பக்கங்கள்

திங்கள், 1 நவம்பர், 2010

நினைவு நாள்

நினைவு என்னை நிறுத்தியது - என்
நிந்தனை அதற்க்கு வலித்ததாம்
காதலா நீதான் காதலியிடம்
காதலுக்கென்றே தோற்றுப்போனதால்
அவளோடு பழகிய அரும் நினைவை - உன்னை
அழிக்கின்ற போல்லல்லவா செய்கின்றேனென்று

ஆமாம் நினைவே அரும் நினைவே
அதற்கு உனக்கு அழிவு வேண்டும்

நினைவு என் பிடரியில் தட்டியது
நிமிர்த்தி என்னை பிடித்தது

தாய்தான் உன்னை ஈன்றெடுத்தாள்
தவறாமல் உன் மேல் அன்பு வைத்தால்

பிறந்த குழந்தை முதல் இருபது வயதுவரை - அவள்
பேணி  வளர்த்தது மறந்திடுமா
அ ....முதல் .'. வரை போதித்த
ஆசிரியர் வழியில் தமிழ் மொழியை
நீதான் மறந்தா புலம்புகிறாய்
நினைவில் நானிருக்க தமிழ் மொழியில்
நேசித்த அன்னையும் நிறைய போதித்த மொழியும் மறந்திடுமா ?

இலங்கை மண்ணில் என் இனம்தான்
இறந்து விழுந்த ஒரு வருடம் ஆகியும்
முள் வேலியின் எல்லைக்குள்ளே
மூச்சு அடைக்கும் நினைவுகளை
இருந்தால் என்ன? இறந்தால் என்ன ?
என்ன சொல்வாய் என் நினைவே ?

கண்கள் எனக்கு கலங்குகிறது
கவலை எனக்கும் பிடிக்கிறது
மறதி நண்பனை மண்டியிட்டு
மனிதனுக்கு வேண்டுமென கும்பிட்டு
உனது நினைவு நான் உண்மை சொல்வேன்
உரிய காலம்தான் வந்திட்டது !

பகையை நினைத்திட்ட சிங்களவனுக்கு
பழைய புராணம் மகாவம்சதினால்
சிங்கத்தோடு கூடிய சிறுமதியை
சிரிப்புக்குள்ளான  கொடும் பிறவியை

நெருப்போடு  கூடத்தான் செய்திடுவேன் - அவர்
நினைவினில் நானிருந்து செய்திடுவேன்
சிங்கள பிள்ளைகலென்றே சாம்பலெல்லாம்
சீரழியும் புழுதியில் மிதக்கின்றதே

மங்களம் கொண்டு நான் மறதியின்றி
மனித நேயத்தில் உலகுதனை
செஞ்சிலுவை சங்கத்திலும் ஐ .நா விலும்
சிந்திக்க மறந்திட்ட வல்லரசுவினிலும்
பழியினை கொடுத்த பல பதர்களுக்கும்
படிப்பினை கொடுப்பேன் புரிந்து கொள்

இறந்து போனவள் உன் வீர காதலிதான்
இருகின்ற நினைவினில் அவளை சுமந்து
மறதியின்றியே மறு படியும்
மண்ணில் முத்தமிடு
அவள் கிடந்த , நடந்த, அழிந்த , மக்கிய
மண்ணில் முத்தமிடு
விடுதலை மண்ணில் முத்தமிடு
ஈழ மண்ணில் முத்தமிடு

கருத்துகள் இல்லை: