பக்கங்கள்

வியாழன், 2 டிசம்பர், 2010

காதலி கனவை விட நீ பொய்யடி

இரட்டை  செம்பருத்தி ,பெண்ணே!
எனக்கும் உனக்குமாக பூக்கிறது .

இரவின் நட்சத்திரம், பெண்ணே!
எனக்கும் உனக்குமாக பிறக்கிறது.

நேற்றுதான் அமாவசை என்றாலும் நிலவு
நிகழ்த்தி விடுகிறது பௌர்ணமியை இன்று .

நடுக்கடல் அலையாய் பெண்ணே அது
நமக்காக கரைகளில் மோதாமல் இருக்கிறது.

குளிர் கூட தென்றலுடன் கோபித்து
கோடையின் நெருப்போடு குலாவி கொண்டிருகிறது
!
இப்படிதான் இன்றைய நாளில்
எனக்கும் உனக்கும் திருமணம் நடைபெறுகிறது!


நம் காதல் உன்னால் தோற்று போனால் கூட
என் கனவில் இதோடு எத்தனையோ முறையாய் ?

ஆனால்
உன்னை விட என் கனவு உண்மையடி

நாம் பிரிந்தாலும் நம் காதலை அது பிரிக்கவில்லையடி

நான் எனக்காக கல்லறை கட்டும்போது கூட
என் கனவை நினைத்து
உனக்காக திருமண மண்டபம் கட்டி கொள்கிறேன்

அங்குதான் உனக்கும் எனக்கும் திருமணம் நடக்குமென்று

இந்த கவிதை பத்திரிக்கை கிடைக்கும்போது
கவனமாக கனவின் விலாசம் தேடி வந்து விடு

கருத்துகள் இல்லை: