பக்கங்கள்

திங்கள், 8 நவம்பர், 2010

படலும், விதையும்

ஆடு மாடு மேயுமேன்று
அறிவுகெட்ட பச்சை ராசு
முள் வேலி படலிட்டு
முழு மூச்சாய் காவலிருந்து
தானியங்கள் காத்து வந்தான்
தக்க சமயம் பாத்து வந்தான்

குயிலொன்று தனியாயிருந்து
கூவுகின்ற இசையில் நொந்து
சுதந்திரம் கெட்டதென
சோகமாய் கவி படிக்க
தானியத்தை தின்பதற்கு
தவிட்டுக்குருவி  கூட்டத்தோடு
குயிலும் தான் கூடுதான்
கொடுமை கொடுமை கொன்றுவிட்டான்
குருவிகளை கொலை செய்தான்

காக்கை இதை கானதிருக்க
கருப்பு துணியால் அதன் தோலை செய்து
குறுக்கு புத்தியால்
கொடியாய் கட்டினான்
இயற்கையை செயற்கையாக
இறைவனுக்கே செய்து காட்டினான்


முற்றிய கதிர்கள் முழுசாய் தலைசாய்ந்து
முள்வேலின் எல்லைக்குள்ளே
தமிழ் மகள் நாணம் போலே
தற்பெருமை காய்ந்த சருகாய்
அறுவடை காலமென்று
ஆசையாக காத்திருந்ததாம்

பச்சை ராசு பருவம் உணர்ந்து
பழைய அரிவாள் கொண்டு வந்து
சனி மூளை சில தானியகதிரை
சரித்திரமாய் அறுத்து வைத்தான்
கீழ் மெனைகள் சில பிடித்து
கிடத்தினான் கதிர் அறுத்து

செத்து விழுந்த செங்கதிர்கள்
சிவந்திருந்த மண்ணில் வீழ்ந்து
கட்டுகட்டாய் சவமென்றாலும்
களத்துமேட்டுக்கு கொண்டு சென்றான்
காற்று உள்ளபோதே தூற்றனும் என்று
கற்றறிந்த  பழமொழி உணர்ந்து
பதர்களை தூற்றினான்
பார்த்திடுங்கள் என் தமிழ் மக்களே

விதையும் வைக்கோலும்
வேறாய் ஆக்கி மூட்டையாய் கட்டி
முள் வேலி விட்டு முதுகில் சுமந்து
முந்தி வந்தான் பச்சை ராசு
இத்துணை நாளும் முள்வேலி நினைத்தது
எங்கள் தமிழினம் நசுங்கட்டுமென்று
விதைகள் தான் வெளியில் செல்லும்
விதிதான் வேறொரு மண்ணில் முளைத்து
மனிதநேய பஞ்சம் போக்க
மண்ணெங்கும் வளருது பாரு

தமிழகம் கூட முள்வேலிதான்
தமிழன் நானும் உணர்ந்தால் கூட
காலம் எனக்கு கதிராய் மாறும்
காத்திருப்பேன் விதையாக மாற
சிறுகள்ளிகள் என் பாதையோரம்
செந்தமிழும் சிறையின் தூரம்
வாகை பூதான் என் வருகைக்காக
வளைத்து போட்ட வேலியில் உயர்ந்து
முள் வேலியை வேடிக்கை பார்க்குது
முளைக்கும் ஈழத்தை தன்னில் தெளியுது

கருத்துகள் இல்லை: