பக்கங்கள்

செவ்வாய், 11 ஜனவரி, 2011

தை பிறக்கும் சேதி பிறக்குமா ?

உசுமானிய மாணவர்களை பார்த்ததனால்
உள்ளுக்குள் உரைத்ததை சொல்லுகின்றேன்
ஒற்றுமையை சீர்குலைக்க எண்ணமில்லை

தமிழுக்கு யார் என்ன செய்தார் அதனால்
தவிப்பாய் கேட்கிறேன் மன்னியுங்கள்


கிறித்துவுக்கு பின் கி.பி
கிழைமைக்கு பின் மாதம்
பழமைகெல்லாம் சித்திரை
பைத்தியம் கொண்டதாம் தையாய்

தை பிறந்தால் வழி பிறக்கும்
தமிழ் மாதம் பிறந்தால்
தனி நாட்காட்டி கிழிக்கும்

அரசாங்க ஆணையில்லை
ஆணவத்தின் தலைவனென
ஈனத்தின் வரலாறுயென

மானமின்றி செத்தாலும்
மறக்க கூடாது தன்பெயரை
இரகசியத்தின் இராட்சசன்
இரட்சித்தார் தமிழுக்கு

காசுக்கு ஓட்டு வாங்கி
கவிதைக்கு நாட்டை வாங்கி
பஞ்சங்கத்தின் இராகுகாலம்
பாடாய் படுத்துகின்றதே

எமகண்டம் எனக்கிருக்கு
இக்கவிதை எழுதியதால்
எழவுக்கு வருவோர்கள்
என்னத்தான் சொல்வார்களோ ?

பட்டுகோட்டை செத்துவிட்டான்
பாரதியும் செத்துவிட்டான்
பைத்தியம் என்னை கொன்றுவிட்டு
பழிதிடுங்கள் தமிழ் மொழியை !

பஞ்சாங்கத்தில் பார்த்திடுங்கள்
பழந்தமிழின் நட்சத்திரமென்ன ?

தையின் பிறப்பில்தான்
தமிழ் மாதம் பிறந்து விட்டால்
நாட்காட்டியும் நட்சத்திரமும்
நன்றாக வளரவில்லையே ?

நானாக உளறவில்லை
நன்றாக எண்ணி பாருங்கள்
சத்தம் போட்டு சொல்லாதீர்
சரித்திரத்தின் சரித்திரத்தை
சாவின் என் தரித்திரத்தை

ஆங்கிலத்தின் நாட்காட்டி
அன்றன்றாய் பழிக்கும்போது
தமிழ் தன் தாளில்தான் (பாதம் )
தவறாமல் கிழிக்கட்டும் தேதியாய்

இதுவே என் செய்தியாய்
இதுவே என் செய்தியாய் 

கருத்துகள் இல்லை: