பக்கங்கள்

திங்கள், 1 நவம்பர், 2010

எங்கள் ஊர் கீதம்


புது ஏரி தென்பக்கம் 
புற்று குளம் நடுப்பக்கம் 
செங்காலோ வடபக்கம் 
சிற்றேரியும் அதன் பக்கம்  
சுண்டுக்குழி கீழ்பக்கம் 
சொல்லாமல் விட்டேன் மேலைபக்கம் 
பெரிய ஏரிதான் இதன் பக்கம் 
தண்ணீர்குள்ளே தனியூராய் 
தற்பெருமையால் சொல்லுகின்றேன் 
பாளையத்தில் இது சுற்றும் 
பார்க்க பார்க்கதான் கண் திகட்டும்

வானம் பார்த்த பூமிஎன்றாலும் 
வருடத்துகொருமுறை நடவு நடும்
பெரியவர்கள் செய்து வைத்த
பெருமை மிகு பூமியிது ...

ஏரிக்கரையில் மீன் பிடியை
எங்களுக்கு சொல்லித்தந்த 
கடலல்லவா கற்பனையின் 
கடவுள் செய்து வைத்த காட்சியல்லவா ! !

மாரியம்மன் கோயில் பக்கம் 
மறைந்தாடி விளையாடிய நாட்கள் 
மறக்காமல் இருக்க திருவிழா எடுத்து 
மழை பெய்யவும் வேண்டிகொள்வோம் 

சாதிகளும் இங்குண்டு அதனால் 
சண்டைகளும் பலவுண்டு 
ஆனாலும் அமைதியுண்டு 
அதன் பெயர்தான் சமத்துவமென்று

மதுரையின் மண்கொண்டு 
மற பூமி இதை கண்டு 
பாட்டன் செஞ்ச சரித்திரமாய் 
பாருக்குள்ளே நல்ல ஊராய் 
நரசிங்கம் பாளையமென்று  
நாங்கள்தான் அழைத்திடுவோம்

கரைமேல் அழகன் சக்தியுண்டு 
கருணை அவனால் படைப்பதுண்டு
வீரனார் ஒருவர் காத்தல் உண்டு 
வீட்டுக்கு ஆண்மகனெல்லாம் வீரனென்று
பேணும் பூமியிது பெருமை பெருமை 
பிழை செய்தால் இது அழித்திடுமே 

வெளியூர் காரர்கள் விலாசம் கேட்டு 
விரைந்திடும் ஊர்தான் சுற்றுலாவென்று 
புழுதி கொல்லையில் அவர் கூடி 
புகழை சொல்லுவார் இது உண்மையென்று 

விவசாய விளைச்சல்கள் விண்ணை முட்டும் 
வியர்வை பலருக்கு மழையாய் கொட்டும் 
ஆடு மாடுகள் தமிழ் பேசும் 
அம்மாவென்றே அது மெச்சும் 
பால் கொடுத்துதான் பாசம் காட்டும்
பழக பழக அது புளிக்காதென்றே 

சாராயம் சுத்தமாய் இங்கில்லை 
சச்சரவு அதனால் காவல் இல்லை 
ஓர் தாயம் ஆடிடும் கூட்டமுண்டு 
உறங்குகின்ற தூங்குமூஞ்சி நிழலுண்டு 

காட்டமணக்கு  இங்கு காடாய் உண்டு 
கருவேலமரம்தான் அதன் அரசனென்று 
ஆல மரம் தான் இங்கு விழுந்திட்டதால் 
ஆழமாய் வேறாய் பலவுண்டு 

சுத்தமான காற்றுண்டு
சுதந்திரமான பறவையுண்டு 
தாமரை பூதான் தேசியமாய் 
தவறாமல் பூத்திடும் நாட்களுண்டு 

கோழி கூவிடும் ஓசையுண்டு 
குயில் பேசிடும் இசையுண்டு 
கும்மியடிதிடும் பொங்கலுண்டு 
குமரிபெண்கள் அங்கு வருவதுண்டு  

கணக்கன் குழியில் என் கல்லறையில் 
கவிஞன் என்று நான் எழுத 
கருதரிதிட்ட என் அன்னையே உன் 
காலடியில் இதை சமர்பிக்கின்றேன் 

தமிழ் வழியில் என் கல்வியை 
தந்திட்ட என் தந்தையே உன் 
தங்க கைகளுக்கு கடிகாரமாய் 
தவறாமல் நான் காலம் கடப்பேன்  
உன் பெயர் சொல்லுவேன் 

தம்பி என்றொரு  துணையுண்டு - நான் 
தடுமாறும் போதுதான் என் எதிரி கண்டு 
இளித்தால் ஒழிப்பான் இவனென்று 
இளையவன் அல்ல மூத்த கொடி கண்டு 

தங்கையென்று பூதான் தினம் பூப்பதுண்டு
தரணியெங்கும் அவள் மணம்தான் வீசுவதுண்டு 
குணங்களில் அவள்தான் கொடையென்று
கொடுப்பாள் என்றும் அன்பாய் அண்ணனென்று   

உறவுகள் இது போல் பலவுண்டு 
உரக்க சொல்லுவேன் இன்னொன்று 
சென்னை செல்லும் பொது என் மண் கொண்டு 
சிறு திருநீறாய் நான் பூசுவதுண்டு 
மதங்கள் கடந்துதான் என் மனம் கண்டு
மகிழ்ச்சியாய் சிந்திப்பீர் ஒரு குலமென்று 
வாழ்க வாழ்க வாழ்கவே 
வளமான என் மண்  வாழ்கவே  

கருத்துகள் இல்லை: