பக்கங்கள்

திங்கள், 22 நவம்பர், 2010

கார்த்திகை தீபமவள்

கார்த்திகை தீபமன்று
கன்னி நீ கட்டி கொண்டாய்
தாவணி பாவடையை
தமிழனின் மரபென்று

அங்கு நான் வந்திருந்தேன்
அரைக்கால் சட்டையுடன்
என்னை நீ பார்த்திருந்தாய்
எண்ணெய் நீ ஊற்றுகின்றாய்

அகல் விளக்கு திரிகளெல்லாம்
அழகாய் தான் எரியவைத்தாய்
இன்னும் ஒரு விளக்கு குறைய
என்னிடம் கேட்கின்றாய்

கண்கள் தான் சத்தமிட
கன்னங்கள் சிவந்து விட
உதடு மட்டும் உயிரெடுத்து
உண்மையாக மௌனிக்க

பின்னிருந்து அழைப்பதெல்லாம்
பெரியண்ணன் எனத்தெரிந்து
அகல் விளக்கு எடுத்துவர
அகலுகின்றாய் அங்கிருந்து

இதய விளக்கு என்னோடு
எரியாத புதிரோடு
புரியாத கோலமென்று
போய்வருவேன் என்று சொன்னேன்

வேட்டி கட்டி சட்டை மாட்டி
வேகமாக உன் வேட்டை காண
நான் வந்த நேரத்தில் அகல் விளக்கு
நன்றாய்த்தான் எரியுது பின்னே

நீ ஏற்றி வைத்த அகல் விளக்கு
நிக்காமல் எரிய கண்டு எனக்கு
புகை போகும் காது வழியில்
புரியாது கனவின் விழியில்

இங்கு நீ எப்போது வருவாய்
என் வீட்டில் காத்து கிடக்க
கனவு வீடு இருண்டு கிடக்கும்
கன்னி கார்த்திகைக்கும் காத்து கிடக்கும் !

கருத்துகள் இல்லை: