பக்கங்கள்

சனி, 25 டிசம்பர், 2010

கவிதை எழுத தெரியாத அப்போது?

புழுதி பொட்டலில் புது ஏரிக்கரையில்

அம்மாவிடம் கோபித்து அரவணைத்து கிடந்தேன்

தண்ணீர் அலைகள் தத்துவங்கள் பேசியிருக்கும்

நட்சத்திரம் முகம் பார்க்க நாங்கள் உயர்ந்தொமென்று

மலைபாம்பு சரசரத்து மனக்காம்பில் ஏறிக்கொள்ள என்

கோபமெல்லாம் குலை குலைத்து குறைக்கா நாயாய் கடித்துகொள்ள

இருந்தாலும் இறந்திடலாம் எனக்கங்கு இருட்டில்தான்

குளிர்வந்து கட்டிக்கொள்ள என் கூட்டிபிடிக்கும் முட்டியென்று

தவளைகள் இறக்கும்போது அதன் கர்ப்ப முட்டையும் கத்திகொள்ள

மீன் பிய்த்த ஒரு காலில் மெல்ல கவிச்சை அடித்து கொள்ள  

எரி நட்சத்திரம் கீழ்விழ என் எச்சிலை துப்புவதற்கு

வறண்ட தொண்டை வயிற்று நெருப்பில் கனைத்துகொள்ள

பனிரெண்டு மணி பார்க்க கைகடிகாரத்தில்

சலங்கை கட்டி பேய் வரும் காத்திருந்தேன்

சற்று தொலைவுக்கு வீரனார் விரட்டியிருப்பார் நினைத்துகொண்டேன்

மோகினியோ பாலகன் என்னை தவிர்த்திருக்கும்

முற்றும் துறந்த முனிவனாய் பயத்தின் தவத்தில்

கூட்ட நரிகள் சலசலத்து ஊளையிட

என் அன்னை விளக்குமாற்றால் எனை அடிக்க

காலையிலே கண்விழித்து எழுந்துவிட்டேன்

காலம் தான் மாறி போனாலும் , கரைந்து விட்ட

கரையினிலே தனித்து இருக்கேன்

கவிதையென இப்போதுதான்  கிறுக்கி இருக்கேன்

அக்கவிதை விரைவினிலே வெளியிடுவேன்

கருத்துகள் இல்லை: