பக்கங்கள்

சனி, 23 அக்டோபர், 2010

இறுதி வரை யார் படிப்பார் ?

தரிசாய் இருக்கு தமிழ் பூமி
தயவு செய்து தமிழா இதை கேள்

நிமதியாக நீ பட்டா போடு
நேர்மையாக நீ பத்திரமாக்கு
கண்ணியமாக நீ கட்சிக்கு இதைசெய்
கடமையாக நீ பதிவை நடத்து
கட்டுபாடுடன் நீ இரகசியமாய் கொடுத்துவிடு

சமத்துவமாகதான் மாற்றான்மொழிக்காரன்  இங்கு
சண்டைக்கு வந்தால் தான் வெட்டு குத்துவிழும்
விபரமாக நான் நீதிக்கு செல்ல அது
விபசாரத்திலும் கேடாய் மாறும்

காவல் காரன்தான் விளக்கத்தை கேட்டு
கரிசனமாக புத்திமதி சொன்னான்
இருக்கின்ற இடத்திலே இருந்துவிடு
இல்லையென்றால் நீ இறந்திடுவாய்

சுடுகாட்டுமண்ணிலும் தமிழ் மண் இல்லை
சொன்னா கேளு கடலில்தான் மிதப்பாய்
சர்வதேசம்தான் சத்தமாய் சிரிக்கும் - என்
சடலத்தை பார்த்து தமிழ் மண்ணா பழிக்கும்

பட்டா நிலத்தையும் ஒட்டுமொத்தமாய் - இந்த
பாருக்குள்ளே நல்ல தமிழனாய்
பேரங்கள் பேசிடும் பிறமொழிகாரனோடு
பிடிவாதமாய் நான் வாங்கிடுவேன்

கூறு போட்டிட்ட குறும் கொலை கூட்டத்துக்கு
குடிசைகள் போட்டு நான்   பூட்டிடுவேன் - வேளை
சோறு போட்டு நான் சொல்லிடுவேன்
சொந்த என் தமிழ் நிலத்தின் பெருமைதனை

ஆறு நிலவிடும் கீழ்நிலத்தில்
அங்கு மேவிடும் மேகத்திலே
சேர் ஊன்றிடும் நாற்றங்கரையில்
செந்தமிழ்தான் நடவு பாட்டாய் மகிழ்ந்திடும்

கூட்டம் சேர்ந்திடும் பெண்பிள்ளை வட்டங்கள் பாரதியுடன்
கும்மியடிதிடும் நிலமென் நிலத்தில்
வெற்றிதான் எனக்கு
விதி  எதிரிக்கு புறமுதுகுதான்

பாட்டுக்கள் பாடி நான் பலவரி சொன்னாலும்
படிப்பது என்னவோ சிலவரிதான் என்பதால்
இத்துடன் முடித்து நான் என் கவி சொன்னேன்
இறுதிவரைதான் இதை யார் படிப்பாரோ ?

கருத்துகள் இல்லை: