பக்கங்கள்

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

புலம்புகின்றாள் என் தமிழன்னை

புலம்புகின்றாள்  என் தமிழன்னை
போரில் குழந்தை இழந்தேன் என்று
இயம்புகின்றேன் என் வழியில்
இதயம்முள்ளோரே  கேளுங்கள்

மறக்கணவன்  முன்னாள் இழந்தேன்
மற்றுமுள்ளோர்  நேற்று இழந்தேன்
கொஞ்சி பேச மூன்று வயதில்
குழந்தை ஒன்று அன்பாய் வளர்த்தேன்

அந்த குழவி வீரம் கொண்டு
ஆவேசமாய் என்னிடம் வந்து
தந்திடுவாய் தமிழ் வாளை
தலை நூறு கொய்திடுவேன் என்று

எந்தன் தாய்மை பெருமை ஆச்சு
எடுத்த பிறப்பும் முக்தி ஆச்சு

சொந்த வரியில் கீழுள்ளவரே
சொல்லுகின்றேன் என்வுளவாறே
ஆறுமாத கற்பதிலிருந்தே - என்
அன்னை வயிற்றில் அபிமன்யு போலிருந்தே

தங்க கவிதை தா என்றேன் குறுநதொகையளித்தாய்
சங்க கவிதை தா என்றேன் வை  கை தலை என்றாய்

தமிழ் கவிதை தாயென்றேன் இதையளித்தாய்
அமிழ்த  கவிதை தாயென்றேன் என் கை பிடித்தாய்
அருள் கவிதை தாயென்றேன்  அருகில் வா என்றாய்
பொருள் கவிதை கேட்டுவிட்டால் பொறு என்றாய்
இலக்கிய கவிதை கேட்கின்றேனே இடை தொட்டாய்
விளக்கிய கவிதை விவரித்தால் அகநானூறு விடையளித்தாய்
இசை கவிதை கேட்டுவிட்டால் குறட்பாட்டிசைதாய்
வசை கவிதை வரைவதற்கோ வேற்று மொழி கொடுத்தாய்

வசனகவி கேட்டுவிட்டால் பெரும் தொ டையிளிட்டாய் - திரு
வாசக கவிதை கேட்டு விட்டால் உன் அடியிலிட்டாய்

புது கவிதை கேட்டுவிட்டால் புதுவை குயில் கொடுத்தாய்
எது கவிதை கேட்டுவிட்டால் என் எழுதென்பாய்

காதல் கவிதை கேட்டுவிட்டால் கம்பன் வழி தொடுத்தாய் - இன
மோதல் கவிதை கேட்டுவிட்டால் பெரும்பாணாற்று படை கொடுத்தாய் இலங்கை செல் என்றாய்
போர் கவிதை கேட்டுவிட்டால் வீரம் சொன்னாய் - அரும்
பேர் கவிதை குழந்தை கையில் புறநானூறு வாள்கொடுத்தாய்

செம்மொழி கவிதையாய் குழந்தையாய் நெஞ்சின் தழும்பாய்
இம்மொழியால் புலம்புகின்றாள் என் தமிழன்னை.

கருத்துகள் இல்லை: