பக்கங்கள்

திங்கள், 8 நவம்பர், 2010

நெரிசல் கோ ய ம் பே டு

விரைவு பேருந்தில் நான் ஏறி, தீபாவளிக்கு
விடியுமுன்னே ஊருக்கு  செல்ல
பயணசீட்டை நான் கேட்டால்
பதறி நான் போனேன்                  


போன முறை வந்ததற்கும்
போக்குவரத்து வீழ்ச்சிக்கும்
என்னுடைய காசில்தான்
இறுதி யாத்திரை தொடங்கனுமாம்

இருபது ரூபாய் அதிகமாய்
இருட்டான என் பையில்
கொடுத்து நான் வாங்கியமர்ந்தேன்
கோயம்பேடு பேருந்து நிலையத்தில்

கொசுகடியின் போராட்டத்தில்
கொடுமைகளை அனுபவித்தால்
தேக்கமான பேருந்துகள்
திசைக்கொன்றாய் மாறி நின்று

போக்குவரத்து விதிகள்தான்
புரியாமல் குழம்பி நிற்க
சாலையினை கண்காணிக்கும்
சாப்பாட்டுக்கு எங்கோ சென்று

தூங்கிபோகும்  காவலர்கள்
துணியை மறக்கும் அவர் கனவுகள்
என்னை வந்து எட்டி பார்க்கும்
இன்னொரு நினைவும் நெட்டி முறிக்கும்

இரவில் நடக்கும் போக்குவரத்தை
இயந்திரத்திடமாவது கொடுத்து வைத்தால்
பச்சை விளக்கு பக்குவமாய்
பயணத்திற்காக எரிய வைக்கும்

சிவப்பு விளக்கு சிக்கலினை
சீரழிந்து கிடக்கும் போக்குவரத்தை
மஞ்சள் நிறத்தை மங்கலமாய் என்
மனம் போல கொடுத்து வைக்கும்

பலமணி நேரம் காத்திருந்து
பரிதவிக்கும் சக்கரங்கள்
என் மூச்சுபோல் இறங்கியிருந்து
இன்னொரு பேருந்தில் ஏறிக்கொள்ளும்

படியில் நான் தொங்கி
பாவமாக தூங்கி
வழியில் நான் வீழ்வதில்லை
வாழ்கையிலும் தோற்பதில்லை

போக்குவரத்து தடங்கல்களை
போக்குகின்ற வழி செய்தால்
நின்று கொண்டிருக்கும் வியாபாரம்
நிமிர்த்தி வைக்கும் போக்குவரத்து துறையை

தூங்குகின்ற துறைதான்
தூண்டுகின்ற இச்செய்தியால்
பல முறைதான் சென்று வரும்
பாதையாக மாறிபோகும்

நடத்துனரும் ஓட்டுனரும்
நம்மை போன்ற மனிதர்களே
அவரை கேட்டை திட்டம் சொல்வார்
அதற்காகவாவது  தலையசைக்குமா

கருத்துகள் இல்லை: