பக்கங்கள்

வியாழன், 25 நவம்பர், 2010

பள்ளித்தோழி

எச்சில் பண்ணி நீ கொடுத்த
இனிப்பு இன்னும் தித்திக்குதடி
எங்கிருந்தாலும் நீதான் நினைப்பாய்
எத்தனை காலமும் அது கரையாதுடி

குரங்கு மூஞ்சை அழகாய் காட்டி நீ
கோலம் போட்டாயடி முகத்தில்,
எந்தன் முகமோ உந்தன் கண்ணின்
கண்ணாடியில் இப்படியா மாறுமடி

பாவாடை சட்டை போட்டு வந்த நீ
பறிக்கா முல்லையடி நான்
பழிச்சா போதும் என்னை சுற்றும்
கொடி பாம்பின் தொல்லையடி நீ

ஆணும் பெண்ணும் பேதமில்லா நித்தம்
அன்பில் மிதந்தோம்மடி ஆற்று நீரில்
நீந்தி நாமும் சின்ன மீன் பிடித்தோமடி
செத்த மீனை பாடை கட்டி எரிச்சு வைசோம்மடி

சிலந்தி வலையில் சிக்கிகொண்ட உன்
காலுக்கு செய்து போட்டேனடி
சின்ன சின்ன பூக்கள் கோர்த்த
சிறப்பு கொலுசு அது தானடி

நாயுருவி வித்தை காட்டி யுத்தம்
செய்தால் இரத்தம் கொட்டுமடி
என் நெற்றியில் வைக்கும் வீர பொட்டாய்
உன் விரலோ சுட்டுமடி  என்னை

என்  மனைவிக்கும்  உனக்கும்
பிறந்த குழந்தைகள் இப்போ
கணினியில் ஆடுதடி அதில்
கணினி வென்றால் என்
கன்னத்தில் அது கை வைத்து
கலங்கி போகுதடி

நம் நட்பு தோற்றகதையை
சொல்லி இப்படி சிரிக்க வைசேன்டி
இந்த காலம் தோற்று
நம் குழந்தையோடு நம்மை
மீண்டும் விளையாட வைக்குமாடி

கருத்துகள் இல்லை: