பக்கங்கள்

திங்கள், 13 டிசம்பர், 2010

வருத்தமில்லை புரிந்து கொள் !

கெஞ்சுவது எமக்கில்லை
அஞ்சுவது தற்காப்பில்
மிஞ்சுவது பயத்தினால்
வஞ்சித்தது கீதத்தை

அரசியலின் தலைகளெல்லாம்
ஆடுது தஞ்சை பொம்மையாய்
புரியவில்லை காற்றின் திசையோ
பூக்குமே தமிழ் கீதமாய்

அகண்டவன் கண்ணிற்கு
இருண்டதெல்லாம் பெரும் பேயாய்
பிரிட்டனிலே பயந்ததெல்லாம்
பிடித்து விட்ட இலங்கை இரண்டு

அறிந்து  நீ தைரியமாய் இதை
அடங்கி சொன்னாய் சிங்களத்தில்
ஆணையில்லை எமக்கு தெரியும்
அறிவிலிகள் தெரிந்து கொள்ளும்

காற்று கூட உன்னை மிரட்டி
கடும் மூச்சில் எச்சரித்து நாம்
விடும் கீதம் தெளியவைத்து
விடுதலையை உரைத்திருக்கும்

நெடுநாளின் வேதனைகள்
நெல்லுகிரைத்த புல் நீராய்
ஊறி போன எம் இரத்தம்
உண்மை உதிர்த்தது பெருமையே

எத்துனை உயிர்கள் பலியிட்டோம்
ஈழ கடவுளுக்கு எங்கள் மனிதத்தை
அத்துணை வேண்டுதலும் பொய்யில்லை
ஆழ நடுகல்லின் அருந்தவத்தில்

யாழ் நூலகத்தின் ஒரு பக்கம்
எரியும் போது சொல்லி வைத்த
ஊழ்  உனக்கு புரியவில்லை
உருத்தி வந்தது கண்ணகியாய்

கீதம் எமக்கு இயற்ற தெரியும்
கீழ் வழிகள் எமக்கு வேண்டா
வாதம் உன்னுடன் எமக்கில்லை
வாழ்க்கை சிறக்கும் ஈழத்திலே

கருத்துகள் இல்லை: