பக்கங்கள்

திங்கள், 20 செப்டம்பர், 2010

என் சர்வதேச காதலியே

அவள் : ஆஸ்திரேலியா கங்காருபோல காதலா தாவதடா
 ஆபிரிக்க குரங்கு போல கவிதையால கீறாதடா

நான் : சீனா போல சீறி என் இளமை அடக்கி வைச்சுபுட்ட
சிலியைபோல சுரங்கத்தில் தள்ளி என்னை தண்ணி குடிக்க வச்சுபுட்ட

அவள் :  அமெரிக்க ஒபாமா போல ஒருவாரம  நீ உளறி கொட்டாதே
ஆப்கன் ஒசாமா போல கனவில் வந்து என் உறக்கம் கெடுக்காதே

நான் : சுவிஸ் வங்கி கண்ணாலே என்னை சேர்த்து தச்சுபுட்ட  இந்திய
சுதந்திரம் போல ஏங்கி என்னை தவிக்க வச்சுபுட்ட


அவள்  பாகிஸ்தான் வெள்ளம் போல சூழ்ந்து வந்து என் வேலை கெடுக்காதே
பங்களாதேஷ் புரட்சி போல என் நெஞ்சில் ஆட்சி புடிக்காதே

நான் : பிரான்ஸ் போல அணு மின்சார கையால் என்னை அடிச்சு வைக்காதே
பிரேசில் போல உன் நெஞ்ச கணணியில் என்னை தேட வைக்காதே

அவள் : பிரிட்டன் பிரபு போல உந்தன் கொ(ச) ட்டம் தாங்க முடியல இலங்கை
பிரீச போல கீழ விழுந்தாலும் மீசையில மண்ணும் ஒட்டல

நான் : இத்தாலி காரை போல வந்து என்னை இருட்டில் தள்ளாதே
இந்தோனேசியா மலையைப்போல நடுங்கி உன் மடியில் தள்ளாதே

அவள் : சுவிசர்லாந்து போல சுற்றுலாவில் நான் கொழுத்து திரியிறேன் வட
சூடான் போல திமிர்தனமாய்  பேசி திரியுறேன்

நான் : ஈரானை போல குண்டு வச்சு என்னை இழந்து போகாதே
இஸ்ரேல் போல கடலில் மறிச்சு என்னை கொன்று  போடதே

அவள் : தென் கொரிய போனாய் * என்னை தொல்லை கொடுக்காதே
தென் சூடானை போல என் வழியில் நான் தனியே செல்லுறேன்

அவள்  : கரீபிய கடல் திமிங்கலம்மாய் நீ காமம் பிடிக்கிற
கச்ச தீவு கற்பு எந்தன்  வலையை அறுக்கிற

நான் : எரித்திரியா போல இருக்க எனக்கு ஒரு வழியும் சொல்லடி
எகிப்து பிரமிடு போல குறுக்கில் ஏண்டி இனியம் தள்ளி நில்லடி

அவள் : ஐக்கிய நாடு போல அருகில் வந்து இரகசியமாய்
ஐ லவ் யு சொல்லடா * என்னை அணைச்சு கொள்ளடா

* ஆங்கில சொல்

கருத்துகள் இல்லை: