பக்கங்கள்

செவ்வாய், 16 நவம்பர், 2010

அடைமழை நேரத்தில் அணைக்க

வறண்டு போன உங்கள் அணைகளுக்கெல்லாம்
வாய்கால் வைத்து நிரப்பிகொள்ளுங்கள்

நினைக்க மறந்த கேரளமே
மறக்க நினைக்கும் கன்னடமே
மறந்த நினைக்க ஆந்திரமே
                                                      (வறண்டு )


ஏராளமாய் இங்கு மழைகளுண்டு
இப்போது எங்கள் தமிழகத்தில் பெய்வதுண்டு
மழை நீரை நாங்கள் சேமிப்பதுண்டு
மறந்து போன உங்களுக்கும் சொல்வதுண்டு
                                                         (வறண்டு )

தவிச்ச வாய்க்கு தண்ணீரும்
பசிச்ச வயத்துக்கு கொஞ்ச சோறும்
கொடுக்கும் கொடைதான் தமிழ் மண்ணு
குழையும் சேறில்தான் நிமிர்ந்து நின்னு
                                                          (வறண்டு )
மழையும் எம் மனமும் ஒன்றென்றால்
பிழையும் அணைகளும் நீயென்றால்
உழைக்கும் வர்க்கம்தான் உயரணுமென்றால்
பிழையை உணர்வாய் பிற மாநிலமே

                                                               (வறண்டு )

கருத்துகள் இல்லை: