பக்கங்கள்

வெள்ளி, 28 ஜனவரி, 2011

மணலெடுத்து முகம் கழுவினேன் மாற்றத்தில் காதல்


ஆற்றின் கரைகளில் யார் நான்தானடி
அடங்கா நீர் பெருக்காய் அலைவது இதுதானடி

காற்றின் தனிமையடி காதலும் தென்றலும்
காதோரம் பேசுவது ஞாபகத்தின் இனிமையடி

கொக்குவொன்று குறிபார்க்கும் குளமாக மனமாக
சிக்குவேன்று சிக்கிக்கொள்ளும் சாக துடிக்கும் மீனாக

நாரையும் சூரியனும் நாட்களுக்கு உயருதடி
நரையும் நானும் காதலுக்கு குறைச்சலாடி

தாவணியில்லாமல் தள்ளாடும் உன் கைதடியில்
ஆரணி வெள்ளமாய் அடங்கிப்போன மணலடியில்

சேரடியில்லாமல் பித்தவெடி உன் காலடியில்
சேர்ந்து கிடந்தது எனக்கு மாறித்தான் போகுமா

அப்போது காதலிலே ஆசைகளும் பலவுண்டு
ஆறுக்கு நீருண்டு அதைப்போல நீயுண்டு

கரைகளும் இரண்டுண்டு நம் கல்யாணம் போல் சேர்ந்ததுண்டு
கறையில்லா உள்ளம் வெல்லம் கற்கண்டில் தோற்பதுண்டு

நீயெனக்கு குழந்தையடி நினைவிருக்கா நாம் குழந்தையடி
நிச்சயம் நமக்கு புரியும்படி நீ பெற்றெடுத்தாய் நம்
குழந்தையடி

நீருக்குள்ளே மீன்குஞ்சும் நீ பெற்றெடுத்த நம் பிஞ்சும்
ஊற்றுகுள்ளே ஓயாது போலே  பாசத்தால் ஓடி நீயுதடி

பாரெல்லாம் கேட்குது கேள்வி பாடடி நம் பதிலை
நீரெல்லாம் மீன் குஞ்சு நீத்த நிறையத்தான் கற்றுகொடுக்க

அம்மா மீனும் அப்பா மீனும் ஆலோசனை கேட்டது நம்மை
சும்மாயில்லை சுவர்க்கம் வரை நீந்தி சொல்லிதந்தோம்  பாசத்தில் நீதி

தூண்டினில் சிக்கியது வயது தொலைத்து எத்துனை இன்பம்
தூளியில் தவிக்குது பழசு துணிச்சலாய் இருக்க நாம் பெரிசு

வலைகளில் வீசும் வாழ்க்கை வாரித்தான் போகுது நிலையை
அலைகளில் பேசும் கரையும் ஆழத்தில் மௌனத்தில் உறைய

கண்களும் கரையாய் மாறும் கண்ணீரும் ஆறாய் ஓடும்
காலம் மட்டும் மணலாய் மாற கைகளும் காதலை ஏந்தும்

முகம் கழுவ முதுமையும் தாங்கும் மூச்சுக்கு புதுமைதான் ஏங்கும்

நீ மட்டும் புதுமைதான் என்றும் நில்லாமல் நீயெனக்கு தொடர்பிறவி
தீமூட்டும் மணற்கொள்ளை கூட்டம் திருந்தாமல் பிரிக்குது நாணல் நம்மை


கருத்துகள் இல்லை: