பக்கங்கள்

சனி, 23 அக்டோபர், 2010

கண் தானம்

தமிழன் பிணங்கள் வீழ
தவிக்கின்ற என் கண்கள்
அற்பமாய் கண்ணீர் சொரிந்து
அழுதுகொண்டு இதைதான் சொல்லும்

எந்தன் கண்ணெடுத்து  - என்
எதிரிக்கு பொருத்திவிடுங்கள்
கண்கள் இல்லையென்று இந்த
கலியுகத்தில் போர் புரிகிறான்
அவன் அவயங்கள் தொட்டுபார்க்க
ஆவலாய் இருக்கின்றோம்

நிர்வாணமாய் தமிழச்சிகள்
நிலங்களில் வீழ்ந்திருக்க
பல விதைகள் போலிருந்து
பார்க்கட்டும் இந்த கண்கள்

மரங்களை போல் வளர்ந்து - வாழை
மண்ணாய் அவள் இருக்க
தலைவாழை போலிருந்து
தலைகுனித்து நின்றிடுவாள்

வெட்டிவிட வெட்டிவிட
வீர குருத்துகளை போல் வெடித்து
சிங்கள கொலைகளையே  தள்ளிடுவாள்
செந்தமிழ் மங்கையவள்

இந்த காட்சியை காண்பதற்கு
என் கண்கள்  எதிரிக்கு தேவைபடும்
கண்தானம் செய்திடுவேன்
கண்தானம் செய்திடுவேன்

கருத்துகள் இல்லை: