பக்கங்கள்

சனி, 11 டிசம்பர், 2010

என்னுடைய பாரதிக்கு 123- வது பிறந்தநாள் !

பதினொன் கீழ்கணக்கு எங்கள்
பாரதியை பார்த்தது
பண்டைத்தமிழ் புகழையெல்லாம்
பரிசளிக்க சேர்ந்தது
பன்னிரண்டு திங்கள் எல்லாம் இந்நாளுக்கு
பார்த்து பார்த்து ஏங்கியது
ஆயிரத்தி எண்ணூற்றி எண்பத்திரண்டு
அவனிக்கே பூத்தது
அன்று முதல் சங்கம் கூட ஆதி
அலை கடலில் எழுந்தது
பரங்கியனை பார்த்த மீசை கூறாய்
பாட்டில்தான் கிழித்தது
பாரதப்போர் பெருங்காவியம் அவனால்
பாஞ்சாலியாய் சபதம் ஏற்றது
விடுதலைக்கோர் வேங்கையென வேட்டை
விடிவதற்க்காய் பாய்ந்தது
வெள்ளையனை ஓடிப்போ வெற்றி கவி
விரட்டி விரட்டி அடித்தது
கவிதை எழுதி காசு பேயை அன்று
கடுமையாக அழித்தது
காசுகூட கவிதை எழுத இன்று
கண்டபடி காமத்தில் குளித்தது
எத்தனை குயில்கள் உன்பாட்டை இன்றும்
இளங்காலையிலே படிக்குது
இப்போது கூட புதுகவிதை உன்னால்
ஏராளமாய் வடிக்குது
பசி கொடுமை பொறுக்காமல் பாரதி  நீ
பார் முழுதும்  அழிக்க சொன்னாய்
பரிதவிக்கும் தமிழனுக்கும் பிறர்க்கும் நீ
பாதையை  காட்டி சென்றாய்
பங்காளி முறைகளையும் பார்த்து நீ
பாசமாக நடக்க சொன்னாய்
புது ஆத்தி சூடி புனைந்து நீ
புகழ் பண்பை காட்டினாய்
பாப்பா பாட்டில் நான் கூட பழக  நீ
பக்குவ விளையாட்டை சொன்னாய்
இருபத்தியோராம் நூற்றாண்டு உன்னை எமக்கு
இவ்வாறு புகழ்ந்திருக்க
இருபதாம் நூற்றாண்டு என்றும் எமக்கு
பாவமாய் இருந்திடுமே
முண்டாசு கவிஞன் நீ முத்தமிழின் விளக்கு நீ
முடிவில்லை உனக்குத்தான்
மூர்த்தி கவிஞனாய் மீண்டும் வா

கருத்துகள் இல்லை: