பக்கங்கள்

வெள்ளி, 29 அக்டோபர், 2010

நட்பு வெடி !

ஓணான் ஒன்று பிடித்து வந்து அதன்
உடலெங்கும் வெடிகள் கட்டி
தற்கொலை தீவிரவாதியென்று
தத்வரூபமாய்  வெடிக்க வைத்தோம்

நாய் சிலதை பிடித்து வந்து
நண்பர்களோடு சேர்ந்திருந்து
வாலில்தான் சரவெடியை
வைத்து நாங்கள் கொளுத்தினோம்

கொட்டங்குச்சி குவித்து வைத்து
குண்டு வெடியை அதில் வைத்து
கும்மாளமாய் சிரித்திருந்தோம்
கூட்டமான நண்பர்களோடு

ஊசி வெடியை கையில் வைத்து
உறவு பெண்ணின் முன் நின்று
வீசி  வீசி வேடிதிருந்தோம்
வீரமாக அவள் முன் நின்றோம்

நண்டு வளையில் பூண்டு வெடியை
நான்கு மூன்றை போட்டுவைத்து
சிதறி விழும் சின்ன கால்களை
சிந்திக்காமல் சிரித்திருந்தோம்

கம்பு கொல்லையில் காக்காய் ஓட்ட
கரிசனமாய் சென்றிடுவோம்
நரியினை நாங்கள் பார்த்திருந்தால்
நாலு பாய்ச்சலில் வீடு வர

தினம் தினமாய் தீபாவளி
திருவிழாவில் வெடி வைத்து
பெரிசுகளின் தொல்லைகளை
பிரமதாமாய் சமாளிப்போம்

பக்கத்துக்கு வீட்டு கூரைகளில்
பகையெனத்தான் வெடியை விட்டு
புகையும் போது போய்சென்று
புதிய நட்பாய் அணைத்திடுவோம்

இந்த தீபாவளில் எல்லா தவறுக்கும்
இனிய வெடியை கொளுத்தி
இயன்ற வரையில் சிரித்திடுவோம்
எனதருமை நண்பர்களே !

பெண்ணே !

நீயென் ஆன்மா என்றாய்
காதலிக்கும் போது
நீயெல்லாம் ஒரு ஆம்பிள்ளையா என்றாய்
கல்யாணத்திற்கு பிறகு !

அப்போதும் உன் மீது அன்பு வைத்தேன்
அபரிமிதமாக கூட இப்போதும் அன்பு வைத்திருக்கிறேன்

இரண்டு சம்பவங்களின் போதும்
இருந்தேன் ,விடுமுறை எடுத்து வேலைக்கு செல்லாமல்

பெண்ணே பிற கவிஞனின் எழுதல்ல இது நீ
பேசுறாய் என்றேன் எழுதுகிறேன்

காதலித்து கொண்டிருக்கேன்
கண்மணியே மீண்டும் என்னை காதலி !

வியாழன், 28 அக்டோபர், 2010

ஆக்டோபஸ் பால் !

மனிதநேய  விளையாட்டில்
மக்களுக்கு வெற்றியா ?
மரணத்திற்கு வெற்றியா ?

கணித்து சொல்
கண்ணே ஆக்டோபஸ் பால்

காலன் முன்னே வந்தவுடன்
காரணமாய் சென்றுவிட்டாய்

காத்திருக்கேன் நீ வரும் வரையில்
காலம் மூலம் பதில் சொல்லேன் !
தோல்வியென்று  தூற்றி விடாதே
மனிதனுக்கும் மனிதநேயதிர்க்கும்

சுனாமியே !

எரிமலை நடுவினில் நீ பிறந்து
இயற்கையின் கடலின் தொடை கிழிந்து
உதிரங்கள் அலையென நீ உயர்ந்து கிலியால்
உறைகின்ற மக்களில் நீ இறந்து
சவமென குவியலாய் நீ மிதந்து
சரித்திரமாய் இருக்கிறாய் சுனாமியென்று

வன்னி காடென்னும் அழிவினில் நீ பிறந்து
வல்லரசு நாடென்னும் போதையில் தொடை கிழிந்து
இரத்தமென்றும்  சுத்தமென்று நீ உயர்ந்து
இறக்கின்ற மனிதநேயத்தில்  நீ கிடந்து
ஈழமெனும் விடுதலையில் நீ மிதந்து
இலங்கைக்கு சுனாமியென்று  இருந்திடுவாய்

புதன், 27 அக்டோபர், 2010

ஆக்டோபஸ் பால்

வெற்றி உனக்கா?
தோல்வி  உன் கணிப்புக்கா ?
விளக்குவதற்கு முன்னே,
உன் விளையாட்டு நிறுத்தப்பட்டது.

திங்கள், 25 அக்டோபர், 2010

சிரிக்காதீர்

வெண் பலகை பேருந்தை கண்டு
விரைந்துதான் ஏறனும் என்று
பாய்ந்து நான் படி ஏறினாலோ
பாதம் தவறி கீழ் விழுந்ததனாலே

என்னை தூக்கி எவரும் விடவில்லை
என் மக்கம் தெளியும் பொது உணர்ந்தேன்

முட்டி முழுவதும் இரத்தம்
மூச்சு விடுவதில் சிரமம்
சற்று நான் தவறியிருந்தாலோ
சடலமாகி போயிருப்பேனோ

என் பின்னால் வந்திட்ட வண்டிகள்
எல்லாம் இதை உணர்ந்ததாலே
சட்டென்று நின்றுதான் போயி
சாவுகிராக்கி என்று திட்டியது என் சொல்வேன்

பெட்ரோலும் டீசலும் * தானே
பெரிய ஆளாய் வளர்வது போலே
சிரியர்கள் ஆட்சியாளர்கள் எல்லாம்
சிந்திக்காமல் ஏற்றிய விலையால்

போட்டியாய் புரிந்து கொண்டு
போக்குவரத்து துறையும் கண்டு
பல வண்ணங்கள் பேருந்துகள் எல்லாம்
பயணம் செய்கின்ற தூரங்கள் ஒன்றே

வித்தியாச விலைகளில் சீட்டு
விளங்காத ஏழைக்கு குட்டு
என் போன்ற ஆண் மகன் வெகுண்டால்
இருக்காது குடும்பம் என்றே
மிரட்டிய அதிகாரம் கண்டு
மெல்லத்தான் மாறி நான் போனேன்

வேலை நேரத்திற்கு செல்லனும் என்று
விதி தலையெழுத்தை நான் நொந்து
பதினெட்டு வதுதான் எனக்கு
படிக்காத காரணத்தினால் இன்று

தோள் பையை தொங்க விட்டு பின்னால்
துரத்திதான் நான் வந்து எறினால்
இளம் பெண்களெல்லாம் படிகளில் பக்கம்
இருந்துதான் என் சாகசம் இரசிப்பார்கள் என்றுதான்

நான் விழுந்த போதுதான் கிண்டலாய்
நாலு பேர்தான் பேசிகொண்டார்கள் இப்படி
கல்லூரி மாணவனாம் நானோ
காலம்தான் பதில் சொல்லும் இதற்க்கு !
* பிறமொழிச்சொல்

சிரி

குழந்தை முன்னாள் நின்று
குரலால் சொற்களை கூட்டி
மொழிகளால் நகைசுவையாய் சொல்வீர்
முழிக்காதீர் நான் சொல்வதை கேட்டு

ஆறு மாத கைக்குழந்தை ஒன்று
அதற்கு புரியாது எந்த மொழியும்
அக்குழந்தை விழித்திருக்கும் போது
அழகாக நீங்கள் சிரித்தால்
பொக்கை வாய் திறந்து
புரிந்துதான் சிரிக்குமே காண்பீர்

என் கவிதை எழுதி வைத்தால் நண்பா
இதற்காக சிரிக்கணும் என்று
கோபம்தான் கொள்ளாதே நீயும்
கொஞ்சம்தான் சிந்திக்க வேண்டும்

யார் பார்த்து நாம்  சிரித்தாலும்
இதழ் காட்டி நட்பாய்தான் சிரிப்பர்
பயித்தியம் போல் அல்ல இதை படி
பழகிடு புன்னகை பூக்க

கவலைகள் கூவம் கடலில் கலக்கும் அது
கரைந்துதான் அலையென சிரிக்கும்
நீதான் துன்பத்தை சுமந்து
நெருப்பைத்தான் குமைகிறாய் என்று

கடுப்பாகி போனதால் மழையோ
காய்ந்துதான் விட்டது பாரு
செருப்படி கொடுத்துதான் தூக்கம்
சிவக்கின்ற கண்களால் புரண்டு புரண்டு
படுத்துதான் இதைப்படித்த பின்பும்
பார்ப்பாய என் நண்பனே சொல்லுடா

நகைச்சுவை நான் ஒன்று சொல்வேன்
நன்றாக சிரித்துடு நண்பனே
கவலைகள் நான் கொண்ட போது - என்
கவிதைகள் முதல் பரிசென வங்குமே
சிரித்திடு என் சிறந்த நண்பனே - இது
சீக்கிரம் நடக்காது என்றுதான்

ஓ........ஆஅ .... இ ஓ........ஆ ஆ...... அ...
இ ........இ .......ஆ ......ஓகோ.... அ ..... ஆஅ

சனி, 23 அக்டோபர், 2010

இறுதி வரை யார் படிப்பார் ?

தரிசாய் இருக்கு தமிழ் பூமி
தயவு செய்து தமிழா இதை கேள்

நிமதியாக நீ பட்டா போடு
நேர்மையாக நீ பத்திரமாக்கு
கண்ணியமாக நீ கட்சிக்கு இதைசெய்
கடமையாக நீ பதிவை நடத்து
கட்டுபாடுடன் நீ இரகசியமாய் கொடுத்துவிடு

சமத்துவமாகதான் மாற்றான்மொழிக்காரன்  இங்கு
சண்டைக்கு வந்தால் தான் வெட்டு குத்துவிழும்
விபரமாக நான் நீதிக்கு செல்ல அது
விபசாரத்திலும் கேடாய் மாறும்

காவல் காரன்தான் விளக்கத்தை கேட்டு
கரிசனமாக புத்திமதி சொன்னான்
இருக்கின்ற இடத்திலே இருந்துவிடு
இல்லையென்றால் நீ இறந்திடுவாய்

சுடுகாட்டுமண்ணிலும் தமிழ் மண் இல்லை
சொன்னா கேளு கடலில்தான் மிதப்பாய்
சர்வதேசம்தான் சத்தமாய் சிரிக்கும் - என்
சடலத்தை பார்த்து தமிழ் மண்ணா பழிக்கும்

பட்டா நிலத்தையும் ஒட்டுமொத்தமாய் - இந்த
பாருக்குள்ளே நல்ல தமிழனாய்
பேரங்கள் பேசிடும் பிறமொழிகாரனோடு
பிடிவாதமாய் நான் வாங்கிடுவேன்

கூறு போட்டிட்ட குறும் கொலை கூட்டத்துக்கு
குடிசைகள் போட்டு நான்   பூட்டிடுவேன் - வேளை
சோறு போட்டு நான் சொல்லிடுவேன்
சொந்த என் தமிழ் நிலத்தின் பெருமைதனை

ஆறு நிலவிடும் கீழ்நிலத்தில்
அங்கு மேவிடும் மேகத்திலே
சேர் ஊன்றிடும் நாற்றங்கரையில்
செந்தமிழ்தான் நடவு பாட்டாய் மகிழ்ந்திடும்

கூட்டம் சேர்ந்திடும் பெண்பிள்ளை வட்டங்கள் பாரதியுடன்
கும்மியடிதிடும் நிலமென் நிலத்தில்
வெற்றிதான் எனக்கு
விதி  எதிரிக்கு புறமுதுகுதான்

பாட்டுக்கள் பாடி நான் பலவரி சொன்னாலும்
படிப்பது என்னவோ சிலவரிதான் என்பதால்
இத்துடன் முடித்து நான் என் கவி சொன்னேன்
இறுதிவரைதான் இதை யார் படிப்பாரோ ?

கண் தானம்

தமிழன் பிணங்கள் வீழ
தவிக்கின்ற என் கண்கள்
அற்பமாய் கண்ணீர் சொரிந்து
அழுதுகொண்டு இதைதான் சொல்லும்

எந்தன் கண்ணெடுத்து  - என்
எதிரிக்கு பொருத்திவிடுங்கள்
கண்கள் இல்லையென்று இந்த
கலியுகத்தில் போர் புரிகிறான்
அவன் அவயங்கள் தொட்டுபார்க்க
ஆவலாய் இருக்கின்றோம்

நிர்வாணமாய் தமிழச்சிகள்
நிலங்களில் வீழ்ந்திருக்க
பல விதைகள் போலிருந்து
பார்க்கட்டும் இந்த கண்கள்

மரங்களை போல் வளர்ந்து - வாழை
மண்ணாய் அவள் இருக்க
தலைவாழை போலிருந்து
தலைகுனித்து நின்றிடுவாள்

வெட்டிவிட வெட்டிவிட
வீர குருத்துகளை போல் வெடித்து
சிங்கள கொலைகளையே  தள்ளிடுவாள்
செந்தமிழ் மங்கையவள்

இந்த காட்சியை காண்பதற்கு
என் கண்கள்  எதிரிக்கு தேவைபடும்
கண்தானம் செய்திடுவேன்
கண்தானம் செய்திடுவேன்

தவறான எண்

இந்திய கைபேசியே
என் காதலை சொல்லிடுவாய்
பிறநாட்டு காதலெல்லாம்
பிரமாதமாய் வெற்றிபெற
நான் கொண்ட காதல் மட்டும்
நம்மோடுதான் இருக்குது சொல்லேன்
செல்லா செய்தியாய் (draft )
சிலவல்ல பலவாய்

தொலை தொடர்பு வழியினில்
தொடங்கட்டும் பயணம்
துண்டிக்கப்படும் தொடர்பெல்லையில் அவள்
தண்டிக்கப்படும் தனிமையினாலே நானே

தத்துவம் சொன்னேன்
" தவிக்கட்டும் கைபேசி - அவள்
தலையிலிருந்து விழும் முடியாய் "


அற்புதமாக நான் குறும்செய்தி  அடித்து
அவள் எண்ணுக்கு அனுப்பினால்
இல்லை எந்த பதிலும்
இருக்காது அவள் எண்
இருந்தாலும் அனுப்பிவிட்டேன்
உரையாட தைரியமில்லை எனக்கு
உளறிவிட்டால் அவள் காதல் இல்லை என்று

அற்புதமென்றேன் ஆகா ...ஆகா வென்றேன்
அதிசயம் தான் என்று கைபேசிக்கு முத்தமிட்டேன்
உள்வரும் குறும் செய்தி பெட்டகதிலே ஒரு
உயிரே வந்து காதல் படிக்கும் என்றால்

மாறிய எண்ணினால் - பல
மாதமாய் தொந்தரவு கொடுக்கும் மதிகெட்டவனே
அறுபது என்வயது அறிவாயடா
ஆனாலும் பெண்தான் உணர்வாயடா

பல காலமாய் எனக்கு பார்வை கோளாறு - அதனால்
படிக்க முடியவில்லை உன் குறும் செய்தியை
நேற்றுதான் கண் கண்ணாடி மாட்டினேன் - உன்
நிரம்பி வழிந்த குறும் செய்தி கண்டிட்டேன்
மறுபடியும் அனுப்பினால் உன்
மரியாதையை கெடும் மாநில குற்ற பிரிவில் உன் பெயரும் சேரும்
இந்திய கைபேசியே
இப்படிதான் உன் உதவியா ?

வியாழன், 21 அக்டோபர், 2010

தூக்கு மர நிழலில்

வெற்றி தூக்கு மரத்தில் தொங்குவதற்காக
தோல்வி கவலைகளை தூக்கிக்கொண்டு செல்கிறேன்


தமிழே தனி மரமாய் நீ இருந்தால் - உன்
தழையில் இதை எழுதி வைத்திடுவேன்
நீ கொடுக்கும் பிராண வாயுவால்
நிலைக்கின்ற  தமிழ் மக்கள் என்றுமே
செழிகின்ற நிலையிலோ சிங்களவன்
சிரிக்கின்றான் அதன் அர்த்தம் புரியலையா

இலையுதிர் காலங்கள் என்றுமே
இயற்கையாய் இருந்திடும் தொன்றுமே
மழை வரும் நேரத்தில் மகிழ்ச்சியாய்
மலர்களாய் குலுங்குவாய் உண்மையாய்

சிங்கங்கள் குகைகளில் வாழ
சீர் கெட்ட பிறவியால் முன்னர்
மார் திறந்து மதிகெட்ட பெண்ணாய்
மதம் பிடித்து சிங்கத்துடன் கூடி
பேர் பெற்ற சிங்களவன் பிதற்ற
பெருமை மிகு தமிழினமாம் புலம்பும்

காடினில் வளர்ந்திடும் புலியை
கற்பு வன்மையால் முறத்தினால் புடைத்து
சீர் பெற்ற நங்கைகள் எம் தங்கை
சிவக்கின்ற கன்னத்தில் பெண்மை
சோழனோ புலிக்கொடி பொரித்து
சொல்லிவிட்டான் வீரத்தை இமயத்தில்
காடென செழித்துடுவாய் நீ
கரும் புலிகளை வளர்திடுவாயே

நேரம்தான் மாறாதென
நெஞ்ச திமிரினால் கூறுகின்றான் பட்சே
ஆங்கிலத்தின் அடிமையினாலே
ஆட்சி செய்யும் பிரிவினை கொள்கையாலே
தமிழ் எழுத்தும் ஆங்கில எழுத்துமாக
தடுமாறும் ஒற்றுமையாலே
கட்சிகள் சேராதென
கை கொட்டி சிரிக்கின்றானே

தூக்கு மரம் நீயாய் மாறு - என்
துயரங்கள் நீங்குவதற்கு பின்
காடென வளர்ந்திடுவாய் புது
நாடென மலர்ந்திடுவாய்

செவ்வாய், 19 அக்டோபர், 2010

செம்மொழி ,செம்மொலி

தமிழ் எனும்  போதிலே
தடுமாறும் நாவினால்
அமிழ்தம் கூட அமில்தம் -ஆனது
ஆங்கிலம் தானே இதற்க்கு காரணம் ஆனது

மெட்ராஸ் சென்னையாம்
மெரினா மாறலையாம்
தமிழ் நாடு தமில் நாடாம்
தலை நகரமே வெட்கக்கேடாம்

செம்மொழி கூபாடம் எம்
செம்மொலி கேட்காதாம்
வலி ஒருநாள் வழியாகும் அந்த
வழக்கம் வரும்போது வலுக்கும் என்மொழி

தமில் மொழி தமிழ் மொழி
தன்னிகரில்லா செம்மொழி
வாழ்க வாழ்கவே
வாழ்க வாழ்கவே

ஆயுத படைப்பு நாள்

கத்தி எடுத்து பிறமொழி கறை துடைத்து
சுத்தி வந்து சொல்லுகின்றேன் செந்தமிழில்

ஆயுத பூஜை அல்ல, படைக்கும் ஆயுதத்தால்
செய்த ஆயுத படைப்பு நாளென்று

கத்தி கத்தி சொல்லுகின்றேன்
கண்டுகொள்ளுமா தமிழினம் இல்லை

குத்தி குத்தி கொன்றிடுமா தமிழை
குறைகளுடைய பிற மொழியால்

வெள்ளி, 15 அக்டோபர், 2010

காதல் காத்திருப்பு

காதல் -க்கும், காத்திருப்பு - க்கும்
கா வேண்டுமென்றால் முதல் எழுத்தாய் இருக்கலாம்
ல்-க்கும், பு -க்கும் இருக்கும் இடைவெளியில்
இறுதியாய்  இருந்து நான் புல்லாய் கருகிறேன்
புரியுமா காத்திருப்புக்கு !

மதி என்ற மனிதனின் சதி

யார் சொன்னது மனிதனுக்கு மட்டுமே அறிவு உண்டு என்று
பேர் வேண்டுமானால் சூட்டிகொள்ளலாம்

மனிதனை தவிர மற்ற எல்லா உயிர்களுக்கும் அறிவு உண்டு
மனிதனுக்குத்தான் அது இல்லை

இயற்கை என்னிடம் சொன்னது
ஏனென்றால் அது இறந்து கொண்டிருக்கிறதாம்

செவ்வாய், 12 அக்டோபர், 2010

பிணமல்ல தாய்

பெற்ற தாயை பிணம் என்றா அழைப்பாய்
மம்மி* என்றால் மற்ற மொழியில் பதபடுத்தப்பட்ட  பிணம்தான் புரிந்து கொள்

அம்மா என்று அழை அவள்
அடுத்து வருகின்ற பிறவிகெல்லாம்
ஆண்டவன் அம்சமாய் காத்திடுவாள் உன்னை
விலங்குகள் கூட விபரம் தெரிந்ததால்தான்
விளக்குகிறது தமிழின் புகழை அம்மாவென்று

* பிற மொழி

அம்மா உனக்காக சாபமிடுவேன்

மாக்கள் உன் பெயரை அழைத்து மகிழ்திருக்க
மக்கள் எதனாலோ உன்னை மறந்தனர்

ஆங்கில மொழி தந்துவிட்ட போதையினால்
அரை மயக்கத்தில் அகப்பட்ட என் மக்களுக்கு சாபமிடுவேன்

மக்களெல்லாம் மாக்களாக பிறக்க வேண்டும்
மறவாமல் தமிழ் பெயரில் அம்மா என்று அழைக்க வேண்டும் !

திங்கள், 11 அக்டோபர், 2010

முதிர் கன்னி

பெண்ணாய் பிறந்து திருமண
பேரம் படியாமல், இப்பிறவியில்

ஆணாய் பிறக்க ஆசைப்பட்டு
அர்பணிக்கிறாள் இவ்வாழ்வை

சனி, 9 அக்டோபர், 2010

தீர்க்கதரிசனம்

இலங்கைக்கு இரண்டு கண்கள்

இரண்டில் ஒன்று குருடு  

இன்னொன்றிலோ கண்ணீர்

கண்ணீரில் தமிழ் மக்கள்

கண் குருடில் சிங்கள(ல) ங்கள்

கண்ணீர் விரைவில் நின்று போக

காலம் நெருங்கி வந்துவிட்டது

ஊன கண்ணும் ஒளி பெற

உரிய நேரம் வந்து விட்டது அது

ஒளி பெற்ற கண்களால்

உற்று பார்த்தது தன்நாட்டை

தமிழ் ஈழ நாடு தானே

தன்நாட்டை ஆட்சி செய்யும் நிலையினை

நினைத்துதான் பார்க்கையிலே

நேற்று செய்த தவறெல்லாம் நீண்டது

நிர்வாண பிணங்களிலும்

நிர்வாகமும் இராணுவமும் கற்பழித்ததும்

கற்பனையிலும் காணாதே தமிழ் ஈழம்

கைகொட்டி சிரித்த அந்நாளை

முள்ளி வாய்க்காளில் தமிழ் தாயின்

முந்தானை பிடித்து இழுத்ததையும்

பாஞ்சலியாய் இருந்த தமிழன்னையை  

பார்த்து பரவச பட்ட பாரதத்தின்

முன்னாள் மன்னன் திருதராஷ்டிரன்

முடிவை எண்ணி பார்க்காத பட்சேக்களுக்கு

பரிசாய் பிச்சை பாத்திரத்தில்

பரிதாப பட்டு தமிழ் தாய் சில பருக்கைகளை போடும் போது - என்

தீர்க்க தரிசனம் நிகழ்ந்து விட்டதை எண்ணி

திரும்பிய திசைகளெங்கும் உரக்க கத்துவேன்

நான் தான்டா  தமிழன் ..........!

வெள்ளி, 8 அக்டோபர், 2010

காதல்

இயற்கையும் உலகமும்
எதிர்காலத்திலும் நிலைக்க போகும்
இரகசியம் .

தமில்!

மன்னித்துவிடு ஸாரி* என்று சொல்லி
மண்டியிட்டு கிடக்கிறது என் அன்னை தமிழ் !


* ஆங்கிலச் சொல்

வியாழன், 7 அக்டோபர், 2010

மழலைச் சொல் இருபத்தி நாலு மணி நேரத்தில்

ஒன்பது மணி நேரம் உறங்கி விட்டேன்
ஒரு மணி நேரம் கைபேசியில் பேசிவிட்டேன்

இரண்டு மணிநேரம் மாநகர பேருந்தில் இல்லாத இடத்தில நின்று பயணித்து விட்டேன்

எடுத்த பசிக்காக வேளைஒன்றுக்கு
இருபது நிமிடங்கள் என் சாப்பாட்டோடு காலத்தையும் விழுங்கி விட்டேன்

அலுவலக வேலையில் அரைமனதாய்
ஆறு மணி நேரத்தையும் ஓட்டிவிட்டேன்

பல் விளக்கவும் குளிக்கவும் பதினைந்து நிமிடம் என்றாலும்
பகிர்ந்து கொள்ளும் நிலையில் குடித்தனம் என்பதால்
பாழாக்கி கொண்டேன் வரிசையில் மூன்று பதினைந்து நிமிடங்களை மேலும்

மளிகை கடைக்கு செல்லவும்
மற்ற பொருளை வாங்கவும் ஒரு மணி நேரத்தை செலவழித்துவிட்டேன்
மனைவிக்கு ஒத்தாசை செய்கிறேன் என்று தண்ணீர் பிடித்து,
தரையினை துடைத்து குப்பையாக்கிவிட்டேன்

 அழுவதும், அவிழ்பதுமான பெண்களை அரைமனதோடு
பார்த்து  அழுக்காக்கி விட்டேன் அரைமணிநேரத்தை தொலைகாட்சி பெட்டியில்

மூன்று நாளைக்கு முந்தி இறந்தவரின் பிள்ளைக்கு
முக்கால் மணி நேரமாய் இணையவழி உரையாடலில்
முடிந்தால் கருமாதிக்கு வருவதாய் சாவுக்கு வராத வருத்தத்தை சற்று கூட்டி மெழுகி கூறினேன்

கால் மணி நேரத்திற்கு முந்தி நான்
காலையில் என் பிள்ளை கொடுத்த ஈர முத்தத்தை  மறந்து போனதையும்
செம்மொழி என்றால் என்னவென்று
சிவப்பு நிறத்தில் பேனாவும்
சில இனிப்புகளும் வாங்கி வா என்பதையும்
சிந்திக்கிறேன் இது வரையில் நான் வாழ்வதே வீண் என்று

செவ்வாய், 5 அக்டோபர், 2010

மரணத்திலும் ஒரு கவிதை

இறுதியாக ஒரு கவிதை எழுது என்றால்

உயிர் மூச்செடுத்து  ஒரு கவிதை எழுதிவேன்

மகிழ்ச்சியாக மரணத்திலும், தமிழ் வாழ்கவென்று !

காதல் டா காதல் டா ....

ஆசையாக நீ அழைக்கும் போதுதான் நான்
ஆனந்தமாக ஏற்றுக்கொண்டேன்  டா(da)வை,

அழகாக இருக்கிறது
அப்படியே அழை என்றாய் டி  (dy) யை ,

உனக்கும் எனக்கும் ஒரு குழந்தை பிறந்து
ஒரு வயதில் என்னை,
 டாடி(dady) என்று அழைப்பதாக  கனவு கண்டேன்!

தாடியோடு பழசை நினைக்கும் போதுதான்- நீ
டா டா என்று அழைத்ததெல்லாம் எனக்கான
டா டா வென்று முற்று புள்ளி வைப்பாய் என்பது.
* ஆங்கில மொழிச் சொல்

வெள்ளி, 1 அக்டோபர், 2010

தங்கைக்கு கல்யாணம்

தென்றல் நித்தம் தேடி - இவள்
திருமணத்தை பார்த்து வைக்கும்

சூரியன் சோடி சேர்த்து  - இந்த
சொர்கத்தை திறந்து வைக்கும்

புள்ளிமான் எண்ணி கொண்டு - இந்த
புது நாளை பொருத்தி வைக்கும்

இரவுகூட மாலை கொடுத்து
இளம் தம்பதிக்கு வாழ்த்து படிக்கும்

நிலவு கூட வளர்ந்து வந்து
நீண்ட ஆயுளுக்கு வேண்டி கொள்ளும்

மழை கூட சூள் கொண்டு
மக்கட் பேருக்காய் நீர் கொள்ளும்

பொன்கூட பொருள் கொடுக்க
பொருத்தமான முகூர்த்தம் சொல்லும்

இவளென் தங்கை என்றே
எனக்குதான் கர்வம் கொள்ளும்

ஆனந்த கண்ணீரில்
அண்ணன் என் வாழ்த்துகளை

மங்கை இவள் மனதில் வைத்து
மறு பிறப்புக்கும் வந்து பிறப்பாள்

மாணிக்க தங்கையாக
மகிழ்ச்சியான எங்கள் குடும்பத்துக்கு

ஓடி வா வா ....................

சாப்பாட்டு குண்டர்களை சாவி கொடுத்து
சரிகின்ற பொருளாதரத்தை தடுத்து நிறுத்த
கூப்பாடு போட்டுவிட்டார் ஹுசைன் ஒபாமா
கொலம்பிய கல்லூரியில் படித்தனாலோ

தொலைதொடர்பு துறைகளையே துரத்தி துரத்தி
துவளுகின்ற தன் மக்களுக்கு தூக்கம் கொடுத்து
கனவுகளையே காணச்சொன்னர்  அய்யோ பாவம்
கண்கெட்ட பின் சூரிய நமச்காரத்தினால்

இந்தியாவிற்கும் சைனாவிற்கும் ஏக போட்டி
எல்லா துறை வளர்சிகளுக்கும் வேக போட்டி
நடுவில் வந்த நாட்டாமையாய்  நரித்தனம்  காட்டி
நல்லவர் போல் வந்து செல்வார் பெய்ஜிங் அணுகுண்டு காட்டி

இரண்டாம் உலகபோரினிலே அணுகுண்டை போட்டு
இருபதாம் நூற்றாண்டு வரை பயம் காட்டி
பசி துன்பம் மறைத்திருந்தார் பல வித்தை காட்டி
பகல் கொள்ளை நாடென்ற தன் பெயரை போற்றி

பொருளாதார வீழ்ச்சியினால் பொய்மை வெளுத்து
புரியாத புத்தியினால் குறுக்கு வழியினால்
பிச்சை பாத்திர ஒப்பந்தத்தில் ஓட்டை காட்டி
பிழிகின்ற பசியினால் அணு இரு கை காட்டி

புது டெல்லி என்ற வள்ளலுக்கு புகழ்மேல் போதை
அதற்கு
புறியாது அரசியலின் புதுவித பாதை
ஆண்டர்சென்னை தப்பவிட்ட அனுபவத்துக்கு இது தேவை அதற்க்கு
அணு (னு) சரனையாக யுருக்குதான் அணுவிபத்து மசோதாவை

வாழ்த்தி செல்ல வருகின்றார் ஆப்பிரிக்க அமெரிக்க கொடுமை - அவர்
வருகின்ற வழியில்தானே அவுட் சொர்சிங்கு ஆப்பு*
விசா கட்டணம் உயர்த்தி வேகம் கூட்டி
விசாரிக்க வருகின்றராம் இந்திய நலம் மீட்டி

ஐ டி துறை வல்லுனர்களே தூக்கம் துரத்து
ஐக்கிய அமெரிக்க வல்லரசின் ஏக்கம் பொறுத்து

காதல் மாத்திரை

காதல் நோய் வந்தது

கவிஞன் மருத்துவனும் வந்தான்

கைபிடித்து நாடி பார்த்தான்

கன்னம் தொட்டு யோசித்தான்

நெற்றியிலே நீவிவிட்டு பின்

நினைவுகளை ஓட விட்டான்

இதயத்தின் மேல் மிருதுவாக

இன்பத்தை கொடுபதுபோலே

கூடிய குடும்ப கூட்டத்தை பார்த்து

கொஞ்சம் பக்கத்தில் வரச்சொன்னான்

கொடும் நோயின் தரம் சொன்னான்

தனிமை தேவை என்றான் கூட்டத்தை
தள்ளியே இருக்க சொன்னான்

காதருகே வந்தான்

கனிவாக பேசினான்

மோகத்திலே சிக்கி

முத்ததிலே  திக்கி

மோனையிலே மூன்றும்

முழுதாய் எதுகையிலே இரண்டும்

சந்திலே கொஞ்சம் மனச்

சஞ்சலத்தில் குழப்பி

கற்பனையை கொன்று

கனவுகளையே தின்று

நிஜத்திலே * நீராகரத்தோடு

நினைவில் வை மறந்து விடாதே

நினைவில் வை மறந்து விடாதே

 நிஜத்திலே * நீராகரத்தோடு

நித்தம் நீ பருகி வா ... வெகு

நேரத்திலே நீ தேறலாம் என்றான்

சம்பளத்தை சாயுங்காலம் வரும்போது வாங்கி கொள்வேன்

சற்று கவனத்தில் வை - அவள்

வளையல் உடைசல் வாடிய மலர்களை நான்

வரும் போது சேகரித்து வை என்றான்

கோபம் வருகிறது கொடும் கோபம் வருகிறது

குமரி என் காதலியின் நிழல் தொட்டால் கூட

நெருப்பாய் மாறி நான் நினைவையே அழிப்பேன்

நெடும் நேரந்தான் வஞ்சிக்கும் என் கனவு
கவிஞனை  எப்படி ஒழிப்பேன்  * பிறமொழிச் சொல்