பக்கங்கள்

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

பிணம் கூட வாக்களிக்க வந்திடுமே !

வெண்மை நிற தள பேருந்திற்காய்
விழிகள்  நான் மூட வில்லை
வெயில் கூட கோபத்தினால் சூடாச்சு
வியர்வையினால் என் மேனி பாழாச்சு
நாடள நான் இட்ட வாக்கு
நகக்கண் ஓரத்திலே காயும் முன்னே
பாராளுமன்ற தேர்தலும் பக்கத்தில் வந்து
பணம் கூட பிரியாணி  சேர்த்து தந்து
தெரியாத முகத்துக்கு தீர்பபுசொல்ல
திருட்டு வழி இரவினிலே சேதி கொள்ள
புரியாத அரசியலுக்கு பொறுப்பை காட்ட
புத்திமதி சொல்லுகின்றார் கொஞ்சம் அல்ல
என்னப்பன் அரசியலில்  இருந்திருந்தால்
என் குடும்பம் சுபிட்சமாக இருந்திருக்கும்
அவன் செஞ்ச தப்புக்காய் நான் பிறந்து
அல்லாட நினைக்கின்றேன் அவமானத்தால்
என் சாமீ  நீ கேட்பாய் இளக்காரமாய்
என்னைத்தான் அரசியலில் இறங்கசொல்லி
அட போப்பா அதெல்லாம் இப்போ முடியாது
அதற்கான காரணத்தை சொல்லுகின்றேன்
எத்தலைவனும் தன் பிள்ளை அரசியலில்
எமகடுத்த தலைவன்தான் இயம்புகின்றான்
கொடுமைதான் மக்களாட்சி  மாக்கள் ஆச்சு
கொள்ளையெல்லாம்  குடும்பசொத்து கொள்கை ஆச்சு - நான்
பிடிவாதமாய் தேர்தல் நாளில் வேலைக்கு செல்ல
பிரியாணி கடையில்தான் சேர்ந்திருந்தேன்
ஆட்டுக்கறி பிரியாணியில் பன்றி கறி
அதற்குகூட சண்டையிடும் தொண்டர்கூட்டம்
இதென்ன கொடுமையென இயம்புகின்றேன்
இன்னுமொரு இரகசியத்தை புலம்புகின்றேன்
நாய் கறியை போடசொல்லி  வட்டம் சொல்ல
நன்றியாகத்தான்  வாக்களிக்க கூட்டம் செல்லும்
பேய் கறியை போட்டுவிட்டால் எதிர்கட்சிதான்
பிணம் கூட வாக்களிக்க வந்திடுமே
போர் கொடிதான் தூக்கிவிட்டார் என் தலைவன்
பொறுமையாக படித்திடுங்கள் தலைவிதியை
நாளைக்கு நான் எழுத வருவேனோ
நம்புகிறேன் வெண்மை நிற தள பேருந்திற்காய்
காலங்கள் போனால் இனி திரும்பாது
கற்கும் பொது சொன்னது புரியாது
எழுதும்போதும்  வலிக்கிறதே உண்மை சொல்ல
எல்லோரும் மன்னியுங்கள் என்னை மெல்ல
விலைவாசி விஷத்தினால் மயங்கிவிட்டேன்
விழித்திருந்தால் மீண்டும் நாம் சந்திப்போமே !

கருத்துகள் இல்லை: