காசு உன்
சேலை சொல்லும் அது
தூக்கு மாட்டிகிட்டதடி
அது தெரியாமல் தானே
வானவில் வழியில் எனக்கு
மழையாய் அழுது தொலைக்கிரதடி

டாஸ்மாக் கடைக்கு எதிரில்
எனக்கு சாமிக்கு நேர்ந்த வேட்டியெல்லாம்
இப்போ சந்தனம் மண் பூசுதடி
கட்டாந்தரையும் சாக்கடையும் கூட
எனக்கு கடவுள் தெரியுதடி

உன்னை தியானித்த வழியில்
என் இயமம் எல்லாம் நிர்வாணம் ஆனதடி
எங்கள் தெரு நாய் கூட
என் மேல் தீர்த்தம் விட்டதடி

இப்படி எனக்கு ஞானம் பொறந்தால்
நான் இன்னொரு புத்தனடி
அன்பை மட்டும் நான் காசக்கினால்
நீ ஆயுள் கடன்காரி , உன்னை
அடைச்சு வைச்சு இதய சிறையில்
ஆயுள் கைதியாக்கினால்
இந்த காயம் ஆறாதடி

அன்பின் வகைகள் இரண்டுண்டு
உன்னால் அறிந்து கொண்டேனடி
ஆண்கள் அன்பே மேல் என்று
நான் அறிவித்த ஒன்றுடி

பெண்கள் அன்பை பிரித்து வைத்தேன்
அன்னையென்றும், சகோதரியென்றும்
உன்போல் பேய்களுக்கு புரிந்தால் போதுமடி
உன்னால் இன்னொரு ஆணும் பிழைப்பாண்டி

புதன், 24 நவம்பர், 2010

நீயும் நீரும் ஒன்றே

நீ எரிந்ததை பார்த்தே
நெருப்பு கூட இனிமேல்
நீர் என்றே நினைத்து
அணைந்து போகுமாம்
அன்பு நண்பா முத்து குமார் !

நீயென் தோழன் முத்து குமார் !


உன் சிலை எழும் நாளில்
ஊரில் உள்ள எல்லா சிலையும்
தானாய் தாள் தொட்டு
தமிழனென்று நிச்சயம் கும்பிடும்

இதய காதலி

நீ தானம் கொடுப்பாய் என்பதனாலேயே
நிதானம் இன்றி துடிக்கிறது என் இதயம்

தானம் என்(ன)புது மொழியோ ?

நீ தானம் கொடுப்பதைவிட
நிதானமாய் இருப்பதை
எடுத்துக்கொள் என்னைப் போல

தோழியா, காதலியா தெரிந்து கொள் கைபேசி

காதலிக்கும் தோழிக்கும் கைபேசியே
 உனக்கு தெரியுமா வித்தியாசம் ?

தவறிய அழைப்பு தருவது காதலி
தவறாமல் அழைப்பு தருவது தோழி

தண்டவாள காதல் கூட தாலி கட்டி கொண்டதடி

இணையா காதலென்று
இரயில் தண்டவாளங்களுக்கு
எழுதிய என் கவிதையை
திருத்தி கொள்கிறேன் பெண்ணே
இரயில் விபத்து தண்டவாளத்தில் அது
இணையும் என் மரணம் போன்று

ஆபாச சுவரொட்டி

ஆபாச முத்தத்தில் கொஞ்சமாய் கலந்து
அரைகுறை ஆடையுடன் கொஞ்சமாய் களைந்து
தினமாக களித்ததால் தினுசாய் வலித்ததாம்
தீராத நோயென்றே எயிட்சும் வந்ததாம்
என் வீட்டு சுவர்கள் என்னை
இடித்துதான் சொல்லியது
எவர்க்கும் அறிவில்லை என்ன நான் செய்வது

தமிழனின் திரை விமர்சனம்

அசினின் அறக்கட்டளையில்
ஆறிபோகிறது திரை க்கண்கள்
இங்கு மட்டுமில்லை இலங்கையில் கூட

கவிஞனின் கேள்விகள்

எங்கள் மரணத்திற்கு பின்னால்
உங்கள் மரண சான்றிதழிலாவது
மாற்றி திருத்தி கொள்ளுங்கள்
மானமுள்ள தமிழனென்று
ஈழத்து கவிஞன் எனக்காக
எழுதிய இறுதி கவிதையிது

மாவீரர் செய்தி

வெட்கம் கெட்ட பூமி கனியில்
விழுந்து தொலைத்து விட்டேன்
துக்கம் கொண்டு என்னுடல்
தூய்மையாக அழுகி போய்விட்டேன்
செரிக்க வந்த புழுக்கள் கூட
சிங்களம் சிரிச்சு நொந்ததடி
சேதி தெரியுமா சின்ன கிளியே
மீண்டும் சீக்கிரம் பிறப்பேன்டி
மீண்டு ஈழ விடுதலை கொடுப்பேன்டி  

செவ்வாய், 23 நவம்பர், 2010

காதலி சொல்லடி

இரண்டு நிலவு வேண்டாமென்றே
தேய்ந்து கொள்கிறதாம் நிலவு இரண்டும்
பௌர்ணமியிலாவது பலிக்கட்டுமென்று
எழுதி வைத்தது நீயா நானா ?

அகம் புறம்

கூசாமல் சொல்கிறாய்
உன் 'மேல்' காதல் இல்லையென்று
உற்று கவனித்து திருத்தி கொள்கிறேன்
உன்'னுள்' காதல் உள்ளது என்று

காதலி காற்றுக்கும் என் மூச்சின் கவிதை தெரியும்

உன் வீட்டில்
கார்த்திகை தீபம்
அணைப்பதெல்லாம்
காற்று அல்ல
என் மூச்சு

என் இதயத்தில்
ஏற்றிவிட்டு
ஏனடி உன் வாசல்
அகல் விளக்கு

பாரதி உன் கவிதை பால்

பாரதி பழகி கொண்டிருக்கிறேன் யுத்தம்
பழக பழக புளிக்காதென்ற
தமிழனின் வெற்றிக்காக அப் 'பால்'  

நல்ல எண்ணம் மறக்கும்

பெருங்கவிதை எழுதுவதற்கு
சிறுக சிறுக சேர்த்துவைத்தேன்
ஒவ்வொன்றாய் உதிர்ந்து போகிறது
ஒற்றுமையில்லா மனிதனை போன்றே

திங்கள், 22 நவம்பர், 2010

ஏழையின் வரவு செலவில்

உப்பு கூட வாங்குவதில்லை
வியர்வையை காய்ச்சி கொள்கிறோம்
விலைவாசி பிரச்சனையில்

உலக அழகி போட்டியும் நீயும் ?

நீ எந்த அழகி போட்டியிலும்
கலந்து கொள்வதில்லை
ஏனென்றால் நான் அழகாக இல்லை என்பதாலேயே ?

இந்தியாவில்

புலிகள் சரணாயலாம் கூட இங்கு
போர் கோடி தூக்கும்
சிங்கள சிம்மாசனம் என்று
சிறப்பு பெயர் வைக்க சொல்லி
சீனத்து கைதிகளின் கிண்டல்
செந்தமிழன் எனக்கு மட்டும் கேட்கும்

கார்த்திகை தீபமவள்

கார்த்திகை தீபமன்று
கன்னி நீ கட்டி கொண்டாய்
தாவணி பாவடையை
தமிழனின் மரபென்று

அங்கு நான் வந்திருந்தேன்
அரைக்கால் சட்டையுடன்
என்னை நீ பார்த்திருந்தாய்
எண்ணெய் நீ ஊற்றுகின்றாய்

அகல் விளக்கு திரிகளெல்லாம்
அழகாய் தான் எரியவைத்தாய்
இன்னும் ஒரு விளக்கு குறைய
என்னிடம் கேட்கின்றாய்

கண்கள் தான் சத்தமிட
கன்னங்கள் சிவந்து விட
உதடு மட்டும் உயிரெடுத்து
உண்மையாக மௌனிக்க

பின்னிருந்து அழைப்பதெல்லாம்
பெரியண்ணன் எனத்தெரிந்து
அகல் விளக்கு எடுத்துவர
அகலுகின்றாய் அங்கிருந்து

இதய விளக்கு என்னோடு
எரியாத புதிரோடு
புரியாத கோலமென்று
போய்வருவேன் என்று சொன்னேன்

வேட்டி கட்டி சட்டை மாட்டி
வேகமாக உன் வேட்டை காண
நான் வந்த நேரத்தில் அகல் விளக்கு
நன்றாய்த்தான் எரியுது பின்னே

நீ ஏற்றி வைத்த அகல் விளக்கு
நிக்காமல் எரிய கண்டு எனக்கு
புகை போகும் காது வழியில்
புரியாது கனவின் விழியில்

இங்கு நீ எப்போது வருவாய்
என் வீட்டில் காத்து கிடக்க
கனவு வீடு இருண்டு கிடக்கும்
கன்னி கார்த்திகைக்கும் காத்து கிடக்கும் !

அடிடா மச்சான் ?

அலுவலகம் ஒன்று  திறந்து  வைத்தேன்
அடியாள் தேவை விளம்பரத்தில் சொல்லிவைத்தேன்
முன்னதாக காவல்துறைக்கும்
 மூத்த நீதி துறைக்கும்
அழைப்பிதழ் அனுப்பி வைத்து
ஆட்சி அதிகாரத்தில் திறக்க வைத்தேன்

தென் தமிழக திசையிலிருந்து தேடல் கொண்டவனும்
தெரியாமல் சிறையிலிருந்து நேற்று வந்தவனும்
வடபுல கொலைகளில் பல
வழக்கில் சிக்கிகொண்டவனும் வந்தார்கள்

மேலை நாட்டு  துப்பாக்கி மேற்கில் பதுக்கி வைத்தவனும்
கீழை கொள்ளை பலதை செய்து கீர்த்தி பெற்றவனும்
முன் அனுபவன் பெற்றவன் என்று முதலில் வந்தான்

பின் அனுபவம் பெறுவதற்காக பிறகு வந்தவனெல்லாம் இது
பிழைத்து கொள்ளும் வழியென்று தெரிந்து கொண்டானாம்
உற்று நான் கவனித்து உட்காரவைத்தேன்
உரையாடும் சாக்கில் இதை தெரிந்து கொண்டேன்

வழக்கறிஞர் தொழில் படித்த வாலிபன் கண்டேன்
வாழ்க்கை தொழிற்கல்வியின் சில தோளை கண்டேன்
இறுதி காவல் தேர்வில் எழுதிய இளைஞன் என்றோர்
எல்லோரும் முடிவில் தோல்வி கண்டவராம்

கலை கல்லூரி மாணவனும் வந்து கலந்து கொண்டனர்
காசுக்காக பாதி நாளில் வந்து செல்வேன் என்றனர்
பொறியியல் கல்லூரி கட்டமைப்பில் உளுத்துபோன
போய்விட்ட பாக்கி தாளுக்காக பணம் திரட்ட
வந்து நின்ற இளைஞன் கையில் கொரிய கைபேசி
வாலறுந்த நாயை போன்று கத்துகின்றது

என்  நிறுவன வேலையைத்தான் கூறுகின்றேன்
எப்படித்தான் பணி இருக்கும் தெரிந்து கொள்ளுங்கள்
பொறம்போக்கு நிலங்களை பட்டா போட்டு
புதிய தொழிலாய் செய்பவர்களை
கண்டு நீங்கள் கழுத்தருத்தால் உம்மை
காவல் துறையின் தலைமை பதவிக்கு உட்காரவைப்பேன்

நடை பாதை வியாபாரியிடம் நாயாய்
நடந்து கொள்ளும் மாமூலுக்கு
தருகின்ற காசை நீங்கள் தட்டி பறித்து எட்டி உதைத்து
தர்மத்தை நிலை நாட்ட அந்த கூட்டத்தை
ஒழித்து விட்டு வந்து விட்டால் உங்களுக்கு
சுங்கதிலே வேலையுண்டு சொல்லிவிட்டேன் செய்வீரோ

அரசியல் தலைவனுக்கு அரிவாள் செய்யும்
அர்ச்சனை செய்யும் பூசாரியையும்
தொண்டர் கூட்டம் தோளைவெட்டி
தொலைத்து விட்டு வந்திடுங்கள்
தண்டனைகள் வராமல் தான்
தலைமை நீதிபதி பணியினை உங்களுக்கு தந்திடுவேன்

மணல் கொள்ளை மந்திரியையும்
மாநகர பேருந்தில் ஏற்றி
விலைவாசி வேகம் போலே
வெடுகென்று கொன்றிடுங்கள்

முதுகில்லா பல முதலமைச்சர்
முற்றுகையிடும் குடும்ப கூட்டம்
சக்கரவழியில் சுற்றி வந்து
சாவினை தான் தேடிக்கொள்ள
தமிழினை கொன்று போடும்
தற் பெருமையையும் அழிதிடுங்கள்

வேலையில்லா இளைஞரெல்லாம்
சேலையில்லா பெண்ணை காணும்
தொலை காட்சி அலைவரிசையையும்
துரத்தி நிற்கும் இணையதளத்தையும்
எரித்து விட்டு வந்திடுங்கள்
என்னருமை அடியாட்களே

எதிர்க்கட்சி ஊழலெல்லாம்
எங்களது ஊழல் போலே
கொஞ்சம் கூட குறைச்சலில்லை
கூட்டணியில் பங்கு போடும்
குழப்பத்தையும் கண்டு நீங்கள்

சாக்கடையில் இட்டு நீங்கள்
சரித்திரத்தில் புதைத்து விட்டு
வந்திடுங்கள் வழக்கில்லை
வாழக்கையுண்டு சிறையிலில்லை

ஒன்றுக்கு வருவதென்று
ஒருவன் சென்று விட்டான்
தண்ணீர் தாகமெடுக்குது இன்னொருவன்
தலை குனிந்து சென்று விட்டான்

வயிற்றை கலக்குதென்று பலர்
வாசல் படிக்கு தாவி சென்றார்
ஒற்றை ரூபாய் தொலை பேசியில்
உத்தரவு கேட்டு விட்டு வந்திடுவேன் என்று
சொன்னோர் இன்னும் பலர்
சொல்லி விட்டு சென்று விட்டார்

எஞ்சியது எழுத்து மட்டும்
எப்படி நான் என் அலுவலகத்திற்கு
மாத வாடகை தந்திடுவேன்
மனதிற்குள் கவலை கொண்டேன்

பள்ளி கூடம் திறந்தொரு
பாடத்தில் மேல் உள்ளவை சொல்லித்தந்தால்
சிறப்பு கட்டணம் சேர்த்தொரு பெரும்
செல்வந்தனாய் மாறி போவேன்
எண்ணம் நான் கொண்டு விட்டேன்
எழுதிவிட்டேன் தமிழக தலைவிதியை

விலைவாசி

தாகம் எடுத்தது
தேநீர் வரவழித்து
குடித்து கொண்டேன்

நவீன குடைகள் நாளைய மழைக்கு தேவையில்லை ?

நவீன குடைகளுக்கு
நாங்கள் எழுதும் கவிதை
கீற்று தான் கிறுக்குகிறது
கீழ்வானத்தில் கிண்டல் அடிக்கிறது

முன்பு நாங்கள் முடைந்து கொள்வோம்
முதுகில் நாங்கள் ஏறிகொள்வோம்
மாசத்தில் மூன்று நாட்கள் மனிதர்கள்
மாட்டிக்கொள்ளும் சட்டையாவோம்

குறைந்து வரும் ஆண்டுகளில்
கூறிகொள்வோம் இரண்டு திங்கள்
அடைமழை ஆடையென
ஆனதெல்லாம் மழைக்காலமென்று

மறந்துதான் போயிருக்கும் எங்கள்
மாற்று குடைகளை கண்டுதான்
வெயிலுக்கு மாட்டிக்கொள்ளும்
விளம்பரத்தில் இருந்தாலும்

காவேரியும் எதிர்த்து வரும்
கடல் நீர் நிரம்பியதால்
எந்த ஏரியும் வறண்டுவிடும்
இப்போது தான் தூர்வார்வதால்

காலம்தான் மாறியது
கடைசியில் தான் தெரியுது
புகை போகும் வானத்திலே
போவதெல்லாம் மேகமென்று

அழுவதுதான் தூரலாகும்
அதற்குகூட மாநகரமெங்கும்
மேம்பாலம் பெயர்ந்து விழும்
சுரங்கபாதை சூழ்ந்து கொள்ளும்

தார்சாலை தவிடாகும் மழை
தண்ணீர்தான் அதை சே (சோ )றாக்கும்
வெள்ள நிவாரணம் வாங்குவதற்கு
விழுந்தான் மூச்சை விடுவர்

இதை கண்டு நான் அழுது
இருந்து விட்டேன் ஒற்றை மரத்தில்
தலை குருத்தை வெட்டி தான் தன்
தாயை அதில் கிடத்தி

பச்சை மட்டை பாடையில்தான்
படுக்க வைத்து தாங்குகின்றேன் நீ
பார்த்திருக்க நான் படித்தேன்
பாவம்தான் நீ கூட

சுடுகாடு செல்லும் வரையில்
சொல்லி வருவேன் என் சோகங்களை
சொர்கத்திற்கு மூச்சு விடும் மக்கள்
சொந்தங்களும் இதை உணருமோ ?

மழை மெல்ல குறைந்து போகும்
மக்கள் உன்னை ஒதுக்கி வைப்பர்
மரங்கள் எந்தாய் குறைவது போலே
மரணங்கள் அடுக்காய் நிகழ்வதாலே

உங்கள் பயனும் மாறிபோகும்
எங்கள் பயணம் போல் கூறிபோகும்
உன் கை ஒடித்து ஒதுக்கி வைப்பர்
உன் துணியெடுத்து கொடி பிடிப்பர்


நவீன குடைகள் நீங்கள் இனிமேல்
நாளைய மழைக்கு தேவையில்லை
வெயிலுக்காவது தேவை என்றால்
வெந்து நீயோ எரிந்து போவாய்

சனி, 20 நவம்பர், 2010

மனிதநேயமும் நானும்

இலங்கை மன்னா (ண்ணா)
என்றாவது ஒரு நாள்
இங்கு வந்துதானே ஆவாய்
அது வரையில் கல்லறையில் காத்திருக்கிறேன்

வெள்ளி, 19 நவம்பர், 2010

என் மரணத்தின் தத்துவம்

நம்மை போல்தான் சூரியனும்
நாள்தோறும்   இறந்து கொண்டிருக்கிறதாம்

இன்று பிறந்த இன்னொரு சூரியன் என்னிடம் சொன்னது

அது மாலையில் மரணத்தை மகிழ்ச்சியாக
ஏற்று கொள்ளுமாம்

உனக்கும் எனக்கும் நண்பா

நான் உன்னை காதலிகின்றேன் என்று
கடுமையாக கவிதை எழுதுமுன்னே
கைபேசியில் வாழ்த்து சொல்கின்றாய்

ஆண்மை நண்பனே !

குறுஞ்செய்தி கொடிகளில் பறக்கும்
வரிகளை படிக்கும் போதுதான்
வாழ்த்தின் அர்த்தம் புரிகிறது

சர்வதேச ஆண்கள் தினத்தில்

என் வீட்டுக்காரி சிரிக்கின்றாள்

முட்டாள் வெள்ளி
 முன்பிணை வாங்கி வந்ததாம்
ஆண்கள் தினமென்று

இப்படிக்கு சர்வதேச ஆண்கள் தினம்

இன்று வாழ்த்தாத
உன் ஆண் நண்பர்கள் எல்லோரும்
மகளிர் தினம் மன்று மறக்காமல் வாழ்த்தட்டும்

விளக்குமாறு ஆண்கள் தினம்

விளக்குமாறு அவள் விரலை பிடித்து
வினவும் கேள்வியில் தெரிந்து கொண்டேன்

அகில உலக ஆண்கள் தினத்தில்
அன்பாய் மாறும் அவள் முறையில்

பழைய கையை பார்பதற்கு
பாசம் கொண்ட துடைப்பம் நான்தான்

இன்று மட்டும் உன் கையில்
இருக்கும் சுகம்போல் வேறுண்டோ

நாளை  சனியில் பெண்ணே நீ
நடக்கும் வழக்கம் தெரிந்துதான் -இன்று

தூசியெல்லாம் நன்றாய் விரட்டி
துடைத்து விடு உன் கணவனுக்கு

இன்று மட்டும் திட்டாதே

வெள்ளி என்று வேட்டி கட்டி
வெயிலின் நிழலில் மீசை முறுக்கி
துள்ளி விழும் அலையில் எழுந்து
தூரல் போடும் மழையில் வியர்த்து
பெண்ணின் மடியில் ஓய்வாய் கிடக்க
பெயராய் வரும் ஆண்கள் தினம்

தினமும் களைத்து தேடல் கொண்டேன்
திரும்பும் முடிவில் கண்டு கொண்டேன்
ஆண்கள் வெற்றியில் பெண்கள் எல்லாம்
அள்ளும் பரிசாய் குடும்பம் என்றால்
விரும்பும் வரையில் வாழ்வதற்காக
வெள்ளி என்னை வாழ்த்துகின்றாயே

சர்வதேச ஆண்கள் தினம்

முன்னூற்றி அறுபத்தி நான்கு நாளும்
முழுசாய் உனக்காக வாழ்ந்து விட்டேன் பெண்ணே
இன்றொரு நாள் மட்டும் எனக்காக வாழ்ந்திடடி செல்லமே !

வியாழன், 18 நவம்பர், 2010

எல்லோருக்காகவும் நிகழ்காலத்தில்

இறந்த காலத்தை திருத்தி கொண்டிருக்கிறேன் நிகழ்காலத்தில்
எதிர்காலமும் இறந்து விடுகிறது

எதிர்காலத்தை திருத்தி கொண்டிருக்கிறேன் இப்போது
நிகழ்காலமும் மரித்து விடுகிறது

நிகழ்காலத்தை திருத்தி கொண்டிருக்கிறேன்
இறந்தகாலம் பிறந்து விடுகிறது எதிர்காலமாய் எல்லோருக்குமாய்

ஞானத்தின் நண்பன்

நான் காதலிக்கும் போது
நீ காசு சேர்த்து வைத்தாய் நண்பா

நான் கல்லறையில் இருக்கும்போது - அதில்
நீ செலவழித்து எழுதி வைத்தாய்

காசும் காதலும் கூடாது ?

புதன், 17 நவம்பர், 2010

உன்னை சுமந்து நிச்சயம் தோழி !

கண்ணில்லை எனக்கு
காலில்லை உனக்கு
கால் கொடுத்தேன் உனக்கு
கண் கொடுத்தாய் எனக்கு

நடந்து செல்வோம் நண்பர்களாய்
கடந்து வரும் சிங்க கூட்டம் எதிரி(ல்)
கண்டால் நீயோ என்னை கண்டு
வில்லால் ஒழித்து முடிப்பாய்யென,

விழிப்பேன் உனக்கு வெல்வோம் தோழி
பழித்தால் நட்பை காதலென்று பெண்ணே
விழிக்காதிருந்து நான்  வேதனை கொண்டால்
ஒழிப்பாள் ஓடி என்னருமை தோழி

நலம் பெற என் கவிதை

அரிசி சோறு முதல்வேளை
அரைத்த கேழ்வரகு மறுவேளை
இரவு மட்டும் சில பழங்கள்
இனிப்பாக சேர்த்துகொள்

முதல் நாள் கடலை எண்ணெய்
மூன்றாம் நாள் நல்லெண்ணெய்
இரண்டாம் நாள் சூரியகாந்தி எண்ணெய்
இப்படி மாற்றி நீ சமையலுக்கு பயன்படுத்து

முளை கட்டிய பயறு வகை
முற்றாத தேங்காயுடன்
அரை வேக்காட்டில் வேகவைத்து
அளவோடு சாப்பிட்டுகொல்

தேன்துளிகள் சில சொட்டு
ஊணுக்குள் நீ விட்டு
காலை மட்டும் சீக்கிரமாய்
கடமையென எழுந்துகொள்

பொரித்த உணவு கொரிக்கயிலே
எரித்த கொழுப்பு மிஞ்சுமென்று
வயறு உன்னை கெஞ்சயிலே
வாயை மட்டும் மூடிகொள்

பூச்சி மருந்து காய்கறிகள்
பொடிசாக அரிந்து நீ
நெடும் நேரம் கொதிக்க வைத்தால்
நீடூழியா வாழ முடியும்

உமிழ் நீரில் ஊறவைத்து
உன் உணவை அரைத்து நீ
சிறுக சிறுக விழுங்கிவிடு அந்நேரம்
சிந்தனையில் தூயதையும் சேர்த்துவிடு

காக்கவிற்கு சிறு உணவை
மேம்போக்காக வைப்பதெல்லாம்
சாத்திரமென்று நினைக்காதே - தன்
சாவுகஞ்சிய சிறு செயல்தான் நீ யோசி


துரித உணவுகளை நீ துரத்த
எளிய வழிகள் இன்னொன்று
பச்சை உணவுகள் சிலவற்றை நீ
பறக்கும் போதும் உண்டிடலாம்



தேநீரை இடைவெளியில்
தேக்கித்தான் வைத்தால்தான்
சுறுசுறுப்பு கூடுமென்றால்
சொன்ன வார்த்தை பலிக்குமென்றால்

மலையெல்லாம் சோம்பேறியாக
மழையில் ஏன் குளிர்வதென்ன- நீ
மட்டும் இதை புரிந்து நிம்மதியாக காபி
போட்டு  குடிப்பதையும் நிறுத்திகொள்

என் கைகள் அடித்ததெல்லாம்
எந்திர விசைபலகை கேட்கும்போது
எழுத்தில் எப்படி பிழை வரும்
என்னருமை நண்பா நீ யோசி ?

என் கவிதை இது இல்லை
உங்கள் வாழ்க்கை திருடியதால்
உருவான எண்ணம் இது
உணர்வாயா உற்ற தோழனே !

சாதி

அடடே
அரசியல் சாதியில்
அடிதடி
ஊழல் எந்த சாதி ?

மாமியார் மருமகள் சண்டை

அம்மா உன்னோடு என்  உயிர் பிறந்தது
அவளோடு என்னுயிர்  வாழ்கிறது
என்னோடு இருஉயிரும்  இருந்திடுங்கள்
உங்கள் ஒருவருக்கு மட்டுமல்ல என் ஒரு  உயிர்

எதிலின் தீபாவளி எண்ணெய் குளியல்

ஈழத்தில் இருக்கும் விதை எள்
எண்ணெய்க்காக முளைக்கும் பொறுத்துகொள்
சிங்களத்தை தொலைத்து தலைமுழுக
சீக்கிரமாய் குளிக்கலாம் புரிந்து கொள்

செவ்வாய், 16 நவம்பர், 2010

சிவகாசி சிறார்

உங்களின் பற்றாத தீக்குச்சிக்கு மட்டுமே
என் படிப்பறிவின் வேதனை தெரிந்திருக்கும்
எரியாத எங்கள் வாழ்க்கைக்காக இறந்துபோனதால்

அடைமழை நேரத்தில் அணைக்க

வறண்டு போன உங்கள் அணைகளுக்கெல்லாம்
வாய்கால் வைத்து நிரப்பிகொள்ளுங்கள்

நினைக்க மறந்த கேரளமே
மறக்க நினைக்கும் கன்னடமே
மறந்த நினைக்க ஆந்திரமே
                                                      (வறண்டு )


ஏராளமாய் இங்கு மழைகளுண்டு
இப்போது எங்கள் தமிழகத்தில் பெய்வதுண்டு
மழை நீரை நாங்கள் சேமிப்பதுண்டு
மறந்து போன உங்களுக்கும் சொல்வதுண்டு
                                                         (வறண்டு )

தவிச்ச வாய்க்கு தண்ணீரும்
பசிச்ச வயத்துக்கு கொஞ்ச சோறும்
கொடுக்கும் கொடைதான் தமிழ் மண்ணு
குழையும் சேறில்தான் நிமிர்ந்து நின்னு
                                                          (வறண்டு )
மழையும் எம் மனமும் ஒன்றென்றால்
பிழையும் அணைகளும் நீயென்றால்
உழைக்கும் வர்க்கம்தான் உயரணுமென்றால்
பிழையை உணர்வாய் பிற மாநிலமே

                                                               (வறண்டு )

சீக்கிரம் வந்து நில்லு

சளி பிடித்து கொள்ள போகிறது
சட்டென்று வந்து நில் என் மறைவிடத்தில்
சற்றும் குறையா காதலுடன்தான் சொல்லுகின்றேன்

மழையில் நீ நனைந்து
மறந்தாலும் உன் நினைவில்
கல்லறை அடியில் நான்
காத்திடுவேன் காதலியே

முட்டை

முள்வேலியில் முட்டையிட
முட்டாள் குருவி நினைத்தாம்
சந்ததி பெருகுமென்று தன்
சம்சாரத்திடம் சொன்னதாம்
பறவை அதற்கு தெரிவதில்லை
பாய்ந்து செல்வது உயர்மின்சாரமென்று

சிக்குண்டு, சிறகிழந்து செத்துதான் போனதாம்
கடவுள் கண்டு கண்திறந்து
கண்டுக்காமல் இருப்பதை தெரிந்து
ஆண்குருவி மனம் நொந்து
அடைகாக்க வேண்டுமென்று
ஆவேசமாய் முட்டையிடும்
அந்த முட்டை பெயர்தானே
கூழை முட்டை இல்லை இல்லை
ஈழ முட்டை எனபெயர்தான்

முகம் தெரியா காதலியே

கப்பல் உனக்கு கவிதை எழுதும் ஒரு
கைபேசி வழி செய்தி சொல்லும் -என்
கண்ணீரில் தத்தளிக்குமது
கடல் தாண்டி செல்லும் பொது - நம்
காத்திருக்கும் பயணத்திற்காக !

குளிர்காலம்

குளிர்கால கூட்டத்தொடராய் கூடி
கொஞ்சுகின்றேன் கனவில் நான்  காதலியே
அவை கலைந்து எழும்போதுதான்
அடிதடியாய் கவிதை வந்து
அழைக்கிறதே உனைகண்டு

மழைக்கால பாராளுமன்றம்

குளிர்கால கூட்ட தொடரில் மட்டுமே
கோவணம்  கட்டிக்கொள்ளும், நிர்வாண அரசியல்
அது கூட அவை கூடியவுடன்,
அவிழ்த்து போட்டு விட்டு வெளியேறும் .

இன்றைய பாராளுமன்றத்தில்

எல்லா துறையிலும் ஊழல் இருக்க
இந்திய நீதிபதியின் கருத்தை போன்று
இன்னொரு துறையாய் ஊழல் துறையை
இப்போதைய பாராளுமன்றத்தில் கொண்டுவந்தால்
மற்ற துறையெல்லாம் மானமாய் இருக்கும் - நம்
மக்கள் அதற்கு மரியாதை தந்திடுவர்

தொலைதொடர்பு ஊழல்

மேற்கே செல்லும் மேகம் மறைந்து
மின்ன துடிக்கும் நட்சத்திரம் தெரிந்து
ஞாயிறு மறையும் நேரம்
நான் தொலைந்தால்தான்
நம் தொடர்பு அம்பலமாகும்

செவ்வாய்

நாட்கள் கூட உன் செவ்விதழ்  காண,
ஞாயிறும் திங்களும் காத்திருக்கிறதே !
நான் மட்டுமா காத்திருக்கிறேன் காதலி !

நாட்களும், நானும்

செவ்வாய் கூட உன்
சிற்றிதழ் கடந்து
'போ'  வாய்  என்று
பொடி வைத்து பேசும்
காதலி

திங்கள், 15 நவம்பர், 2010

பயணச்சீட்டு கொள்ளை

நடத்துனரின் இருக்கைமேல்
நல்ல வாசகம்
 திருடர்கள் எச்சரிக்கை

சனி, 13 நவம்பர், 2010

சுடுகாட்டில்

காலத்தை காசாய் மாற்றி
காதலிக்கு செலவு செய்தேன்
நெற்றி ரூபாய்
நினைத்து கொள்ளும்

கடற்கரை காதல்

உப்பில்லா கடல் உன்னுடைய உடல்
முத்துமுத்தாய் முத்தமெல்லாம்
மொட்டுகளாய் இதழ்விரித்தால்
அலையாகும் உன் கன்னம்
அதைபார்க்கும் மண்ணுலகம்
ஏழையான என் காதலிக்கு
இப்படிதான் காட்டிடுவேன்

காதலி நீ கொடுத்த மலர்ச் செடி

ஊரெல்லாம் பூக்களுக்கு பஞ்சம்
இது மழைக்காலம்
உனக்குத்தான் திருமணமாம்
அது விழாக்கோலம்
உன் கழுத்தங்கே காத்திருக்கும்
என் கையெடுத்து
ஒரு மாலை கொடுத்திடுவேன்
நீ மணமுடிக்க!

என் குடும்பம் வந்து கோபிக்கறது
என்ன சொல்வேன்
நீ வைத்த மலரில்தானே
நம் தோட்டமெல்லாம்
வாழுகின்ற போது நீயோ
போய் சேர்ந்த மர்மம் என்ன
சொல்லு சொல்லு
என் கல்லறைதான் நனைகிறதே
உண்மை சொன்னால் ?

வயதுடன்

ஒன்றையும் ஒன்றையும் கூட்டினால்
கழிந்து போகிறது
இளமை

பெயர் வைத்து யோசி

கணேசனுக்கு கல்யாணம்
வள்ளியுடன் வாழ்வதற்கு
அப்பன் செய்த தப்பென்று
அறிவில்லா செய்கையால்
இப்படியா பெயர் வைப்பார் - என்
இளைய தலைமுறையே நீ யோசி

மனித நீதி

நீதியை தூக்கு மாட்டி
நிறையை அதன் தட்டில் வைத்தால்
குறையா குற்றமெல்லாம்
கூடுது அதன் தொண்டை வரை
தலைதான் எழுத்தாய் மாறி
தண்ணீரில் போட்ட கோலமென
விதிதான் வேடிக்கை பார்க்கும்
வேதனையை என்னில் தேக்கும்
தராசில் தொங்கும் நீதி
தமிழென்று உயிரை விட
எந்திர இதயம் இன்று
எப்படித்தான் ஈழ எடையை போடும்

வெள்ளி, 12 நவம்பர், 2010

தோழிக்கு திருமண வாழ்த்து

சந்திரனை சூரியன் மணக்கட்டும் அந்த
சரித்திரமாய் இந்நாள் இருக்கட்டும் !

பாப்பா உனக்கு

அழகான ஆரமுதே
இனிப்புகளை ஈயெடுத்தால்
உனக்குள்ளே ஊறுவரும்
என்னைத்தான் ஏசாதே
ஐம்புல வெற்றிக்காக
ஒரு ஓசையாய்
ஒளவ்வையென நோய்நீங்க
. ' . கவியின் இனிப்பாக
பாப்பா உனக்கு படிக்கின்றேன்

புதிய உயிரெழுத்து

அ தெரியாதவன் அரசியல்வாதி
ஆட்சி செய்ய தலைவனாய்
இளிச்சவாயன் அனைவருக்கும்
ஈன பிறவி உழைப்பாளிக்கும்
ஊதுகின்றான் ஒரு சங்கை
எழுதாத இவன் கையில்
ஏமாற்றிதான் மையை வைத்து
ஐந்து விரலில் ஒற்றுமையாய் அதிக
ஓட்டை கள்ள தனமாய்
ஒளவ்வை சொன்னை ஆத்தி சூடியை
அ. ' . றினமாய் மெய்ப்பித்தான்

உடன் கட்டை(சதி ) மீண்டும் வேண்டும்

சாதி சதியாக  வேண்டும்

காலம்

என் கருவில் ஈழம் இருக்கும்
இனிய குழந்தையாய் சீக்கிரம் பிறக்கும்

நண்பா நீ அழுதால்

உன் கண்ணீர் வழி
என் கன்னத்தில் வழியும்

ஊழல் அரசியல்வாதி

நீ கருத்தரிக்கும் போதே
அவள் இறந்திருக்க வேண்டும்
தாயா ?
நோயா ?
அவளென யோசி ...............?

நீ என் பக்கத்தில் இருந்தால்

கருவாட்டை மாலையாக்கி
கழுத்தில் நான் மாட்டி கொண்டேன்
மல்லிகையாய் மணக்கிறதே காதலி ?

வியாழன், 11 நவம்பர், 2010

இராணுவ வீரனுக்கு மரியாதை ?

வீட்டை மறந்துதான் காத்திருந்தோம் கார்கில்
வெற்றிக்காகத்தான் உயிர் பிரிந்தோம் - எம்
குடும்பம் கும்பிட கடவுள் ஆனோம்
இறந்தும்  கல்லறை கல்லெடுத்து படியாவோம்
இனிய உம்   குடும்பம் குடியேற கோயில் ஆவோம்

அங்கபிரதட்சணமாய்  ஆதர்ஷில்தான்
அவிழும் கோவணமாய் அரசியல்வாதி
உருளும் ஊழலில் பிரளுகின்றான் - எம்
உயிரை கொடுத்தது இதற்க்காகதானா ?
எங்கள்  குடும்பத்திற்க்காகவாவது உயிரோடு
எதிரியிடம் சரணடைந்து, இற(ர)ந்தில்லாமல்  இருந்திருக்கலாம்

இந்தியா முன்னேற ?

மக்கள் தொகை கணக்கெடுப்பை
மாற்றிகொள்ளுங்கள் மடையர்களே
எலிகளும் , புழுக்களும், பூச்சிகளும்
இந்நாட்டின்   குடிமக்கள் என்று ஆக்கிக்கொள்ளுங்கள்
இந்தியா ஏழை நாடாய் இருக்காது
எங்கள் உணவு கிடங்கு எழுதிய கவிதை இது

புதன், 10 நவம்பர், 2010

கொஞ்ச தூரத்தில் கொடுத்திடு முத்தம்

கை பேசியே நீங்கள்
முத்த சொர்க்கத்தில் இருக்கும் போது
நான் பித்த கலக்கத்தில் இருக்கிறேன்
நானும் திறக் கற்றையாகவது தீண்டனும்
என் காதலின் கன்னத்தை
இதோ உன் முத்தத்தோடு என் முத்தமும்

ப்ளூ டூத் - திறக் கற்றை

திறக் கற்றை உன்னை கொன்று விட வேண்டுமடி !

என்  கைபேசியே நீ திறக் கற்றையாக *
கன்னத்தில் முத்தமிடுகிறாய்
என் காதலியின் கைபேசியோடு


என்னை கைகாட்டியும் பேசுகிறாய்
மனித காதலுக்கு மனம் நோக நாம்
மணி கணக்காய்  முத்தமிட்டு கொள்வோமென்று


bluetooth(ப்ளூ டூத்) -திறக் கற்றை

அடி பாவி கைபேசியே ?

நானும் அவளும் காதலித்தோம்
என்னுடையதும் அவளுடையதும் காதலிக்கிறது
கைபேசியே போட்டியா ?

காத்திருக்கிறாயே இருபத்தி நாலு மணிநேரமும் - உன்
காதலி மணி அடிப்பால் என்று

நல்ல வேளை என் காதலியும் அச்சமயத்தில்
நமக்காக கவிதை எழுதுகிறாள்
நாம் காதலித்தால் நம் கைபேசியும் காதலிக்கிறது
நம் கனவுகளில் பேசும் போதுதான் அது  செத்துவிடுகிறதாம்
அழைப்பு மணி அடிக்கிறாள் காதலா என்ன செய்ய ?

செவ்வாய், 9 நவம்பர், 2010

கைபேசி நீ குற்றவாளி

தபால் பெட்டியெல்லாம் தற்கொலையில் தொங்குகிறது
காதல் கடிதமெல்லாம் கைபேசியில் செல்வதனால்

காதலுக்கு பொருந்துமா ?

உதடுகளும் பாதங்களும் ஒன்றுதான்
மனித மனம் போன்று நடப்பதில்லை - என்
காதலியும் கல்லறையும் ஒன்றுதான்
காதலினை என்றும் வாழ வைப்பதில்லை

எனக்கு காதல் தோல்வியில்லை வெற்றிதான்

தோல்வி காதலுக்கு
வெற்றி கல்லறைக்கு
ஒற்றை கையால் தட்டி
ஓசை எழுப்பும் மௌனத்தால்
இந்த வெற்றியையும் ஏற்றுகொள்வேன்
இன்னொரு கையில் மது கோப்பையின் பரிசுடன்

படியென்று சொல்லாதே



பேருந்து படிக்கும் பெயர் மாற்றம் வேண்டும்
படியென்று பள்ளியில் சொல்லுவதெல்லாம்
பயணத்தில் என்று பழகிக்கொள்வதால் எங்கள்
பிஞ்சின் பழமெல்லாம் பெயர்ந்து விழாமல் இருக்க

என் வயிற்றில் வளருது தாஜ்மகால்!


கர்ப்பத்தை முறுக்கி காட்டுகிறேன்
காதல் தோல்விஆணுக்கு மட்டுமல்ல தாடியுடன்
கண்ணீராக வாழும் எங்களுக்கும்தான்

காதலுக்கு தாஜ் மகால் மட்டுமல்ல
காதல் தோல்விக்கு கர்ப்பத்தையும் கட்டுகின்ற
கணக்கற்றவர்களுடன் நானும் ஒருத்தி

திங்கள், 8 நவம்பர், 2010

படலும், விதையும்

ஆடு மாடு மேயுமேன்று
அறிவுகெட்ட பச்சை ராசு
முள் வேலி படலிட்டு
முழு மூச்சாய் காவலிருந்து
தானியங்கள் காத்து வந்தான்
தக்க சமயம் பாத்து வந்தான்

குயிலொன்று தனியாயிருந்து
கூவுகின்ற இசையில் நொந்து
சுதந்திரம் கெட்டதென
சோகமாய் கவி படிக்க
தானியத்தை தின்பதற்கு
தவிட்டுக்குருவி  கூட்டத்தோடு
குயிலும் தான் கூடுதான்
கொடுமை கொடுமை கொன்றுவிட்டான்
குருவிகளை கொலை செய்தான்

காக்கை இதை கானதிருக்க
கருப்பு துணியால் அதன் தோலை செய்து
குறுக்கு புத்தியால்
கொடியாய் கட்டினான்
இயற்கையை செயற்கையாக
இறைவனுக்கே செய்து காட்டினான்


முற்றிய கதிர்கள் முழுசாய் தலைசாய்ந்து
முள்வேலின் எல்லைக்குள்ளே
தமிழ் மகள் நாணம் போலே
தற்பெருமை காய்ந்த சருகாய்
அறுவடை காலமென்று
ஆசையாக காத்திருந்ததாம்

பச்சை ராசு பருவம் உணர்ந்து
பழைய அரிவாள் கொண்டு வந்து
சனி மூளை சில தானியகதிரை
சரித்திரமாய் அறுத்து வைத்தான்
கீழ் மெனைகள் சில பிடித்து
கிடத்தினான் கதிர் அறுத்து

செத்து விழுந்த செங்கதிர்கள்
சிவந்திருந்த மண்ணில் வீழ்ந்து
கட்டுகட்டாய் சவமென்றாலும்
களத்துமேட்டுக்கு கொண்டு சென்றான்
காற்று உள்ளபோதே தூற்றனும் என்று
கற்றறிந்த  பழமொழி உணர்ந்து
பதர்களை தூற்றினான்
பார்த்திடுங்கள் என் தமிழ் மக்களே

விதையும் வைக்கோலும்
வேறாய் ஆக்கி மூட்டையாய் கட்டி
முள் வேலி விட்டு முதுகில் சுமந்து
முந்தி வந்தான் பச்சை ராசு
இத்துணை நாளும் முள்வேலி நினைத்தது
எங்கள் தமிழினம் நசுங்கட்டுமென்று
விதைகள் தான் வெளியில் செல்லும்
விதிதான் வேறொரு மண்ணில் முளைத்து
மனிதநேய பஞ்சம் போக்க
மண்ணெங்கும் வளருது பாரு

தமிழகம் கூட முள்வேலிதான்
தமிழன் நானும் உணர்ந்தால் கூட
காலம் எனக்கு கதிராய் மாறும்
காத்திருப்பேன் விதையாக மாற
சிறுகள்ளிகள் என் பாதையோரம்
செந்தமிழும் சிறையின் தூரம்
வாகை பூதான் என் வருகைக்காக
வளைத்து போட்ட வேலியில் உயர்ந்து
முள் வேலியை வேடிக்கை பார்க்குது
முளைக்கும் ஈழத்தை தன்னில் தெளியுது

பேசாதே ?

மாற்று திறனாளிகள் என்னை மன்னியுங்கள் - உம்
மனம் நோக எழுததான் நான் மனிதனில்லை
மற்ற மொழி மெச்சுகின்ற தமிழன்தான்
மன்னிக்க முடியாதென்ற பிறப்பை நொந்து
இன்மொழியை பழித்திட்ட இவரெல்லாம்
இன்னொரு பிறவியில் ஊமையராய் பிறக்க வேண்டும்

உமை கண்டு நான் எழுதிய கவிதை கண்டு
உண்மையுணர்ந்தால் நன்றியுரைப்பேன் மாற்று என் தோழனே
வரம் ஒன்று கிடைத்துவிட்டால் என் வாழும் தமிழுக்கு
வழக்கமாக இதை நான் செய்திடுவேன்

ஊனமென்றும்  ஊமையென்றும்   உற்ற தோழனே
உன்னை நான் பழிக்கவில்லை என்னை மன்னியுங்கள்
தமிழ் மொழியினை நேசிக்கின்ற தலைமகனாய்
தவறாமல் உனக்காக நான் பேசிடுவேன்
நம் மொழியை உணர்ந்துதான் நண்பர்களாய்
நன்றியோடு தோள் சேர்வோம் வாருங்களேன்

நெரிசல் கோ ய ம் பே டு

விரைவு பேருந்தில் நான் ஏறி, தீபாவளிக்கு
விடியுமுன்னே ஊருக்கு  செல்ல
பயணசீட்டை நான் கேட்டால்
பதறி நான் போனேன்                  


போன முறை வந்ததற்கும்
போக்குவரத்து வீழ்ச்சிக்கும்
என்னுடைய காசில்தான்
இறுதி யாத்திரை தொடங்கனுமாம்

இருபது ரூபாய் அதிகமாய்
இருட்டான என் பையில்
கொடுத்து நான் வாங்கியமர்ந்தேன்
கோயம்பேடு பேருந்து நிலையத்தில்

கொசுகடியின் போராட்டத்தில்
கொடுமைகளை அனுபவித்தால்
தேக்கமான பேருந்துகள்
திசைக்கொன்றாய் மாறி நின்று

போக்குவரத்து விதிகள்தான்
புரியாமல் குழம்பி நிற்க
சாலையினை கண்காணிக்கும்
சாப்பாட்டுக்கு எங்கோ சென்று

தூங்கிபோகும்  காவலர்கள்
துணியை மறக்கும் அவர் கனவுகள்
என்னை வந்து எட்டி பார்க்கும்
இன்னொரு நினைவும் நெட்டி முறிக்கும்

இரவில் நடக்கும் போக்குவரத்தை
இயந்திரத்திடமாவது கொடுத்து வைத்தால்
பச்சை விளக்கு பக்குவமாய்
பயணத்திற்காக எரிய வைக்கும்

சிவப்பு விளக்கு சிக்கலினை
சீரழிந்து கிடக்கும் போக்குவரத்தை
மஞ்சள் நிறத்தை மங்கலமாய் என்
மனம் போல கொடுத்து வைக்கும்

பலமணி நேரம் காத்திருந்து
பரிதவிக்கும் சக்கரங்கள்
என் மூச்சுபோல் இறங்கியிருந்து
இன்னொரு பேருந்தில் ஏறிக்கொள்ளும்

படியில் நான் தொங்கி
பாவமாக தூங்கி
வழியில் நான் வீழ்வதில்லை
வாழ்கையிலும் தோற்பதில்லை

போக்குவரத்து தடங்கல்களை
போக்குகின்ற வழி செய்தால்
நின்று கொண்டிருக்கும் வியாபாரம்
நிமிர்த்தி வைக்கும் போக்குவரத்து துறையை

தூங்குகின்ற துறைதான்
தூண்டுகின்ற இச்செய்தியால்
பல முறைதான் சென்று வரும்
பாதையாக மாறிபோகும்

நடத்துனரும் ஓட்டுனரும்
நம்மை போன்ற மனிதர்களே
அவரை கேட்டை திட்டம் சொல்வார்
அதற்காகவாவது  தலையசைக்குமா

கையேந்தி பவன்


அழுகி போன தக்காளி
அலசாத வெங்காயம்
சொத்தையான காய்கறி
சோற்றுக்கு மலிவான அரிசி
வடிகட்டாத உப்பு நீர்
வறுவலுக்கு பனங் கொட்டை  எண்ணெய்
கள்ளச்சந்தை எரிவாயு
கழுவாத எச்சில் பாத்திரம்
ஈக்களுக்கு இன்பபுரி
இருட்டுக்கு இன்னொரு பூரி

பூச்சி மைதா ரொட்டிக்கு
புகை படிந்த தோசை கல்லில்
பருப்பில்லா சாம்பார்
பலவகையாய் கூட்டியே
புளித்துப்போன தயிரோடு
புளிக்காத ஊறுகாய்
வியர்வை சொட்டும் உழைப்பாளிக்கு
விளங்காத சுகாதாரம்
எட்டு ரூபாய் சாப்பாட்டில்
இதை விட வேறில்லை
மூட்டை தொக்கும் கணேசன்
மூன்று ரூபாய் பாக்கிக்கு
மதிய சாப்பாட்டை மறந்துதான்
மாடாய் உழைக்கிறான் நொந்துதான்

உயர்தர சைவ உணவில்
உழைக்கும் வர்க்கம் மலிவு விலையில்
கனவைத்தான் கண்டுவைக்க
காசில்லாமல் உண்டு வைக்க
ஒரு ஈ குளிரூட்டிய அறையில்
உட்கார்ந்து தின்கிறதாம்
ஏழைகளை பார்த்துதான்
இந்த கவிதையை படிக்கிறதாம்
எங்களைவிட மனிதனெல்லாம்
இலவசமாய் உண்பதில்லை
தப்பித்தவறி அடித்தால் கூட
தடுமாறும் மரணம் கூட
ஊழல் போன உளுத்தர்களின்
உயரும் கையை கண்டுதான்
பறந்து நான் செல்கின்றேன் - அவர்
பார்க்கும்போது வாயில் நுழைந்து
இன்னொரு ஏப்பம் விடுகின்றேன்
எமன் வந்தால் மட்டும் இறக்கின்றேன்

மோட்சத்தின் என் சாவை
முழித்திருந்து கண்டிடுங்கள்
கையேந்தி பவன் அருகில் எனக்கு
கல்லறையை கட்டிடுங்கள்

புதன், 3 நவம்பர், 2010

எதிலியின் தீபாவளி

எதிலியின் குழந்தை ஒன்று
எனக்கு வேண்டாம் பட்டாசு என்று
அகல் விளக்கு ஒன்று போதும்
அடம்பிடித்தது அழுகை கொண்டு
குண்டு விழுந்த சத்தம் கண்டு
குமைந்து போன என் நெஞ்சம் கொண்டு
அமைதிதான் திரும்புனும் என்று
அகல் விளக்கு ஏற்றி தந்தேன்

யாருமில்லை ?

பங்கீட்டு உந்துவாம்
பட்டணத்தில் செல்லும்போது நான்
ஏமாற்றதே என்னிடம்
இவ்வளவு சிறிய தூரத்திற்கு
ஏன் இந்த அநியாய  விலை என்றேன்

இளம் பெண்களை
இடித்து வந்ததற்கும் சேர்த்துதான்
இந்த விலை என்றான் ஏளனமாய் !

அரசியலாட்சி கொண்டுவந்த
அவல நிலை கண்டு
என் குல பெண்களின் மானமெல்லாம்
இவ்வளவு விரைவில் விலைபோகுமென்று
ஒரு நாளும் நினைத்ததில்லை
உதவாக்கரை என் போல் யாருமில்லை ?

செவ்வாய், 2 நவம்பர், 2010

குறில் நெடில்

பு கூட பூவாகும் நட்பில்
காதல் கூட கல் ஆகும்
உன்னில்

இலக்கணம் மாறுது நண்பா !

பு கூட பூவாகும் நட்பில்

அடுத்த நொடி ?

ஒண்ணரை வயது குழந்தைக்கு
ஊட்டுகிறாள் சோறு தமிழ் தாய்
இராஜபக்சே வருவானென்று
ரகளை செய்யும் குழந்தை கூட
அமைதி ஆனதா அழுததா
நான் அங்கில்லை
அடுத்த நொடி முதல் ?

கள்ளக்காதல்

காதலிப்பது தப்பில்லை
கால் மெட்டியினை பார்த்த பின்

திங்கள், 1 நவம்பர், 2010

தோழியா ,காதலியா ?

தோழா வாடா உன்
தோளை தாடா
விண்ணை நான் பிடிக்க
விரையும் படியாய்
நில்லடா நண்பனே
நேர்வழியை சொல்லடா

பெண்ணொருத்தி பழகிவிட்டேன்
பெயரென்று நட்பானேன்
கண்ணை உருத்தி தூக்கமில்லை
காதல் என்றா புரியவில்லை
இரண்டொரு நாள் பேசவில்லை
எனக்குள்ளே போராட்டம்
திரண்டொரு திசைகள் புரியவில்லை
திரும்புமா இயல்பு நிலை தெரியவில்லை

தோழியின் தோளோடு
தோல்வியுறும் நட்போடு
கனவுகளின் காலோடு
கற்பனையின் வழியோடு
செல்லுகின்ற பயணத்தோடு
சேர்வது காதாலா ?

விடுமுறை எடுத்து வீட்டிலிருந்தேன்
வெளியூர் செல்வதாய் சொல்லியிருந்தேன்
தொடுமுறை நினைவுகளில் தொலைந்திருந்தேன்
தோழியாய் காதலியா உரைத்திடுவாய்

கவிதைகள் அவளைப்பற்றி வருகிறதா
கற்பனை குழந்தைகள் பிறக்கிறதா
வானவில் அவள் மேனியில் தெரிகிறதா
வாழ்க்கைதான் அவளென்று புரிகிறதா

நடக்கும் அவள் மண் உனக்கு குளிர்கிறதா
நண்பன் என்றால் உனக்கு வலிக்கிறதா
அவள் சடை உனக்காக முடிக்கிறதா
அவள் உடை உனக்காக பிடிக்கிறதா

கை பேசி உனக்காக அடிக்கிறதா
காலை உன் தூக்கம் கெடுக்கிறதா
குறும் செய்தி உனக்காக கொடுக்கிறதா
குறும்பாக இல்லாமல் அது பழிக்கிறதா

காமம்தான் இதனோடு நட்பானால்
காதல்தான் பிறக்கின்ற முடிவாகும்
உன்னோடு இருப்பவை மேலுள்ளவையா
உற்ற நண்பனே யோசிப்பாயடா

நட்போடும் நட்போடும் அன்பு உண்டு
நண்பனுக்கும்  தோழிக்கும் கொஞ்சம் கண்டு
காமம்தான் கள்ளத்தனம் செய்வதுண்டு
கற்புதான் உள்ளம் மட்டும் மிஞ்ச கண்டு
காதல்தான் தோற்குமடா நட்பை கண்டு

கற்பனைகள் கவிதைகள் இல்லையென்றால்
கலங்காதே என் செல்ல நண்பனே
உன் நட்பும் புனித நட்பும் ஒன்றாகும்
உன் தோழி நட்பும் அதனால் நன்றாகும்

நினைவு நாள்

நினைவு என்னை நிறுத்தியது - என்
நிந்தனை அதற்க்கு வலித்ததாம்
காதலா நீதான் காதலியிடம்
காதலுக்கென்றே தோற்றுப்போனதால்
அவளோடு பழகிய அரும் நினைவை - உன்னை
அழிக்கின்ற போல்லல்லவா செய்கின்றேனென்று

ஆமாம் நினைவே அரும் நினைவே
அதற்கு உனக்கு அழிவு வேண்டும்

நினைவு என் பிடரியில் தட்டியது
நிமிர்த்தி என்னை பிடித்தது

தாய்தான் உன்னை ஈன்றெடுத்தாள்
தவறாமல் உன் மேல் அன்பு வைத்தால்

பிறந்த குழந்தை முதல் இருபது வயதுவரை - அவள்
பேணி  வளர்த்தது மறந்திடுமா
அ ....முதல் .'. வரை போதித்த
ஆசிரியர் வழியில் தமிழ் மொழியை
நீதான் மறந்தா புலம்புகிறாய்
நினைவில் நானிருக்க தமிழ் மொழியில்
நேசித்த அன்னையும் நிறைய போதித்த மொழியும் மறந்திடுமா ?

இலங்கை மண்ணில் என் இனம்தான்
இறந்து விழுந்த ஒரு வருடம் ஆகியும்
முள் வேலியின் எல்லைக்குள்ளே
மூச்சு அடைக்கும் நினைவுகளை
இருந்தால் என்ன? இறந்தால் என்ன ?
என்ன சொல்வாய் என் நினைவே ?

கண்கள் எனக்கு கலங்குகிறது
கவலை எனக்கும் பிடிக்கிறது
மறதி நண்பனை மண்டியிட்டு
மனிதனுக்கு வேண்டுமென கும்பிட்டு
உனது நினைவு நான் உண்மை சொல்வேன்
உரிய காலம்தான் வந்திட்டது !

பகையை நினைத்திட்ட சிங்களவனுக்கு
பழைய புராணம் மகாவம்சதினால்
சிங்கத்தோடு கூடிய சிறுமதியை
சிரிப்புக்குள்ளான  கொடும் பிறவியை

நெருப்போடு  கூடத்தான் செய்திடுவேன் - அவர்
நினைவினில் நானிருந்து செய்திடுவேன்
சிங்கள பிள்ளைகலென்றே சாம்பலெல்லாம்
சீரழியும் புழுதியில் மிதக்கின்றதே

மங்களம் கொண்டு நான் மறதியின்றி
மனித நேயத்தில் உலகுதனை
செஞ்சிலுவை சங்கத்திலும் ஐ .நா விலும்
சிந்திக்க மறந்திட்ட வல்லரசுவினிலும்
பழியினை கொடுத்த பல பதர்களுக்கும்
படிப்பினை கொடுப்பேன் புரிந்து கொள்

இறந்து போனவள் உன் வீர காதலிதான்
இருகின்ற நினைவினில் அவளை சுமந்து
மறதியின்றியே மறு படியும்
மண்ணில் முத்தமிடு
அவள் கிடந்த , நடந்த, அழிந்த , மக்கிய
மண்ணில் முத்தமிடு
விடுதலை மண்ணில் முத்தமிடு
ஈழ மண்ணில் முத்தமிடு

நகனான்

ஞாயிறன்று நகம் வெட்டி
நாலுநாள் சென்றபின்னே
யோசித்தேன் எனக்குள்ளே,

நக வளர்ச்சியோடு
நாட்களும் வளருவதை
எண்ணி பார்த்த நொடி முதல்
இதுவரையில் கழிந்த காலங்கள்
வெட்டிவிட நினைக்கின்றேன் !

விரைவாகத்தான் செல்லுகின்றேன்
வெற்றி வழியினில் !

காதல் ஆதியந்தம்

ஒரு புள்ளியாய், இறுதி புள்ளியாய்
காதலுக்கும் உலகத்திற்கும்
கடவுள் வைத்துவிட்டான்

தொடர் புள்ளியாய் துவங்கி
இன்னொரு புள்ளியாய் இன்று
காதலர்கள் வைக்க .................


இறைவன் எழுதி விட்டான்
இவ்வுலக விதியினை



முடிவு புள்ளி எப்போது ?
முடியும் போது அப்போது !
உலகம் அழியும் இது தப்பாது,
உண்மை புரியும் உனக்கு இப்போது.

எந்தன் புள்ளியொன்று வைக்கும்போது ,
உங்கள் புள்ளியினை வைத்திடுவீர் !
உலகம் அழியாதென உணர்ந்திடுவீர் !

எங்கள் ஊர் கீதம்


புது ஏரி தென்பக்கம் 
புற்று குளம் நடுப்பக்கம் 
செங்காலோ வடபக்கம் 
சிற்றேரியும் அதன் பக்கம்  
சுண்டுக்குழி கீழ்பக்கம் 
சொல்லாமல் விட்டேன் மேலைபக்கம் 
பெரிய ஏரிதான் இதன் பக்கம் 
தண்ணீர்குள்ளே தனியூராய் 
தற்பெருமையால் சொல்லுகின்றேன் 
பாளையத்தில் இது சுற்றும் 
பார்க்க பார்க்கதான் கண் திகட்டும்

வானம் பார்த்த பூமிஎன்றாலும் 
வருடத்துகொருமுறை நடவு நடும்
பெரியவர்கள் செய்து வைத்த
பெருமை மிகு பூமியிது ...

ஏரிக்கரையில் மீன் பிடியை
எங்களுக்கு சொல்லித்தந்த 
கடலல்லவா கற்பனையின் 
கடவுள் செய்து வைத்த காட்சியல்லவா ! !

மாரியம்மன் கோயில் பக்கம் 
மறைந்தாடி விளையாடிய நாட்கள் 
மறக்காமல் இருக்க திருவிழா எடுத்து 
மழை பெய்யவும் வேண்டிகொள்வோம் 

சாதிகளும் இங்குண்டு அதனால் 
சண்டைகளும் பலவுண்டு 
ஆனாலும் அமைதியுண்டு 
அதன் பெயர்தான் சமத்துவமென்று

மதுரையின் மண்கொண்டு 
மற பூமி இதை கண்டு 
பாட்டன் செஞ்ச சரித்திரமாய் 
பாருக்குள்ளே நல்ல ஊராய் 
நரசிங்கம் பாளையமென்று  
நாங்கள்தான் அழைத்திடுவோம்

கரைமேல் அழகன் சக்தியுண்டு 
கருணை அவனால் படைப்பதுண்டு
வீரனார் ஒருவர் காத்தல் உண்டு 
வீட்டுக்கு ஆண்மகனெல்லாம் வீரனென்று
பேணும் பூமியிது பெருமை பெருமை 
பிழை செய்தால் இது அழித்திடுமே 

வெளியூர் காரர்கள் விலாசம் கேட்டு 
விரைந்திடும் ஊர்தான் சுற்றுலாவென்று 
புழுதி கொல்லையில் அவர் கூடி 
புகழை சொல்லுவார் இது உண்மையென்று 

விவசாய விளைச்சல்கள் விண்ணை முட்டும் 
வியர்வை பலருக்கு மழையாய் கொட்டும் 
ஆடு மாடுகள் தமிழ் பேசும் 
அம்மாவென்றே அது மெச்சும் 
பால் கொடுத்துதான் பாசம் காட்டும்
பழக பழக அது புளிக்காதென்றே 

சாராயம் சுத்தமாய் இங்கில்லை 
சச்சரவு அதனால் காவல் இல்லை 
ஓர் தாயம் ஆடிடும் கூட்டமுண்டு 
உறங்குகின்ற தூங்குமூஞ்சி நிழலுண்டு 

காட்டமணக்கு  இங்கு காடாய் உண்டு 
கருவேலமரம்தான் அதன் அரசனென்று 
ஆல மரம் தான் இங்கு விழுந்திட்டதால் 
ஆழமாய் வேறாய் பலவுண்டு 

சுத்தமான காற்றுண்டு
சுதந்திரமான பறவையுண்டு 
தாமரை பூதான் தேசியமாய் 
தவறாமல் பூத்திடும் நாட்களுண்டு 

கோழி கூவிடும் ஓசையுண்டு 
குயில் பேசிடும் இசையுண்டு 
கும்மியடிதிடும் பொங்கலுண்டு 
குமரிபெண்கள் அங்கு வருவதுண்டு  

கணக்கன் குழியில் என் கல்லறையில் 
கவிஞன் என்று நான் எழுத 
கருதரிதிட்ட என் அன்னையே உன் 
காலடியில் இதை சமர்பிக்கின்றேன் 

தமிழ் வழியில் என் கல்வியை 
தந்திட்ட என் தந்தையே உன் 
தங்க கைகளுக்கு கடிகாரமாய் 
தவறாமல் நான் காலம் கடப்பேன்  
உன் பெயர் சொல்லுவேன் 

தம்பி என்றொரு  துணையுண்டு - நான் 
தடுமாறும் போதுதான் என் எதிரி கண்டு 
இளித்தால் ஒழிப்பான் இவனென்று 
இளையவன் அல்ல மூத்த கொடி கண்டு 

தங்கையென்று பூதான் தினம் பூப்பதுண்டு
தரணியெங்கும் அவள் மணம்தான் வீசுவதுண்டு 
குணங்களில் அவள்தான் கொடையென்று
கொடுப்பாள் என்றும் அன்பாய் அண்ணனென்று   

உறவுகள் இது போல் பலவுண்டு 
உரக்க சொல்லுவேன் இன்னொன்று 
சென்னை செல்லும் பொது என் மண் கொண்டு 
சிறு திருநீறாய் நான் பூசுவதுண்டு 
மதங்கள் கடந்துதான் என் மனம் கண்டு
மகிழ்ச்சியாய் சிந்திப்பீர் ஒரு குலமென்று 
வாழ்க வாழ்க வாழ்கவே 
வளமான என் மண்  வாழ்கவே